கேள்வி-6

கேள்வி-6: ஆடு மாடுகளின் (மலம், ஜலம்) கழிவுகள் அசுத்தமானதா?

பதில்: சாப்பிடப்படும் பிராணிகளின் கழிவுகள் அசுத்தமானதல்ல, சேறு, சகதி, வீணாகிப் போன உணவுப் பொருட்கள் போன்று அருவருப்பானது.

நபி(ஸல்) அவர்களிடத்தில் ஆட்டுத் தொழுவங்களில் தொழுவது குறித்துக் கேட்டபோது, அவற்றில் தொழுது கொள்ளுங்கள் என்று கூறினார்கள். அதே நேரத்தில் ஒட்டகத் தொழுவங்களில் தொழுவது குறித்து கேட்கப்பட்ட போது அவற்றில் தொழ வேண்டாம் என்று கூறிய நபி(ஸல்) அவர்கள் ஒட்டகங்கள் ஷைத்தான்களைச் சார்ந்தவை என்று கூறினார்கள். (அதவாது மிரளுதல், விரண்டு ஓடுதல் மூலம் மனிதர்களுக்கு அதிகம் இடையூறு கொடுப்பவை என்பது கருத்து).

நூல்: அபூதாவூத் 184, 493, திர்மதி 348.

இங்கு நபி(ஸல்) அவர்கள் ஆட்டுத் தொழுவத்தில் தொழுவதற்கு அனுமதி கொடுத்துள்ளார்கள். அத்துடன் ஒட்டகத் தொழுவத்தில் தொழ வேண்டாமென்று கூறியதற்கு அசுத்தத்தை காரணமாக சொல்லவில்லை. அல்லாஹ் நன்கறிந்தவன்.

<<முந்தய கேள்வி (கேள்வி-5)| அடுத்த கேள்வி (கேள்வி-7)>>