இமாம் ஷாபிஈ (ரஹ்)
இமாம் ஷாபிஈ (ரஹ்)

இமாம் ஷாபிஈ (ரஹ்)

-அப்துர்ரஹ்மான் மன்பஈ

சத்திய இஸ்லாத்தின் மார்க்க கல்விக்கு சேவையாற்றிய வழிகாட்டிகளில் முதன்மையானவர்களில் ஒருவர் இமாம் ஷாஃபிஈ (ரஹ்அவர்கள்.

இமாம் ஷாஃபிஈ அவர்களின் முழு பெயர் முஹம்மது பின் இத்ரீஸ் ஷாபிஈ அல் குரஷி என்பதாகும்.குறைஷிக் குலத்தைச் சேர்ந்தவர்இமாமவர்களின் வம்சாவழி தொடரும் நபிகள் நாயகம்(ஸல்அவர்களின் வம்சாவளி தொடரும் நபியவர்களின் நான்காம் தலைமுறை பாட்டனாரான அப்து மனாஃப் என்பவருடன் சந்திக்கின்றது.

பிறப்பும் சிறுபிராயமும்:

Read More →
இமாம் மாலிக்(ரஹ்)_மகத்தான வழிகாட்டிகள்-2

மகத்தான வழிகாட்டிகள்-2

 

இமாம் மாலிக்(ரஹ்)

                நமது முஸ்லிம் உம்மத்தில் தோன்றிய மாபெரும் மார்க்க அறிஞர்களில் முக்கியமானவர் இமாம் மாலிக் பின் அனஸ் (ரஹ்அவர்கள்நான்கு பெரும் இமாம்களில் காலவரிசைப்படி இரண்டாமவர்அன்னார் மதீனா நகரில் ஹிஜ்ரி 93 ஆம் வருடத்தில் பிறந்தார்கள்.

Read More →
குற்றம் செய்வோரை வெறுத்து ஒதுக்குவோம்

குற்றம் செய்வோரை  வெறுத்து  ஒதுக்குவோம் !


தவறு செய்யும் மனிதர்களை திருத்துவதற்காகவும் அவர்கள் தமது தவறுகளை உணர்வதற்காகவும் அவர்களை புறக்கணிப்பதும் வெறுத்து ஒதுக்குவதும் ஒரு நல்ல வழிமுறையாகும்இதற்கு மார்க்க வழிகாட்டல் உள்ளது.

     நபி (ஸல்அவர்கள்தகுந்த காரணமின்றி தபூக் யுத்தத்தில் கலந்து கொள்ளாத மூன்று நபித்தோழர்களுடன் உறவாடுவதை குறிப்பிட்ட காலத்திற்கு தவிர்த்தார்கள் என்ற செய்தி ஹதீஸ் நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.


Read More →
நல்லோரும் செய்யும் தவறுகள்-5 ( பெண்ணுக்கு சொத்தில் பங்கில்லையா?)

நல்லவர்கள் தான்! என்றாலும், அறியாமையினால் சில தவறுகளை செய்கிறார்கள். அப்படிப்பட்ட தவறுகளை இந்த தொடரில் பார்த்து வருகிறோம்.

                இம்மாத தொடரில் பெண் பிள்ளைகளுக்கு வாரிசு சொத்தில் உரிமை மறுக்கப்படும் தவறை குறித்து பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்!

                பெண் பிள்ளைகளுக்கு பெற்றோரின் சொத்தில் உரிமையே இல்லை என்று பொத்தாம் பொதுவாக மறுக்கக் கூடியவர்கள் பெரும் பாவிகள், அநியாயக்காரர்கள், இவர்கள் நல்லவர்களில் சேரமாட்டார்கள்.

                நாம் இங்கு குறிப்பிடுவது மார்க்கத்தின் கடமைகளையும் சட்டதிட்டங்களையும் பேணி நடக்கும் சிலர், தமது தவறான புரிதலால் சில காரணங்களைக் கூறி தம் சகோதரிகளுக்கு தமது குடும்ப சொத்தில் பங்கு கொடுக்காமல் இருந்து விடுகிறார்கள்.

                அல்லாஹ்வின் வேதத்தில் கூறப்படும் சட்டத்தின்படி பெற்றோர் விட்டுச் சென்ற சொத்தில் ஆண் பிள்ளைகளுக்கு கொடுக்கப்படுவதில் பாதி பெண் பிள்ளைகளுக்கு கொடுக்கப்பட வேண்டும்.

Read More →
அரபியில்தான்  குத்பாவா?
அரபியில்தான் குத்பாவா?

அரபியில்தான்

குத்பாவா?

                வெள்ளிக்கிழமை ஜுமுஆ கடமையில் முக்கிய அம்சமாக குத்பா எனும் பிரசங்கமும் உள்ளது. தொழுகைக்கு முன்னர் நிகழ்த்தப்படும் இந்த குத்பா மக்களுக்கு மார்க்க வழிகாட்டுதலை எடுத்துச் சொல்வதற்கு முக்கிய வழியாக இருக்கிறது.

                நபி(ஸல்) அவர்கள் நிகழ்த்திய குத்பா பற்றி கூறப்படுவதாவது : நபி (ஸல்) அவர்கள் (ஜுமுஆவின்போது) குர¢ஆன் (வசனங்களை) ஓதி, மக்களுக்கு நினைவூட்டி இரு (குத்பா) உரைகள் நிகழ்த்துவார்கள். அவ்விரு உரைகளுக்கிடையே அமர்வார்கள்.

(முஸ்லிம் 1564 )

                நபியவர்கள் குத்பாவில் குர¢ஆன் வசனங்களை சொல்லிக் காட்டியிருக்கிறார்கள், மார்க்க விசயங்களை நினைவூட்டியிருக்கிறார்கள். மக்களுக்கு குர¢ஆனின் செய்தியை புரிய வைப்பதற்கும் அவர்களுக்கு மார்க்க விஷயங்களை நினைவூட்டுவதற்கும் அவர்களுக்குப் புரியும் மொழியிலேயே குத்பாவில் பேச வேண்டும். இதன்படி நமது இந்தியாவிலும் உலகின் பல பாகங்களிலும் அந்தந்தப் பகுதி மக்களின் மொழி யிலேயே குத்பா எனும் பிரசங்கம் நடைபெறுகிறது. 

Read More →
இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்)
இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்)

சத்திய இஸ்லாத்துக்காக சேவை ஆற்றிய மகத்தான இமாம்களில் குறிப்பிடத்தக்கவர் இமாம் அபூஹனீஃபா(ரஹ்) அவர்கள். அன்னாரின் இயற்பெயர் அந்நுஃமான் பின் சாபித் என்பதாகும். ஈராக்கில் உள்ள பிரபலமான கூஃபா நகரத்தில் ஹிஜ்ரீ 80ம் ஆண்டு பிறந்தார்கள்.

                இமாம் அவர்கள் தமது சிறுவயதில் அனஸ் பின் மாலிக்(ரலி) அவர்கள் உள்ளிட்ட ஒரு சில நபித்தோழர்களை சந்தித்துள்ளார்கள் என்று கூறப்படுகிறது. அன்னார்தான் நான்கு பெரும் இமாம்களில் மூத்தவர்.

                இமாம் அவர்கள் தமது இளவயதில் இஸ்லாமிய கல்விகளில் மார்க்க நம்பிக்கை தொடர்பான கல்வியை கற்பதில் ஈடுபட்டார்கள். பின்னர் மார்க்க சட்டம் தொடர்பான (ஃபிக்ஹ்)கல்வியில் ஈடுபாடு ஏற்பட்டு அக்காலத்தில் சிறந்த மார்க்க சட்ட அறிஞராக இருந்த ஹம்மாத் பின் அபீ சுலைமான் அவர்களிடம் மாணவராக சேர்ந்து கல்வி கற்றார்.

                ஹம்மாத் பின் அபீ சுலைமான் அவர்களிடம் இமாம் அவர்கள் ஏறத்தாழ இருபது ஆண்டுகள் கல்வி பயின்று உள்ளார்கள். இடையில் பிற மார்க்க சட்ட அறிஞர்களிடமும், ஹதீஸ்கலை அறிஞர்களிடமும் சென்று மார்க்க கல்வியை கற்று வருவார்கள்.அவர்கள் காலத்தில் வாழ்ந்த தாபியீன்களைச் தேடிச் சென்று சந்தித்து கல்வி பெற்றுள்ளார்கள்.

Read More →
கேம் விபரீதங்கள்
கேம் விபரீதங்கள்

கேம் விபரீதங்கள்

                அறிவியல் முன்னேற்றத்தினால் நமக்கு கிடைத்திருக்கும் சாதனங்களால் அதிகமான பலன்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். இதற்காக நாம் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்த வேண்டும்.

     அதே நேரத்தில் இவற்றை முறையில்லாமல் பயன்படுத்துவதால் பலரும் தங்களின் இம்மை மறுமை வாழ்வுக்கு கெடுதலை ஏற்படுத்திக் கொள்ளும் நிலையில் இருக்கிறார்கள். அல்லாஹ் காப்பாற்ற வேண்டும்.


Read More →
நல்லோரும் செய்யும் தவறுகள் - 4(பிள்ளைகளுக்கு நேரம் ஒதுக்காத பெற்றோர்)

நல்லவர்கள்தான். ஆனாலும் தவறு செய்கிறார்கள். தாம் செய்யும் தவறையும் உணர்வதில்லை. இவ்வாறான தவறுகள் குறித்து இந்தத் தொடரில் பார்த்து வருகிறோம்.

      இம்மாதத் தொடரில் சில நல்லவர்கள் தமது பிள்ளைகளுக்காக நேரம் ஒதுக்காமலிருக்கும் தவறு குறித்து பார்ப்போம்.

                அல்லாஹ் குர்ஆனில், முஃமின்களே! உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்; அதன் எரிபொருள் மனிதர்களும், கல்லுமேயாகும்; அதில் கடுமையான பலசாலிகளான மலக்குகள் (காவல்) இருக்கின்றனர்; அல்லாஹ் அவர்களை ஏவிய எதிலும் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள்; தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்து வருவார்கள். (அல்குர்ஆன் 66:6) என்று கூறுகிறான்.

Read More →