கேள்வி-1 : பெண் ஜனாஸாவை அப்பெண்ணின் மஹ்ரமான ஆண்தான் அடக்கம் செய்ய வேண்டுமா? அல்லது மற்ற ஆண்கள் அடக்கம் செய்யலாமா? ஜனாஸாவை அடக்கம் செய்யும்போது எங்கள் பகுதியில் பாங்கு சொல்கிறார்கள். இது கூடுமா?
பெண் மய்யித்தை அதன் மஹ்ரமான ஆண் உறவினர் அடக்கம் செய்வதே முறையானது. நபி(ஸல்) அவர்களின் துணைவியார் சைனப் (ரலி) அவர்கள் மரணித்தபோது, அவர்களை கப்ரில் வைத்து யார் அடக்கம் செய்ய வேண்டும் என்று கேட்டு வரும்படி நபியின் மனைவியரிடம் உமர்(ரலி) ஆளனுப்பினார்கள். அதற்க்கு அவர்கள், “யார் அவர்களை அவர்களின் வாழ்நாளில் பார்க்கக் கூடியவராக இருந்தாரோ அவரே அடக்கம் செய்ய வேண்டும்.” என்று பதில் அனுப்பினார்கள். அப்போது, அவர்கள் சொல்வது உண்மைதான் என உமர்(ரலி) அவர்கள் கூறினார்கள். (நூல்: பைஹகீ 7199) மேலும் படிக்க...
கேள்வி-2: உளூ செய்த பின்பு மேலாடை அணியாமல் இருதோள்பட்டைகள் திறந்த வண்ணம் உட்கார்ந்து குர்ஆன் ஓதவும் திக்ரு செய்யவும் நேரிடுகிறது. இது கூடுமா? இத்தருணத்தில் தொலைக்காட்சியில் செய்திகள், விவசாய நிகழ்சிகள், வானிலை செய்திகள், இஸ்லாமிய நிகழ்சிகள் உள்ளிட்டவற்றை பார்ப்பது உளூவிற்கு ஊறு விளைவிக்குமா? – அ. காஜா நிஜாமுதீன், ஏர்வாடி.
குர்ஆன் ஓதுவதற்கும் திக்ரு செய்வதற்கும் தோள்புஜத்தை மறைத்திருக்க வேண்டுமென்று மார்க்கத்தில் சொல்லப்படவில்லை. தொழும்போது இரு தோள்புஜங்களையும் மறைத்திருக்க வேண்டுமென ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது. “தன்னிரு தோள்புஜங்கள் மீது எதுவும் இல்லாத நிலையில் உங்களில் ஒருவர் தோழா வேண்டாம்.” என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (புகாரி 359) மேலும் படிக்க...
கேள்வி-3: நான் பணிபுரியும் நகைக் கடையில் TEMPLE JEWELLERY எனப்படும் ‘சிலைகள்’ வடித்த சில ஆபரணங்களும் உள்ளன. அதனை முடிந்த வரை ‘நான்’ விற்பனை செய்வதை தவிர்த்து வருகிறேன். ஆனால் சில நேரங்களில் மாற்று மத சக ஊழியர்கள் இல்லாத போது, வாடிக்கையாளர்கள் அவற்றைக் கேட்டால் அவற்றை விற்பனை செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. இதுபோன்ற நிலையில் என்ன செய்வது? – மாசுக் ஹனிபா, தி.நகர், சென்னை – 17.
ஒரு பொருள் மார்க்கத்தில் தடை செய்யப்பட்டால் அதன் கிராமும் தடை செய்யப்பட்டதாகும். நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நிச்சயமாக அல்லாஹ் யூதர்கள் மீது கொழுப்பை தடை செய்தான். அப்போது அவர்கள் அதை விற்று அதன் கிரயத்தை சாப்பிட்டார்கள். நிச்சயமாக அல்லாஹ் ஒரு கூட்டத்தினர் மீது ஒன்றை சாப்பிடுவதை தடை செய்தால் அதன் கிரயத்தையும் தடைசெய்து விடுகிறான்.” (அபூ தாவூத் 3490) மேலும் படிக்க...
கேள்வி-4: தெரிந்தவர், தெரியாதவர் என எல்லோருக்கும் சலாம் சொல்ல வேண்டும். இந்த அடிப்படையில் இளம் பெண்களுக்கு அந்நிய ஆண் சலாம் சொல்லலாமா? அவ்வாறு சொல்லும் போது வெட்கத்தின் காரணமாக அப்பெண் பதில் சலாம் சொல்லாமல் சென்றால் சலாம் சொன்னவருக்கு சலாம் சொன்னதற்கான நன்மை கிடைக்குமா?
பொதுவாக அன்னியப் பெண்களுக்கு சலாம் கூறுவது ஆகுமானது. இதற்கு ஆதாரமான நபிமொழி : அஸ்மா பின்த் யசீத் (ரலி) அவர்கள் கூறினார்கள்: “பெண்கள் கூட்டமாக இருந்த எங்களை நபி(ஸல்) அவர்கள் கடந்து சென்ற போது எங்களுக்கு சலாம் கூறினார்கள்.” (அபூதாவூத் 5206, இப்னு மாஜா 3701) மேலும் படிக்க...
கேள்வி-5: இஸ்லாத்தில் மன்னராட்சி முறை தடை செய்யப்பட்டதா? நபி(ஸல்) அவர்கள் ஆட்சித் தலைவராகத் தானே இருந்தார்கள்?
இஸ்லாத்தில் மன்னராட்சி முறை தடை செய்யப்பட்டதல்ல, அல்லாஹ்வின் வேதத்தையும் நபியின் வழிகாட்டுதலையும் நடைமுறைப் படுத்தி ஆட்சி செய்ய வேண்டும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆட்சித் தலைவர் என்ற நிலையில் இருந்தாலும் அவர்களுக்குப் பின் ஆட்சித் தலைவர் என்ற நிலையில் ஆட்சியாளர்கள் வருவார்கள் என்பதை உணர்த்தியிருந்தாலும் மன்னராட்சி முறையையும் அங்கீகரிக்கக் கூடிய வார்த்தைகள் குர்ஆனிலும் ஹதீஸிலும் காணப்படுகின்றன. மேலும் படிக்க...
கேள்வி-6: ஆடு மாடுகளின் (மலம், ஜலம்) கழிவுகள் அசுத்தமானதா?
பதில்: சாப்பிடப்படும் பிராணிகளின் கழிவுகள் அசுத்தமானதல்ல, சேறு, சகதி, வீணாகிப் போன உணவுப் பொருட்கள் போன்று அருவருப்பானது. நபி(ஸல்) அவர்களிடத்தில் ஆட்டுத் தொழுவங்களில் தொழுவது குறித்துக் கேட்டபோது, அவற்றில் தொழுது கொள்ளுங்கள் என்று கூறினார்கள். அதே நேரத்தில் ஒட்டகத் தொழுவங்களில் தொழுவது குறித்து கேட்கப்பட்ட போது அவற்றில் தொழ வேண்டாம் என்று கூறிய நபி(ஸல்) அவர்கள் ஒட்டகங்கள் ஷைத்தான்களைச் சார்ந்தவை என்று கூறினார்கள். (அதவாது மிரளுதல், விரண்டு ஓடுதல் மூலம் மனிதர்களுக்கு அதிகம் இடையூறு கொடுப்பவை என்பது கருத்து). மேலும் படிக்க...
கேள்வி-7: சூனியத்தை நம்புவது இணைவைப்பா? – நுஃமான், பேர்ணாம்பட்டு.
பதில்: சூனியம் பற்றி குர்ஆனிலும் ஹதீஸிலும் சொல்லப்பட்டுள்ளது. அவ்விரண்டிலும் சொல்லப்பட்டுள்ளதின் படி சூனியத்தை நம்பித்தான் ஆக வேண்டும். அவ்வாறு நம்ப மறுப்பவன் குர்ஆனிலும் ஹதீஸிலும் கூறப்பட்டுள்ளதை நிராகரிப்பதால் காஃபிர் என்ற நிலைக்கு சென்று விடுவான். அல்லாஹ் காப்பாற்ற வேண்டும். சமீப காலமாக சிலர், சூனியத்தை குர்ஆனிலும் ஹதீஸிலும் உள்ளபடி நம்புபவர்களை இணைவைப்பவர்கள் என்று சொல்வதை வைத்து இந்தக் கேள்வி கேட்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் படிக்க...
கேள்வி-8: கொரோனா வைரஸ் பரிசோதனை நோன்பை முறிக்குமா?
கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டுபிடிக்க செய்யப்படும் பரிசோதனையின் மூலம் நோன்பு முறியாது. மேலும் படிக்க...
கேள்வி-9: தனிமைப் படுத்தப் பட்டவர்கள் நோன்பு நோற்க வேண்டுமா ?
கொரோனா தொற்றுக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் தனிமைப்படுத்த பட்டிருப்பவர்கள் வழமைபோன்று நோன்பு நோற்றல் வேண்டும் . மேலும் படிக்க...
கேள்வி10: கர்ப்பமுற்றிருக்கும் பெண்ணும், பாலூட்டும் பெண்ணும் ரமலானில் நோன்பு நோற்க முடியாவிட்டால் அவர்கள் என்ன செய்ய வேண்டும்?
கர்ப்பமுற்றிருக்கும் பெண்ணும், பாலூட்டும் பெண்ணும் ரமலானில் நோன்பு நோற்க முடியாவிட்டால் அவர்கள் என்ன செய்ய வேண்டும்? மேலும் படிக்க...
கேள்வி 11: ஸகாத்துல் (ஸதகத்துல்) பித்ர் பற்றி விளக்கம்?
ஸகாத்துல் (ஸதகத்துல்) பித்ர் பற்றி விளக்கம்? மேலும் படிக்க...