புறக்கணிக்கப்படும் நபியின் வழிமுறைகள் -  தாடியை வளர்ப்பதும் மீசையைக் கத்தரித்தலும்!
புறக்கணிக்கப்படும் நபியின் வழிமுறைகள் - தாடியை வளர்ப்பதும் மீசையைக் கத்தரித்தலும்!

புறக்கணிக்கப்படும் நபியின் வழிமுறைகள் -

தாடியை வளர்ப்பதும் மீசையைக் கத்தரித்தலும்!

  -அபூ தல்ஹா முஹம்மது மஷாரிக்


ஒரு முஸ்லிமான ஆண் பேண வேண்டிய ஒழுங்குகளில் ஒன்றாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த ஒன்று தான் தாடியை வளர்ப்பதும், மீசையைக் கத்தரிப்பதும் ஆகும். தாடியை வளர்க்க வேண்டும், அதை ஒன்றுமில்லாமல் மழித்து விடக்கூடாது என்பதில் பேணுதலாக இருக்கும் பல இஸ்லாமியர்கள், அதே நிலையில் நபியவர்களால் எத்திவைக்கப்பட்ட, மீசையைக் கத்தரிக்கும் பண்பில் ஆகப் புறக்கணிப்பு செய்பவர்களாகவே அதிகம் உள்ளார்கள். எந்தச் செய்தியை நாம் வலியுறுத்தப்பட்ட சுன்னாஹ் என்று, தாடி வைக்காதவர்களைப் பார்த்து எடுத்துரைக்கிறோமோ, அதே செய்தியில் அதே வலியுறுத்தப்பட்ட சுன்னாஹ்வாகத்தான் மீசையைக் கத்தரித்தலும் இடம்பெறுகிறது.

Read More →
பிக்ஹுன் னவாஸில்= பிரச்சினையான சந்தர்ப்பத்தில் மார்க்கச் சட்டம்
பிக்ஹுன் னவாஸில்= பிரச்சினையான சந்தர்ப்பத்தில் மார்க்கச் சட்டம்

பிக்ஹுன் னவாஸில்= பிரச்சினையான சந்தர்ப்பத்தில் மார்க்கச் சட்டம்

-S.H.M. இஸ்மாயில் ஸலபி 

--------------------------------------------


மார்க்கச் சட்டங்களை இயற்றும் போது சில வேளை சந்தர்ப்ப சூழ்நிலைகளைக் கருத்திற் கொண்டு சில முடிவுகள் செய்யப்படலாம். அந்த முடிவுகள் வேறு சூழல்களுக்குப் பொருந்தாமல் கூட இருக்கலாம். இது போன்ற சந்தர்ப்பங்களில் ஃபத்வா கொடுத்தவர் பற்றி எப்படி நடுநிலையாகப் புரிந்து கொள்வது என்ற விளக்கம் அவசியமாகும்.


உதாரணமாக, முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் ஒரு நாட்டில் இனக் கலவர சூழல் இருக்கின்றது என்று வைத்துக் கொள்ளுங்கள்.

Read More →
துல்ஹஜ் மாதம் பிறை 11,12,13. உழ்ஹிய்யா கொடுக்கலாமா?
துல்ஹஜ் மாதம் பிறை 11,12,13. உழ்ஹிய்யா கொடுக்கலாமா?

துல்ஹஜ் மாதம் பிறை 11,12,13. உழ்ஹிய்யா கொடுக்கலாமா?

Read More →
ரமலானும் ஈமானும்!
ரமலானும் ஈமானும்!

ரமலான் ஈமானுக்கு புத்துயிர் ஊட்டும் வசந்தகாலம். மரணித்த உள்ளங்கள்  பெறுவதற்கும், அல்லாஹ்வை மறந்தவர்கள் அவனை நினைவு கூருவதற்கும் , பாவிகள் பாவமன்னிப்புக் கோருவதற்கும், முஃமின்கள் அனைவரும் கருணையாளனின் வாசலில் நின்று: “!எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் – நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகிவிடுவோம் விடுவோம்.” அல்குர்ஆன் 7:23 என்று பிரார்திப்பதற்கும் உரிய காலம். மனிதன் எப்போதும் ஒரே நிலையில் சீராக இருப்பதில்லை. அவனது வாழ்வில் ஏற்றத்தாழ்வுகள் வருவது .வாடிக்கை. சில நேரம் மகிழ்ச்சியாக இருப்பவர்கள் வேறு சந்தர்ப்பங்களில் சோகமாகக் காட்சியளிப்பார்கள். சிலபோது இதற்க்கு மாற்றமாகவும். இன்னும் சிலபேர் வசதியாக இருந்து ஏழ்மை நிலைக்கு வந்துவிடுவார்கள்.

Read More →
கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-5
கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-5

 கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-5

ஹவாலா

ஹவாலா எனும் வார்த்தைக்கு திருப்புதல் என்பது பொருள்ஒருவர் தான் வாங்கியக் கடனை இன்னொருவரிடம் பெற்றுக்கொள்ளுமாறு பொறுப்பை திருப்பி விடுவதற்கு மார்க்கத்தில் இவ்வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.

யாரிடம் அந்த பொறுப்பு புதிதாக ஒப்படைக்கப்பட்டிருக்கிறதோ அவர் அப்பொறுப்பை ஏற்கிற அளவிற்கு வசதி படைத்தவராக இருக்க வேண்டும்.

Read More →
கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-4
கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-4

சாட்சி

எந்த ஒரு முக்கிய காரியத்திற்கும் சாட்சியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்குறிப்பாக கொடுக்கல் வாங்கலுக்கு இது மிக அவசியம்இந்த அடிப்படையில் கடன் கொடுக்கல் வாங்கலின் போதும் சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

இது பற்றி உங்கள் ஆண்களில் இருவரை சாட்சிகளாக்கிக் கொள்ளுங்கள்ஆண்கள் இருவர் கிடைக்காவிட்டால் சாட்சிகளில் நீங்கள் பொருந்தக் கூடியவர்களில் ஆடவர் ஒருவரையும் பெண்கள் இருவரையும் சாட்சிகளாக எடுத்துக் கொள்ளுங்கள்.” அல்குர்ஆன் 2:282

Read More →
கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-3
கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-3

தவணை

கடன் கொடுக்கல் வாங்கலில் தேவையென்று கருதினால் தவணை குறிப்பிட்டுக் கொள்ளலாம்.

கொடுக்கல் வாங்கல் முறை பற்றிப் பேசும் திருக்குர்ஆனின் 2:282 வசனத்தில் துவக்கத்திலேயேகுறிப்பிட்ட தவணையின் மீது உங்களுக்குள் கடன் கொடுக்கல் வாங்கல் செய்துகொண்டால்... என்று அல்லாஹ் கூறுகிறான்.

இந்த வசனத்தின் பிறப்பகுதியிலும் சிறிதோ பெரிதோ அதை அதன் கால வரையறையுடன் எழுதுவதில் அலட்சியமாக இருக்காதீர்கள் என்றும் கூறுகிறான்.

Read More →
கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-2
கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-2

எழுதி வைத்தல்

அல்லாஹ் கூறுகிறான்:

நம்பிக்கைக் கொண்டோரேஒரு குறிப்பிட்ட தவணையின் மீது உங்களுக்குள் கடன் கொடுக்கல் வாங்கல்செய்து கொண்டால் அதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.”  அல்குர்ஆன் 2:282

கடன் கொடுக்கல் வாங்கல் தொடர்பான பல சட்டங்களையும் முறைகளையும் விளக்கும் இந்த வசனத்தில் அதை எழுதி வைத்துக் கொள்வதை ஒரு முதன்மையான சட்டமாக அல்லாஹு குறிப்பிடுகிறான்.

Read More →