உங்கள் கேள்விகளை ( ? ) இங்கே கேட்கலாம்.

கேள்வி - பதில்

கேள்வி-1 : பெண் ஜனாஸாவை அப்பெண்ணின் மஹ்ரமான ஆண்தான் அடக்கம் செய்ய வேண்டுமா? அல்லது மற்ற ஆண்கள் அடக்கம் செய்யலாமா? ஜனாஸாவை அடக்கம் செய்யும்போது எங்கள் பகுதியில் பாங்கு சொல்கிறார்கள். இது கூடுமா?

பெண் மய்யித்தை அதன் மஹ்ரமான ஆண் உறவினர் அடக்கம் செய்வதே முறையானது. நபி(ஸல்) அவர்களின் துணைவியார் சைனப் (ரலி) அவர்கள் மரணித்தபோது, அவர்களை கப்ரில் வைத்து யார் அடக்கம் செய்ய வேண்டும் என்று கேட்டு வரும்படி நபியின் மனைவியரிடம் உமர்(ரலி) ஆளனுப்பினார்கள். அதற்க்கு அவர்கள், “யார் அவர்களை அவர்களின் வாழ்நாளில் பார்க்கக் கூடியவராக இருந்தாரோ அவரே அடக்கம் செய்ய வேண்டும்.” என்று பதில் அனுப்பினார்கள். அப்போது, அவர்கள் சொல்வது உண்மைதான் என உமர்(ரலி) அவர்கள் கூறினார்கள். (நூல்: பைஹகீ 7199)  மேலும் படிக்க...

சூரா ஸாது மற்றும் சூரா ஹஜ்ஜிலே சிலர் இதற்கு சஜ்தா செய்ய வேண்டாம் என கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் குர்ஆனில் شجدة என்று போடப்பட்டுள்ளது இப்படி கேள்வி கேட்கப்பட்டது?  மேலும் படிக்க...

இது போன்ற பெண்களை மணம் முடிப்பது சுன்னத்தும் அல்ல மார்க்கத்தில் வலியுறுத்தப்படவும் அல்ல. இது அவரவருடைய விருப்பம், விரும்பி திருமணம் செய்து கொண்டாள் அனுமதி உண்டு. திருமணமாகாத கன்னிப் பெண்ணை திருமணம் செய்துகொண்டாலும் அனுமதியே  மேலும் படிக்க...

அல்லாஹ் குர்ஆனில் உமக்கு நாம் செய்திருக்கக்கூடிய அருட்கொடைகளை நீ பேசு (93:11) என்று குறிப்பிடுகிறான்.அந்த அடிப்படையில் நமக்கு ஏற்பட்ட நன்மையை பிறரிடத்தில் பேசலாம் அனுமதி இருக்கிறது.  மேலும் படிக்க...

நடைமுறையில் மனிதர்கள் பள்ளிவாயலில் அவரவர் ஏற்படுத்திய முறைப்படி திக்ஃரு செய்கிறார்கள் தலையை வலப்புறம் இடப்புறம் ஆட்டியபடி, பல பேர் கூடி கைகளைக் கோர்த்துக்கொண்டு மேலும்கீழும் ஆட்டியும் புதிய வார்த்தைகளை உருவாக்கி  மேலும் படிக்க...

பொதுவாக குளிப்பு கடமையில் இருபாலர்களுக்கும் தலைமுடி முழுவதுமாக நனைதல் வேண்டும் மேலும் பெண்களுக்கு சில சலுகைகள் உள்ளது அவற்றில் அவர்கள் இறுக்கமான சடை பின்னி இருந்தாள் அவர்கள் மூன்று முறை தலை மேல் தண்ணீரை  மேலும் படிக்க...

அல்குர்ஆனில் அல்லாஹ் குறிப்பிடுகிறான் சூரா நிஷாவில் பெண்களில் உங்களுக்கு விருப்பமானவர்களை இரண்டிரண்டாக மும்மூன்றாக நான்நான்காக திருமணம் செய்து கொள்ளுங்கள் நீங்கள் நீதமாக நடக்க முடியாது என்று அஞ்சினால் ஒரு பெண்  மேலும் படிக்க...

இறைமறுப்பாளர்கள் இறை நம்பிக்கை உள்ளவர்களுக்கு கொடுத்த தொல்லைகள், இடையூறுகள் எல்லாம் இக்காலகட்டத்தில் ஏற்படுவதில்லை என்று நாம் நினைத்து பார்க்கவேண்டும்.  மேலும் படிக்க...

இஸ்லாத்தில் கொரோனா வைரஸ்க்கு மருந்து எதுவும் குறிப்பிடவில்லை ஆனால் நபி அவர்கள் வாழ்ந்த காலத்தில் அவருக்கும், அவரை சுற்றி இருப்பவர்களுக்கும் ஏதேனும் நோய் ஏற்பட்டால் அதற்கு அக்காலத்தின் சூழ்நிலைக்கு ஏற்ப அவர் சில மருந்துகளை அறிவுறுத்தியுள்ளார்.  மேலும் படிக்க...

பூமி சூரியனை சுற்றி வருவது அல் குர்ஆனுக்கு மாற்றமானதா என்று கேட்கப்பட்டுள்ளது. இப்படி சொல்லுவது குர்ஆனுக்கு மாற்றமான கருத்து இல்லை, இக்கருத்து குர்ஆனுக்கு உட்பட்டுள்ள கருத்துதான்.  மேலும் படிக்க...

குழந்தை வேண்டாம் என்று ஆப்ரேஷன் செய்து மேலும் குழந்தையையே பெற முடியாது என்ற நிலையை ஏற்படுத்திக் கொள்வது மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட ஒன்றாகும்.  மேலும் படிக்க...