கேள்வி-1

கேள்வி-1 :பெண் ஜனாஸாவை அப்பெண்ணின் மஹ்ரமான ஆண்தான் அடக்கம் செய்ய வேண்டுமா? அல்லது மற்ற ஆண்கள் அடக்கம் செய்யலாமா? ஜனாஸாவை அடக்கம் செய்யும்போது எங்கள் பகுதியில் பாங்கு சொல்கிறார்கள். இது கூடுமா?

பெண் மய்யித்தை அதன் மஹ்ரமான ஆண் உறவினர் அடக்கம் செய்வதே முறையானது. நபி(ஸல்) அவர்களின் துணைவியார் சைனப் (ரலி) அவர்கள் மரணித்தபோது, அவர்களை கப்ரில்  வைத்து யார் அடக்கம் செய்ய வேண்டும் என்று கேட்டு வரும்படி நபியின் மனைவியரிடம் உமர்(ரலி) ஆளனுப்பினார்கள். அதற்க்கு அவர்கள், “யார் அவர்களை அவர்களின் வாழ்நாளில் பார்க்கக் கூடியவராக இருந்தாரோ அவரே அடக்கம் செய்ய வேண்டும்.” என்று பதில் அனுப்பினார்கள். அப்போது, அவர்கள் சொல்வது உண்மைதான் என உமர்(ரலி) அவர்கள் கூறினார்கள். (நூல்: பைஹகீ 7199)

மகரம் இல்லாவிட்டாலோ அல்லது மகரம் இருந்தாலும் அவர் அடக்கம் செய்யும் நிலையில் இல்லாவிட்டாலோ மற்ற ஆண்கள் அடக்கம் செய்யலாம். நபி(ஸல்) அவர்களின் ஒரு மகளை அடக்கம் செய்யும் போது நபி(ஸல்) அவர்கள், இன்று இரவு தாம்பத்திய உறவு கொள்ளாதவர் யார் என்று கேட்டார்கள். அப்போது அபூதல்ஹா (ரலி) அவர்கள் நான் என்று கூறினார்கள். அவர்களிடம் நபியவர்கள் நீர் இறங்குவீராக என்றார்கள். அப்போது அபூதல்ஹா (ரலி) கப்ரில் இறங்கினார்கள். (புகாரி 1285)

மய்யித்தை அடக்கம் செய்யும்போது கப்ரு குழியிலோ அல்லது கப்ருக்கு வெளியிலோ பாங்கு சொல்வது மார்க்கத்தில் இல்லாத செயல். ஒழித்தே ஆக வேண்டிய மோசமான பித்அத்.

அடுத்த கேள்வி (கேள்வி-2) >>