ஆய்வுகள் | மற்றவை by அப்துர்ரஹ்மான் மன்பஈ On Nov 18, 2013 Viewers: 2503 0
இந்து மதத்தில் இருந்து வெளியேறி கிறிஸ்துவம் போன்ற வற்றில் இனைந்து பின் மீண்டும் இந்து மதத்துக்கு திரும்புவதை தாய் மதம் திரும்புதல் என்று குறிப்பிடுகின்றனர்.அத்தையவர்களை இந்து மதத்துக்கு அழைப்பதை தாய் மதம் திரும்புவதற்கான அழைப்பு என்று கூறுகின்றனர் . அது போல் ஹிந்துத்துவ வாதிகள் முஸ்லிம்கள் மீது தாக்குதல் தொடுப்பதற்கு காரணமாக அவர்கள் தாய் மதமான இந்து மதத்தை
விட்டு விட்டு அண்ணிய மதத்தில் இறுப்பதுதான் என்ற கருத்தும் பரவலாக கூறப்படுகிறது.
நாம் சிறிது ஆய்வு செய்து பார்த்தால் இந்துக்களின் தாய் மதமே இஸ்லாம் தான் என்பதை எளிதாக புரிந்து கொள்ளலாம்.அதாவது இஸ்லாம் கூறும் எல்லாம் வல்ல இறைவன் ஒருவனை மட்டுமே வணங்கி வழிபடும் நடைமுறை தான் முற்காலத்து இடைசெருகல் இல்லாத இந்து மதத்தின் நடைமுறையும்! பிற்காலத்தில் தான் மனிதன் உள்ளிட்ட படைக்கப்பட்ட வற்றைவணங்கும் பாவச்செயல் இந்து மதத்தில் புகுத்தப்பட்டது.
மனித கருத்துக்களால் மாற்றத்துக்கு ஆளாவதற்கு முன்பு எல்லாம் வல்ல இறைவன் ஒருவனை மட்டுமே வணங்கி வழிபட வேண்டும் என்பது தான் இந்து மத கொள்கையாக இருந்தது என்பதற்கு இந்து மதத்தின் வேதங்களில் ஆதாரம் உள்ளது.
அத்தகைய வேத வசனங்களில் சிலவற்றை காண்போம்;
ரிக்வேதம் :
மானோ ஹிம்ஜுஜ நிதாயஹ் ப்ருதிவ்யா
யோ வா திவம் சத்ய தர்மா ஜஜான
யவிசர் பஷ்ச்சந்தரா ப்ருஹதீர் ஜஜான
கஸ்மை தேவாய ஹவிஷ விதமே
(ரிக்வேதம் 10:121:9)
பொருள் : எவர் பூமியை உண்டாக்கினாரோ, அதுபோல் உண்மையை நியாயமாக்கி வைத்து கொண்டு இருக்கும் எவர் தெய்வாமிர்தத்தை உண்டாக்கினாரோ,எவர் நீரையும் பிரகாசத்தையும் உண்டாக்கினாரோ அந்த படைப்பாலனே நம்மை பரிபாளிகின்றான்.அதனால் அவனை மட்டுமே வழிபடுக!
ஹிரன்ய ஹர்பஹ ஸமவர்த்த தாக்கரே
பூதஸ்ய ஜாதஹ பரிதேச ஆஸித்
ஸதாதார பிரதிவீம் தியாமு தேமாம்
கஸ்மை தேவாய ஹவிஷா விதேம்
(ரிக்வேதம் 10:121:1)
பொருள் : ஆதியில் ஹிரன்ய ஹர்பன் மட்டுமே இருந்தது.அவன்தான் சகலவாத ஒளிரும் வஸ்துக்களுக்கு ஆதாரமானவன்.அவன்தான் பூமியையும்,சூரிய சொர்க்க லோகங்கள் அனைத்தையும் படைத்தது பரிபாலித்து வருபவன்.அவனிடமிருந்து தான் சகல வஸ்துக்களும் உண்டானது.உலகம் அனைத்தும் அவன் கட்டளை படியே இயங்கும்.அதனால் அவனை மட்டுமே வழிபடுக.
பகவத் கீதை:
பிதாஸி லோகாஸ்ய சராசஸ்ய த்வமய புஷ்யச்ய குரூர்
கரியான் நத்வத்சுமோ ஸத எப்பதிக
குதோ ன்யா லோகத்தரயே ப்யப்ரதமி ப்ரபாவ
தஸ்மாத் ப்ரனம்ய ப்ரணீதாய காயப்
பிரஸாதயே த்வா மஹ மீஸ மீட்யம்
(பகவத் கீதை 11:43:44)
பொருள் : ஒப்புயர்வில்லாத பெருமை வாய்ந்தவனே! நீ இந்த அசைவதும் அசையாததுமாகிய உலகத்திற்கு தகப்பனும் பூஜித்ததற்குரியவனும்,பெரியவர்க்கு பெரியவனும் ஆகின்றாய்.மூவுலகிலும் உனக்கு சமமானவர் இல்லை.இன்னும் மேலானவர் எங்ஙனம் தேவா! ஆகையால் நான் உடலை தாழக்கிடத்தி நமஸ்கரித்து பூஜிதத்தர்க்குரிய இறைவனாகிய உன்னை இறையஞ்சுகிறேன்.
இந்த வசனங்களும் இந்த கருத்தில் அமைந்த வேறு வேத வசனங்களும் இந்து மதத்தின் சரியான,பூர்வீக நம்பிக்கை ஓர் இறைவனை மட்டுமே நம்பி,வணங்கி வழிபடுவதுதான் என்பதை உணர்துகின்றன.
இடைச்செருகல் :
அப்படியானால் பல தெய்வங்களை நம்பி வழிபடுவது எப்படி நுழைந்தது?
மனிதர்கள் இந்து மதத்தில் செய்த இடைச்செருகல் மூலமாகத்தான் பல தெய்வ நம்பிக்கை தோன்றியது. யாரேனும் மறுத்தால்,ஹிந்துக்களின் நிகழ்கால செயல் பாடுகளில் இருந்தே பல தெய்வ நம்பிக்கை இடைச்செருகல்தான் என்பதை நம்மால் நிறுவ முடியும் .
எப்படியெனில் இப்போது இந்துக்கள் அனைவரும் (அல்லது பெரும்பாலானோர் ) ஜாதி வேற்றுமை கூடாது,அது தவறு என்று கூறுகின்றார்கள்.மனிதர்கள் அனைவரும் சமம் என்கிறார்கள்.
ஆனால் இந்து மதத்தின் அடிப்படை நம்பிக்கயையும் சட்டங்களையும் போதிக்கும் மனுதர்மத்தில் ஜாதி வேற்றுமை உண்டென்று கூறப்பட்டுள்ளது.உயர் ஜாதியினர்கான சட்டமும் கீழ் ஜாதியினர்கான சட்டமும் அதில் விளக்கபடுகிறது.
அப்படியானால் ஜாதி வேற்றுமை கூடாது என்றும் குலங்களுக்கிடையில் ஏற்றத்தாழ்வு இல்லை என்றும் கூறும் அணைத்து ஹிந்துக்களும்,மனுதர்மத்தில் உள்ளவை மனிதர்களால் உருவாக்கப்பட்டு மதத்தில் இடைசெருகல் செய்யப்பட்டது என்று கூறுகின்றனர்.
இதன்படி வேத வசனங்கள் பலவற்றில் இறைவன் ஒருவன்தான் என்றும் அவனைமட்டும் தான் வணங்கி வழிபட வேண்டும் என்று கூறப்பட்டிருக்கும் நிலையில்,மக்களின் நடைமுறையில் பல தெய்வ நம்பிக்கை இருக்கிறதென்றால் இந்த நடைமுறைதான் இடையில் புகுத்தப்பட்ட தவறு என்பதை இலகுவாக அறிந்து கொள்ளலாம்.
முரண்பாட்டுக்குத் தீர்வு:
ஹிந்து மத வேதங்களில் சில வசனங்கள் பல தெய்வ நம்பிக்கையை ஆதரிக்கும் விதத்தில் இருந்தால் அவற்றை இடைசெருகல் செய்யபட்டவையாகத்தான் எடுத்துக்கு கொள்ள வேண்டும்.ஏனென்றால்,ஒரே கடவுள் தான் இருகின்றான் என்ற கருத்தையும் பல கடவுள்கள் இருகின்றனர் என்ற கருத்தையும் ஒரே வேதம் சொல்லும் போது முரண்பாடு ஏற்படுகிறது.இப்போது கடவுள் மனிதனுக்கு கொடுத்துள்ள அறிவைப் பயன்படுத்தி முடிவு செய்ய வேண்டும்.
அறிவைப் பயன்படுத்திப் பார்த்தால்,பல கடவுளர்கள் இருப்பது சாத்தியமில்லை என்ற முடிவுதான் கிடைக்கிறது.ஏனென்றால் பல கடவுளர்கள் இருந்திருந்தால் அவரவர் தாம் நாடுவதை செய்ய முற்படுவார்கள் அப்போது அவர்களுக்குள் போட்டி வந்து பிரபஞ்சத்தை நாசம் செய்திருப்பார்கள் .
நடைமுறை ஆதாரம்:
ஆகவே ஓரே இறைவனைத் தவிர வேறு தெய்வம் இல்லை,இதற்கு ஹிந்துக்களின் நடைமுறையிலிருந்தும் நாம் ஆதாரம் காட்ட முடியும்.
இறைவனின் தன்மை குறித்து "எல்லாம் வல்ல இறைவன்" என்று கூறுகின்றனர்."இறைவன்கள்" என்று சொல்வதில்லை.இறைவன் என்று ஒருமையாக குறிபிடுகின்றனர் அத்துடன் அவன் எல்லாம் செய்ய வல்லவன் என்றும் வர்ணிக்கின்றனர் .எனவே அதே தகுதியில் வேறொருவர் இல்லை என்ற நம்பிக்கையையே இதில் வெளிபடுத்துகின்றனர்.இவ்வாறு இறைவன் ஒருவன் தான் என்பதை குறிப்பிடும் வார்த்தைகளை இந்துக்களின் பேச்சு நடைமுறையில் காணலாம்.
தாய்மதம் திரும்புக :
ஆக இந்துக்களின் பூர்வீகமான இறைநம்பிக்கையான ஓரிறைக் கொள்கையை இஸ்லாத்தின் வேதம் திரு குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:
கூறுவீராக! இறைவன் அவன் ஒருவனே.இறைவன் (எவரிடமும்) தேவையற்றவன். அவன் (எவரையும்) பெற்றெடுக்கவுமில்லை.(எவராலும்) பெற்றெடுக்கபடவும் இல்லை.அவனுக்கு நிகராக எவருமில்லை.
(அத்தியாயம் 112)
இதுபோல் இந்து மதத்தினரின் பூர்வீக நம்பிக்கையான ஓரிறைக் கொள்கையை வலியுறுத்தும் வசனங்கள் ஏராளம் உள்ளன.
ஆகவே இந்துக்கள் தங்களின் பூர்வீக இறைநம்பிக்கையை ஏற்பதன் மூலம் தங்களின் தாய்மதமான இஸ்லாத்திற்கு திரும்ப வேண்டும்.
-அப்துர்ரஹ்மான் மன்பஈ,MA.,M.phil