பிக்ஹுன் னவாஸில்= பிரச்சினையான சந்தர்ப்பத்தில் மார்க்கச் சட்டம்
-S.H.M. இஸ்மாயில் ஸலபி
--------------------------------------------
மார்க்கச் சட்டங்களை இயற்றும் போது சில வேளை சந்தர்ப்ப சூழ்நிலைகளைக் கருத்திற் கொண்டு சில முடிவுகள் செய்யப்படலாம். அந்த முடிவுகள் வேறு சூழல்களுக்குப் பொருந்தாமல் கூட இருக்கலாம். இது போன்ற சந்தர்ப்பங்களில் ஃபத்வா கொடுத்தவர் பற்றி எப்படி நடுநிலையாகப் புரிந்து கொள்வது என்ற விளக்கம் அவசியமாகும்.
உதாரணமாக, முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் ஒரு நாட்டில் இனக் கலவர சூழல் இருக்கின்றது என்று வைத்துக் கொள்ளுங்கள்.
Read More →நற்குணமும் நபியும்
- அஷ்ஷேக் முஹம்மது சுபைர். முஹம்மதி.,பிர்தௌஸி.
நீங்கள் வந்து விடுங்கள்.. 100 ஒட்டகங்களை தருவேன்...
மக்கா வெற்றி என்பது அரபிகள் யாரும் எதிர்பாராத நிகழ்ச்சியாகும். அதற்குப்பின் பலர் இஸ்லாத்தை ஏற்றனர். கர்வமும், முரட்டு குணமும், கொண்ட சில சமூகத்தவர்கள் அடிபணிய மறுத்தனர்.
அவற்றுள் முன்னிலை வகுத்தவர்கள் ஹவாஸின், ஸகீஃப் கோத்திரத்தினர். இவர்களுடன் கைஸ், அய்லான் கோத்திரத்தைச் சார்ந்த நஸ்ர், ஜுஷம், ஸஅது இப்னு பக்ர் ஆகிய குடும்பத்தினரும், ஹிலால் குடும்பத்தைச் சேர்ந்த சிலரும் சேர்ந்து கொண்டனர்.
வெற்றியை ஏற்கமுடியாத அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு எதிராக போரிட முடிவு செய்தார்கள்.
Read More →அறபா நோன்பு எந்த நாளில் பிடிக்க வேண்டும்...?
அறபா பேருரை
-மௌலவி யூனுஸ் தப்ரீஸ்
"உபதேசம் செய்யுங்கள் அது முஃமின்களுக்கு பயன் தரும்" என்ற அல்லாஹ்வின் உபதேசத்தை முன் நிறுத்தி இந்த கட்டுரையை உங்கள் சிந்தனைக்கு முன் வைக்கிறேன். அறபா பேருரை என்பது உலகம் அழிகின்ற வரை அனைத்து மக்களுக்கும் ஓர் உபதேசமாகவும், வாழ்க்கையில் நடைமுறைப் படுத்த அழகிய வழி காட்டியாகவும் அமைந்துள்ளது. இதை வாசிக்க கூடிய அனைவரும் இதில் சொல்லக் கூடிய நபியவர்களின் உபதேசத்தை உள்ளத்தில் பதித்து, வாழ்க்கையில் நடைமுறைப் படுத்த பழகிக் கொள்ளுங்கள்....
Read More →உஸ்மான் (ரழி) கொலையும் கொள்கைக் குழப்பவாதிகளின் நிலையும்
××××××××××××××××××××
- S.H.M இஸ்மாயில் ஸலபி
துல்ஹஜ் மாதத்தில்தான் மூன்றாம் கலீபா உத்தமர் உஸ்மான்(ரழி) அவர்கள் அநியாயமாகக் கொலை செய்யப்பட்டார்கள். அவர்களது கொலை இஸ்லாமிய உலகில் தொடரான பித்னாக்களையும் உள் முரண்பாடு களையும் கொள்கைக் குழப்பங்களையும் உருவாக்கியது.
ஆனால், உஸ்மான்(ரழி) அவர்கள் மக்கள் நலனில் அதிக அக்கறை கொண்ட அற்புதமான ஒரு தலைவராவார். ஒவ்வொரு தலைவரும்...
Read More →ஹஜ் உம்றா தொடர்பான சந்தேகங்கள்
– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி)
பயண அறிவிப்பு
கேள்வி:- ஹஜ்-உம்றாச் செய்யும் ஒருவர் தனது பயணம் குறித்துப் பிறருக்கு அறிவிக்கலாமா?
பதில்:-
“அல்லாஹ்வுக்காக ஹஜ்ஜையும், உம்றாவையும் நிறைவு செய்யுங்கள்.” (2:196)
மேற்படி வசனத்தில் ஹஜ்ஜையும், உம்றாவையும் அல்லாஹ்வுக்காகச் செய்யுமாறு அல்லாஹ் ஏவுகிறான். ஹஜ்-உம்றாச் செய்வோர் பேருக்காகவோ, புகழுக்காகவோ அல்லது எல்லோரும் செய்கின்றார்கள் என்பதற்காகவோ செய்யக் கூடாது...
Read More →நற்குணமும் நபியும்
வழிகாட்டும் வாழ்வியல்
தொடர்:01
உங்களைப் போன்ற ஒரு ஆளுமையை அல்லாஹ் வீணாக்க மாட்டான்...
வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத அழகிய பண்புகளையும் சிறந்த குணங்களையும் கொண்டவர், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். மக்களின் இதயங்களின் ஆழத்தில் நபிகளாரின் கண்ணியம் வேரூன்றி இருந்தது.இறைத்தூதர் ஆவதற்கு முன்னரே அவர்களது வாழ்க்கை தூய்மையானதாகவும் நேர்மையானதாகவும் இருந்தது. இளமைப் பருவத்திலேயே...
Read More →ஆய்வுகள் |
கொடிய மிருகங்களாக மாறிவிட்ட மதவெறியர்கள்
எம். அப்துர் ரஹ்மான் மன்பஈ
கடந்த மார்ச் மாத பிற்பகுதியில் ராம நவமி கொண்டாட்டம் என்ற பெயரில் இந்துத்துவ பயங்கரவாதிகள் நாட்டின் பல பகுதிகளில் கலவரம் செய்துள்ள செய்தி வீடியோ மற்றும் போட்டோவுடன் பரவியதை பார்த்தோம்.
பல இடங்களில் முஸ்லிம்களின் கடைகள், வீடுகளில் கொள்ளையடிப்பது, உடமைகளை சேதப்படுத்துவது, பள்ளிவாசல்களின் மேலே ஏறியும் கூடிநின்றும் கூச்சல் குழப்பம் செய்வது,
Read More →