உங்கள் கேள்விகளை ( ? ) இங்கே கேட்கலாம்.

கேள்வி - பதில்

கேள்வி-1 : பெண் ஜனாஸாவை அப்பெண்ணின் மஹ்ரமான ஆண்தான் அடக்கம் செய்ய வேண்டுமா? அல்லது மற்ற ஆண்கள் அடக்கம் செய்யலாமா? ஜனாஸாவை அடக்கம் செய்யும்போது எங்கள் பகுதியில் பாங்கு சொல்கிறார்கள். இது கூடுமா?

பெண் மய்யித்தை அதன் மஹ்ரமான ஆண் உறவினர் அடக்கம் செய்வதே முறையானது. நபி(ஸல்) அவர்களின் துணைவியார் சைனப் (ரலி) அவர்கள் மரணித்தபோது, அவர்களை கப்ரில் வைத்து யார் அடக்கம் செய்ய வேண்டும் என்று கேட்டு வரும்படி நபியின் மனைவியரிடம் உமர்(ரலி) ஆளனுப்பினார்கள். அதற்க்கு அவர்கள், “யார் அவர்களை அவர்களின் வாழ்நாளில் பார்க்கக் கூடியவராக இருந்தாரோ அவரே அடக்கம் செய்ய வேண்டும்.” என்று பதில் அனுப்பினார்கள். அப்போது, அவர்கள் சொல்வது உண்மைதான் என உமர்(ரலி) அவர்கள் கூறினார்கள். (நூல்: பைஹகீ 7199)  மேலும் படிக்க...

ஆண்கள் ஆபரணங்கள் அணியலாம் என்று நேரடியான ஹதீஸ்களில் நாம் காண முடியவில்லை  மேலும் படிக்க...

நபி(ஸல்) அவர்கள் வெட்டுக்கிளிகளுக்கு எதிராக துஆ செய்தார்கள் என்று இப்னு மஃஜா வில் வருவதாக கூறும் ஹதீஸ் முழுவதுமாக இட்டுக்கட்டப்பட்டது.  மேலும் படிக்க...

வைரம், பிளாட்டினம் போன்ற விலை உயர்ந்த பொருட்களை வியாபாரத்திற்கு பயன்படுத்தினால்  மேலும் படிக்க...

ஷேகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா(ரஹ்) அவர்களுடைய ஃபத்வாவில் முந்தைய வேதங்களில் கருத்துக்களைப் பற்றி கூறும் பொழுது இன்ஞில் என்பது சுர்யானியா மொழியில் ஈஷா(அலைஹி) அவர்களுக்கு அருளப்பட்டதாகும்,  மேலும் படிக்க...

பெற்றோர்களுக்கு செய்ய வேண்டிய கடமை மற்றும் இன்னபிற கடமையை செய்யாமல் இதுபோன்ற விளையாட்டுகளில் மூழ்கி இருப்பது தவறாகும்.  மேலும் படிக்க...

"அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்" என்று நீண்டு தொடங்கும் தக்பீரானது நபி (ஸல்) அவர்கள் கூறியதாக (தாரகுத்னீ) என்கிற ஹதீஸில் பதிவு செய்யப்பட்டுள்ளது அது பலகீனமான ஹதீஸாக பார்க்கப்படுகிறது.  மேலும் படிக்க...

இப்னு உமர்(ரழி) அவர்கள் மக்காவில் ளுஹர் தொழுகையை தொழுதுவிட்டு சில மக்கள் தொழுவதை பார்த்து இவர்கள் என்ன தொழுகிறார்கள் என்று கேட்கப்பட்ட பொழுது அதற்கு அவர்கள் உபரியான(நஃபீல்/சுன்னத்) தொழுகை என பதில் கூறினார்கள்.  மேலும் படிக்க...

முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கற்றுத் தந்த அடிப்படையில் தனக்காக மட்டுமல்லாமல் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சேர்த்து துஆ செய்தார்கள்  மேலும் படிக்க...

ஃபர்ளான தொழுகையிலும், இரண்டு ரக்ஆத் கொண்ட ஸுன்னத் தொழுகையைலும், நான்கு ரகஅத் ஸுன்னத் தொழுகைகளிலும் முதல் இரண்டு ரக்ஆத் களில் தான் துணை ஸூரா ஓத வேண்டும்  மேலும் படிக்க...

இப்படி இவர் கேட்பதற்கு காரணம் என்னவென்றால் சமீபகாலமாக தமிழ்நாட்டை ஆட்சி புரியும் எடப்பாடியும் அவருடைய ஆட்சியையும் கண்டித்து போராட்டம் நடத்துகின்ற பெரும்பாலான சகோதரர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை தனிப்பட்ட முறையில் கண்டிக்கும் விதமாக இத்தகைய வார்த்தைகளை பயன் படுத்துகிறார்கள்.  மேலும் படிக்க...