லவ் ஓம்’ ஐ மறைக்கவே லவ் ஜிஹாத் பூச்சாண்டி!

ஆய்வுகள் | மற்றவை by மௌலவி. அப்துர் ரஹ்மான் மன்பயீ On Feb 21, 2021 Viewers: 1508


லவ் ஓம்’ ஐ  மறைக்கவே லவ் ஜிஹாத் பூச்சாண்டி!

சர்வ தேசங்களிலும் நமது இந்தியாதான் பாசிஸவாதிகளின் சொர்க்கலோகமாக உள்ளது. அதனால்தான் அவர்கள் மக்கள் மீது தங்களின் இஷ்டப்படி அதிகாரம் செலுத்திக் கொண்டும் அட்டூழியம்  செய்து கொண்டுமிருக்கிறார்கள்.

இவர்களின் சமீபத்திய அட்டூழியம் உத்தரப்பிரதேசத்தில் இவர்கள் கொண்டுவந்திருக்கும் மதமாற்ற தடை சட்டம். இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமாக இவர்கள் செய்துள்ள முறையற்ற செயலை மறைக்கும் விதமாக “சட்ட விரோத மதமாற்றத் தடைச் சட்டம் 2020” என்று இந்தச் சட்டத்துக்கு பெயர் வைத்துள்ளார்கள்.

இந்தச் சட்டத்துக்கு கடந்த 2020 நவம்பர் 28-ல் கவர்னர் ஒப்புதல் அளித்தார். அன்றைய தினமே பரேலி மாவட்டத்திலுள்ள தேவரனியா காவல் நிலையத்தில் முதல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உவைஸ் அஹ்மத் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். அதே ஊரைச் சேர்ந்த ஓர் இளம் பெண்ணை கட்டாய மத மாற்றம் செய்ய முயன்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அன்றிலிருந்து ஒரு மாதம் நிறைவடையும் போது (டிசம்பர் 26க்குள்) முப்பத்தைந்து பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

டிசம்பர் 26ம் தேதி தினமணி நாளிதழ¤ல் கைது செய்யப்பட்டவர்களில் கணிசமானவர்களின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. அனைவரும் முஸ்லிம்கள். அவர்கள் ஒவ்வொருவர் மீதும், இந்துப் பெண்களை கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தக் கொடியவர்களின் ஆட்சியில் முஸ்லிம்கள் தங்கள் மார்க்கத்தை பின்பற்றி வாழ்வதே பெரிய சிரமமாக இருக்கின்றது. முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்திற்காகவே அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. அதனால் முஸ்லிம்கள் அஞ்சி அஞ்சி வாழும் நிலை ஏற்பட்டுள்ளது.

     இப்படியிருக்கையில் இந்து மதத்துப் பெண்களை எப்படி கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்ய முடியும்? இதிலிருந்தே இவர்கள் முஸ்லிம்களுக்கு இடையூறு செய்யவே இந்தச் சட்டத்தை கொண்டுவந்திருக்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்ளலாம்.

ஒரு கல்லில் இரண்டு மாங்காய்

இந்த மதவெறியர்கள் இந்தச் சட்டத்தின் மூலம் முஸ்லிம்களுக்கு இரண்டு வித பாதிப்பு ஏற்படுத்துகிற வேலையில் இறங்கியுள்ளார்கள்.

ஒன்று, ஒரு முஸ்லிம் ஆணும், இந்து பெண்ணும் மனம் விரும்பி திருமணம் செய்து கொள்ளும்போது அந்த முஸ்லிம் ஆண் மீது, இந்துப் பெண்ணை கட்டாய மதமாற்றம் செய்ததாக வழக்குப் போட்டு சிறையில் தள்ளுவார்கள¢. அந்தப் பெண் தானாக முஸ்லிமாகும் போதும் இந்த அட்டூழியத்தைச் செய்வார்கள். அந்தப் பெண் மதமே மாறாவிட்டால் கூட ஒரு முஸ்லிமை துன்புறுத்துவதற்காகவே இந்தச் சட்டத்தை தவறாக பயன்படுத்தி அந்த முஸ்லிம் ஆணை கைது செய்வார்கள்.

இந்தச் சட்டத்தின் மூலம் இதுவரை கைது செய்யப்பட்டவர்களெல்லாம் இப்படித்தான் அநியாயமான முறையில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இந்த சட்டத்தின் மூலம் இந்த மதவெறியர்கள் ஏற்படுத்தும் இன்னொரு பாதிப்புதான் லவ் ஜிஹாத் என்ற பூச்சாண்டி!. இந்த அவதூறான வாசகத்தின் மூலம் முஸ்லிம்கள் மீது இந்துக்களிடம் வெறுப்பை ஏற்படுத்துகிறார்கள். இஸ்லாமிய மார்க்கத்தின் மீதும் வெறுப்பை ஏற்படுத்துகிறார்கள்.

     லவ் ஜிஹாத் என்றால் காதல் அறப்போர் என்று அர்த்தம் வருகிறது. முஸ்லிம்களாகிய நமக்கே அது என்னவென்று தெரியவில்லை. இஸ்லாத்திலும் அப்படி எதுவும் கூறப்படவில்லை.

     ஆனால், கொடிய பயங்கரவாதிகளான இந்த தேசவிரோதிகள், இவர்களாகவே இப்படி ஒரு வார்த்தையை புனைந்து கூறி இவர்களாகவே இதற்கு விளக்கமும் சொல்கிறார்கள். அதாவது, முஸ்லிம் ஆண்கள் சிலர், இந்து பெண்களை காதலித்து முஸ்லிம் பெண்களாக மதம் மாற்றுகிறார்களாம்.

உண்மை என்னவெனில் மதம் மாற்றுவதில்லை! தாமாக விரும்பியே மதம் மாறுகிறார்கள். சிலர் முஸ்லிம் ஆணை திருமணம் செய்தாலும் தங்களின் மதத்திலேயே நீடிக்கவும் செய்கிறார்கள்.

சில இந்துப் பெண்கள் முஸ்லிமை காதலித்து திருமணம் செய்வதுபோல், சில முஸ்லிம் பெண்களும் இந்து ஆண்களை திருமணம் செய்கிறார்கள். இந்துவாகவும் மாறிவிடுகிறார்கள். இப்படி இந்து ஆணை திருமணம் செய்து இந்துவாக மாறிய முஸ்லிம் பெண்ணுக்கு பிரபல உதாரணமாக நடிகை குஷ்புவை சொல்லலாம். ஒரு சிலர் இந்துவாக மாறாமலும் இருக்கலாம்.

     இதேபோல் சில கிறுத்தவ பெண்களும் சீக்கிய பெண்களும் கூட முஸ்லிம் ஆண்களை திருமணம் செய்கிறார்கள்.

நம் இந்தியாவைப் பொறுத்தவரை எந்த மதத்தைச் சேர்ந்த ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும், மற்றொரு மதத்தைச் சேர்ந்தவரை விரும்பி வாழ்க்கைத் துணையாக ஆக்கிக் கொள்வது நடந்து கொண்டுதானிருக்கிறது. இப்படிப்பட்டவர்கள் தங்களின் மத சட்டங்களையும் சமூகக் கட்டுப்பாடுகளையும் மீறித்தான் இவ்வாறு செய்கிறார்கள்.

நம் நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் கொடுத்துள்ள உரிமைகள் இவர்களுக்கு சாதகமாக உள்ளன.

இப்படி எல்லா மதத்து ஆண்களும் பெண்களும் விரும்பினால் பிற மதத்தைச் சேர்ந்தவரை திருமணம் செய்து கொள்வது நடந்து கொண்டிருக்கும்போது, ஒரு முஸ்லிம் ஆணை ஒரு இந்துப் பெண் திருமணம் செய்து கொள்வதை மட்டும் ஏன் கொச்சைப் படுத்தும் விதத்தில் லவ் ஜிஹாத் என்று சொல்கிறார்கள்? 

இந்த முக்கிய கேள்விக்கான பதில்.

“லவ் ஓம்” ஐ மறைக்கவே...

நமது இந்தியாவில் பல காலமாகவே இந்த சாத்தானிய பரிவாரங்கள் திட்டமிட்டு முஸ்லிம்களுக்கு தீங்கு செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான்.

இவர்களின் கொடிய திட்டங்களில் ஒன்றுதான் முஸ்லிம் பெண்களை காதலிப்பதாக நடித்து இந்துவாக மாற்றி திருமணம் செய்து, சிறிது காலம் வாழ்ந்து விட்டு விட்டு ஓடுவது. அல்லது, திருமணம் செய்து சிறிது காலம் வாழ்ந்து விட்டு சித்ரவதை செய்து அவளே இவனை விட்டு ஓடும்படிச் செய்வது. அல்லது, தானே முஸ்லிமாக மாறுவதாக நடித்து திருமணம் செய்து வாழ்ந்தபின் கொஞ்ச நாளில் விட்டு விட்டு போய்விடுவது. இது தான் “லவ் ஓம்” என்பது!

இவ்வாறு பல விதங்களில் முஸ்லிம் பெண்களின் வாழ்க்கையை சீரழிக¢கத் திட்டமிட்டு செயல்படும் அயோக்கியர்கள் தங்களின் கொடிய செயல்பாட்டை மறைப்பதற்காக வேண்டுமென்றே லவ் ஜிஹாத் என்ற வாசகத்தை உருவாக்கி பரப்புகிறார்கள்.

    இந்தத் தீயவர்களின் கெடுதல் திட்டமான “லவ் ஓம்” காரணமாக பாதிக்கப்பட்டுள்ள முஸ்லிம் பெண்கள் ஏராளம்! இதைப் பற்றி யாரும் பேசிவிடக்கூடாது என்பதற்காக திட்டமிட்டு லவ் ஜிஹாத் என்று ஒன்றை புனைந்து இவர்களின் வதந்தி பரப்பும் பொய்யர் கூட்டத்தின் மூலம் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தத் தீயவர்கள், தாம் செய்யும் அட்டூழியத்தை மறைத்து விட்டு அதே அட்டூழியத்தை மற்றவர்கள் செய்ததாக பழிபோட்டுப் பேசுவதை நீண்ட நெடுங்காலமாகவே வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

நம்முடைய இந்திய திருநாட்டில் எல்லாப் பகுதியிலும் பரவியிருந்த புத்த மதத்தின் ஆலயங்களை மதவெறிபிடித்து இடித்துத் தள்ளி அந்த இடத்தில் அநியாயமாக இவர்கள் மத கோயில்களை கட்டினார்கள். ஆனால், நியாயமாக ஆட்சிசெய்த முஸ்லிம் மன்னர்கள் இவர்களின் கோயில்களை இடித்ததாக பிற்காலத்தில் பழிபோட்டுப் பேசுகிறார்கள்.

இந்தியாவில் நடந்த மிகப் பெரும்பாலான குண்டுவெடிப்புகள்  இவர்களால் நடத்தப்பட்டவைதான். ஆனால் அவற்றையெல்லாம் முஸ்லிம்கள் செய்ததாக பழிபோட்டார்கள். இப்படிப் பழிபோடுவதற்கு காவல் துறையிலுள்ள தங்களின் ஆதரவாளர்களையும் ஊடகத்திலுள்ள ஆதரவாளர்களையும் பயன்படுத்திக் கொண்டார்கள்.

இதேபோன்ற காரியத்தைத்தான் இந்த லவ் ஜிஹாத் அவதூறிலும் இந்த மனித சைத்தான்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்.

“லவ் ஓம்” எனும் இவர்களின் சதிச் செயலின் தீங்கு குறித்து இந்திய மக்கள் அனைவரிடமும் எச்சரிக்கை செய்ய வேண்டும்!

“லவ் ஓம்” குறித்து தேசிய அளவில் விவாதிக்கப்பட வேண்டும்.

இந்த சதிகாரர்கள் முஸ்லிம்களுக்கு மட்டுமின்றி இந்துக்களுக்கும் மனித குலம் முழுமைக்கும் விரோதிகள்தான் என்பதும் தெளிவுபடுத்தப்பட வேண்டும்


 -M. அப்துர்ரஹ்மான் மன்பஈ.,MA.,M.phil