கேள்வி பதில்

கேள்வி பதில்

கேள்வி-1 : பெண் ஜனாஸாவை அப்பெண்ணின் மஹ்ரமான ஆண்தான் அடக்கம் செய்ய வேண்டுமா? அல்லது மற்ற ஆண்கள் அடக்கம் செய்யலாமா? ஜனாஸாவை அடக்கம் செய்யும்போது எங்கள் பகுதியில் பாங்கு சொல்கிறார்கள். இது கூடுமா?

கேள்வி-2:  உளூ செய்த பின்பு மேலாடை அணியாமல் இருதோள்பட்டைகள்  திறந்த வண்ணம் உட்கார்ந்து குர்ஆன் ஓதவும் திக்ரு செய்யவும் நேரிடுகிறது. இது கூடுமா? இத்தருணத்தில் தொலைக்காட்சியில் செய்திகள், விவசாய நிகழ்சிகள், வானிலை செய்திகள், இஸ்லாமிய நிகழ்சிகள் உள்ளிட்டவற்றை பார்ப்பது உளூவிற்கு ஊறு விளைவிக்குமா? – அ. காஜா நிஜாமுதீன், ஏர்வாடி.

கேள்வி-3: நான் பணிபுரியும் நகைக் கடையில் TEMPLE JEWELLERY எனப்படும் ‘சிலைகள்’ வடித்த சில ஆபரணங்களும் உள்ளன.  அதனை முடிந்த வரை ‘நான்’ விற்பனை செய்வதை தவிர்த்து வருகிறேன். ஆனால் சில நேரங்களில் மாற்று  மத சக ஊழியர்கள் இல்லாத போது, வாடிக்கையாளர்கள் அவற்றைக் கேட்டால் அவற்றை விற்பனை செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. இதுபோன்ற நிலையில் என்ன செய்வது? – மாசுக் ஹனிபா, தி.நகர், சென்னை – 17.

கேள்வி-4: தெரிந்தவர், தெரியாதவர் என எல்லோருக்கும் சலாம் சொல்ல வேண்டும். இந்த அடிப்படையில் இளம் பெண்களுக்கு அந்நிய ஆண் சலாம் சொல்லலாமா? அவ்வாறு சொல்லும் போது வெட்கத்தின் காரணமாக அப்பெண் பதில் சலாம் சொல்லாமல் சென்றால் சலாம் சொன்னவருக்கு சலாம் சொன்னதற்கான நன்மை கிடைக்குமா?

கேள்வி-5: இஸ்லாத்தில் மன்னராட்சி முறை தடை செய்யப்பட்டதா? நபி(ஸல்) அவர்கள் ஆட்சித் தலைவராகத் தானே இருந்தார்கள்?

கேள்வி-6: ஆடு மாடுகளின் (மலம், ஜலம்) கழிவுகள் அசுத்தமானதா?

கேள்வி-7: சூனியத்தை நம்புவது இணைவைப்பா? – நுஃமான், பேர்ணாம்பட்டு.