தற்காலத்தில் தமிழ்நாட்டில் சிலர் மார்க்கப் பணிக்கு ஊதியம் பெறக்கூடாது என்ற கருத்தை முன்வைக்கத் துவங்கியிருப்பதோடு ஊதியம் பெறுவோரைக் கடும் வார்த்தைகளாலும் விமர்சிக்கிறார்கள். நாமறிந்தவரை இந்தச் சகோதரர்களின் நோக்கம் நல்லதாகவே இருந்தாலும் இவர்களது கருத்தை மார்க்க ஆதாரங்களின் பார்வையில் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியுள்ளது.
மார்க்கக் கல்வியைக் கற்ப்பிக்க ஊதியம் பெறக்கூடாது என்று முற்கால ஹனஃபி அறிஞர்களும் வேறு சிலரும் கூறுகின்றனர். அவர்கள், குர்ஆனைக் கற்பிக்கக் கூலி பெறுவதைத் தடுக்கும் சில ஆதாரங்களை முன்வைக்கின்றனர்.
ஊதியம் பெறுவது ஆகுமானது என்ற கருத்துடைய ஹதீஸ் விளக்கவுரை நூல்களிலேயே ஆகுமானதல்ல என்போரின் கூற்றுகளும் பதிவாகியுள்ளன.
Read More →நாள் காலையில் ஆரம்பிக்கிறதா? மாலையில் ஆரம்பிக்கிறதா? என்ற சர்ச்சையை சமீபத்தில் சிலர் கிளப்பியிருக்கிறார்கள். அதைப் பற்றி தெளிவாக பார்ப்போம்.
நாள் கலையில் ஆரம்பிக்கிறதா? மாலையில் ஆரம்பிக்கிறதா?
வாழ்க்கைத் தேவைகளை நிறைவு செய்வதற்காக நாம் வேலையை துவக்குவது காலை என்பதன் அடிப்படையில் காலை நாளின் துவக்கமாகச் சொல்லப்படுவது உண்மை.
Read More →பரக்கத்தை இழந்த ரஹ்மத்...!
அல்லாஹுவின் தூதர் (ஸல்) அவர்களின் பொன்மொழித் தொகுப்புகள் தமிழில் வெளிவராதது தமிழ் மக்களுக்கு - குறிப்பாக தமிழ் முஸ்லிம்களுக்கு ஒரு பெரும் குறையாக இருந்து வந்தது.
அல்லாஹுவின் கிருபையால் முஸ்தஃபா தமீம் ஆகிய இரு சகோதரர்கள் நிறுவிய ரஹ்மத் அறக்கட்டளை மூலம், ஹதீஸ் நூல்களில் முதன்மையான புகாரி, முஸ்லிம் ஆகிய நூல்கள் தமிழில் வெளிவந்தன.
Read More →அருளாளனும் அன்பாளனுமாகிய இறைவனின் திருபெயரால்..
பிற மத சகோதரர்களுக்கு இஸ்லாத்தை அறிமுகப்படுத்தி எழுதுவதற்கான மாதிரி கடிதம்.
இறையருள் நிறைக!
நாம் மத நம்பிக்கை உடையவர்கள். நம்முடைய நம்பிக்கைகளில் பல வற்றிலே ஒற்றுமை இருப்பதை காண்கிறோம்.கடவுளைப் பற்றி எல்லாம் வல்ல இறைவன் என்று நீங்கள் கூறுகின்றீர்கள்.நாங்களும் அப்படியே கூறுகின்றோம்.
எந்தக் காரியத்தையும் நிறைவேற்றித் தருவது அந்தக் கடவுளின் செயல் என்பதைக் குறிக்க "எல்லாவற்றையும் மேலே இருப்பவன் பார்த்துக் கொள்வான்" என்று நாங்கள் நம்பிக்கையுடன் சொல்கிறோம்,நீங்களும் அப்படியே சொல்கிறீர்கள்.
Read More →இந்து மதத்தில் இருந்து வெளியேறி கிறிஸ்துவம் போன்ற வற்றில் இனைந்து பின் மீண்டும் இந்து மதத்துக்கு திரும்புவதை தாய் மதம் திரும்புதல் என்று குறிப்பிடுகின்றனர்.அத்தையவர்களை இந்து மதத்துக்கு அழைப்பதை தாய் மதம் திரும்புவதற்கான அழைப்பு என்று கூறுகின்றனர் . அது போல் ஹிந்துத்துவ வாதிகள் முஸ்லிம்கள் மீது தாக்குதல் தொடுப்பதற்கு காரணமாக அவர்கள் தாய் மதமான இந்து மதத்தை விட்டு விட்டு அண்ணிய மதத்தில் இறுப்பதுதான் என்ற கருத்தும் பரவலாக கூறப்படுகிறது.
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்பாளனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ….
அல்லாஹ்வின் பெரும் கிருபையால் அறிவியலின் மிகப் பெரிய முன்னேற்றத்தினால் நமது வாழ்க்கையை எளிதாக்கும் பல சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டு நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். இத்தகைய சாதனங்களில் குறிப்பிடத்தக்கவை தொலை தொடர்பு சாதனங்களாகும். அதிலும் குறிப்பாக நம் வொவ்வொருவர் கைகளிலும் தவழும் செல்போன்.
பொதுவாக நமது வாழ்க்கைக்கு பயனளிக்கும் எல்லா சாதனங்களும் அல்லாஹ்வின் அருட்கொடைதான். அவற்றை அனுபவிப்பதற்காக அவனுக்கு நன்றி செலுத்த வேண்டும். அத்துடன் அவற்றை அவன் வகுத்த வரைமுறையுடன் பயன்படுத்த வேண்டும்.
Read More →