கேள்வி-4

கேள்வி-4: தெரிந்தவர், தெரியாதவர் என எல்லோருக்கும் சலாம் சொல்ல வேண்டும். இந்த அடிப்படையில் இளம் பெண்களுக்கு அந்நிய ஆண் சலாம் சொல்லலாமா? அவ்வாறு சொல்லும் போது வெட்கத்தின் காரணமாக அப்பெண் பதில் சலாம் சொல்லாமல் சென்றால் சலாம் சொன்னவருக்கு சலாம் சொன்னதற்கான நன்மை கிடைக்குமா?

பொதுவாக அன்னியப் பெண்களுக்கு சலாம் கூறுவது ஆகுமானது. இதற்கு ஆதாரமான நபிமொழி : அஸ்மா பின்த் யசீத் (ரலி) அவர்கள் கூறினார்கள்: “பெண்கள் கூட்டமாக இருந்த எங்களை நபி(ஸல்) அவர்கள் கடந்து சென்ற போது எங்களுக்கு சலாம் கூறினார்கள்.” (அபூதாவூத் 5206, இப்னு மாஜா 3701)

இதன்படி அன்னியப் பெண்களுக்கு சலாம் சொல்வது ஆகுமானது என்று தெரிகிறது. இதில் இளம் பெண்களும் அடங்குவார்கள். ஆனாலும் அன்னியப் பெண்களுக்கு சலாம் சொல்வது தீய எண்ணத்திற்கும் தீமைக்கும் வழியாக அமையுமென்றால் அவர்களுக்கு சலாம் சொல்வதை தவிர்க்க வேண்டும்.

ஸலாம் சொல்லப்பட்டவர் ஆணாயினும் பெண்ணாயினும் பதில் சொல்லாவிட்டாலும் ஸலாம் சொன்னவருக்கு அவருக்குரிய நன்மை கிடைத்துவிடும்.

<<முந்தய கேள்வி (கேள்வி-3) | அடுத்த கேள்வி (கேள்வி-5)>>