கேள்வி:

கேள்வி-8: கொரோனா வைரஸ் பரிசோதனை நோன்பை முறிக்குமா?

Answer by admin On April 30, 2020

பதில்:

கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டுபிடிக்க செய்யப்படும் பரிசோதனையின் மூலம் நோன்பு முறியாது. ஏனெனில் இப்பரிசோதனையின் போது மூக்கு மற்றும் வாயின் துவாரங்கள் மூலம் உள்ளே எதுவும் செல்வதில்லை .தொண்டையில் அல்லது மூக்கின் உட்பகுதியில் ஆரம்பப் பகுதியிலேயே இப்பரிசோதனை நடத்தப்படுகிறது. என்றாலும் ஏதாவது சொட்டு மருந்துகள்(Drops) வாயினூடாக அல்லது மூக்கினூடாக உட்செலுத்தப்படுமென்றால் .அதன் மூலம் நோன்பு முறியும். அவர்கள் அந்த நோன்பை வேறொரு நாளில் கழா செய்தல் வேண்டும்.

-ALL CEYLON JAMIYYATHUL ULAMA (ACJU)

உங்கள் கேள்விகளை ( ? ) இங்கே கேட்க்கலாம்.