முஸ்லிம் எல்லாரும் ஜிஹாதி தான்

ஆய்வுகள் | மற்றவை by மௌலவி. அப்துர் ரஹ்மான் மன்பஈ.MA.,Mphil On Nov 13, 2022 Viewers: 415


முஸ்லிம் எல்லாரும் ஜிஹாதி தான்

முஸ்லிம் எல்லாரும் ஜிஹாதி தான்

மௌலவி. அப்துர் ரஹ்மான் மன்பஈ.MA.,Mphil 

  

      தற்காலத்தில் முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் இழிவு படுத்துவதற்காக இஸ்லாத்தின் விரோதிகள் பலவிதமான வார்த்தைகளை பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள்.

     இஸ்லாமிய தீவிரவாதம், முஸ்லிம் பயங்கரவாதிகள் போன்ற வார்த்தைகளை பயன்படுத்துகிறார்கள். ஆனால் இந்த மாதிரியான வார்த்தைகளை பயன்படுத்துபவர்களே கொடிய பயங்கரவாதிகளாக இருக்கிறார்கள். அல்லது தங்கள் மதத்தைச் சேர்ந்த கொடிய பயஙகரவாதிகளை ஆதரிப்பவர்களாக இருக்கிறார்கள்.

       பலவீனப்பட்ட சிறுபான்மை முஸ்லிம் சமுதாயத்தை அச்சுறுத்தி ஆட்டிப் படைக்க வேண்டுமென்பதற்காக இது போன்ற சதிகளில் ஈடுபடுகிறார்கள்.

     இத்த்கைய சதிச் சிந்தனை கொண்டவர்கள் ஒரு நல்ல வார்த்தையை தவறான சித்தரிப்புடன் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். அதுதான் ஜிஹாதி என்ற சொல். மக்கள் நன்மைக்காக உழைப்பவர்களை குறிப்பாக பலவீனப்பட்ட மக்களுக்காக போராடுபவர்களை தவறான ஆட்களாக சித்தரித்து அவர்களை ஜிஹாதிகள் என்றும் கூறுகின்றனர்.

      சமீபத்தில் மஜ்லிஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசதுத்தீன் உவைசி அவர்களின் டெல்லி வீட்டை அடித்து சேதப்படுத்திய இந்துத்துவ குண்டர் கூட்டத்தினர் உவைசி ஒரு ஜிஹாதிஎன்று சொன்னதாக பத்திரிக்கைகளில் செய்தி வெளியாகியிருந்தது.

      அடிப்படையில் ஜிஹாதி எனும் சொல் தவறான கருத்தை கொண்ட சொல் அல்ல என்றாலும் இந்த அட்டூழியக்காரர்கள் இதை தவறாக சித்தரிப்பதாலும் அறியாத மக்கள் இந்த வார்த்தையை தவறாக புரிந்து கொள்ளும் நிலை இருப்பதாலும் ஜிஹாத், ஜிஹாதி என்ற வார்த்தைகள் குறித்து தெளிவு படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

      ஜிஹாத் என்ற சொல்லுக்கு அறப்போராட்டம் என்பது கருத்து. அதாவது பூமியில் சத்தியத்தை நிலை நாட்டவும் நீதியையும் நன்மையையும் வலுப்படுத்தவும் எடுக்கப்படும் முயற்சியெல்லாம் அறப்போராட்டம்தான்.

        உலகத்தில் எல்லாக் காலத்திலும் நல்ல மனிதர்களும் தீய மனிதர்களும் இருந்து கொண்டே இருக்கிறார்கள். தீயவர்களின் கேடுகளுக்கு எதிராக நல்லவர்கள் எல்லாக்காலத்திலும் போராடிக்கொண்டேதான் இருக்கிறார்கள். இந்த நல்லவர்களின் போராட்டம்தான் ஜிஹாத் எனும் அறப்போராட்டம்.

      ஜிஹாதி என்றால் அறப்போராட்டத்தை சார்ந்தவர் என்பது பொருள். அதாவது அறப்போராட்டத்தில் ஈடுபடுபவர்.

        இறை மார்க்கம் இஸ்லாத்தில் அறப்போரின் முறை அசத்தியமும் தீமையும் எந்த நிலையில் இருக்கின்றன என்பதைப் பொறுத்தே அமையும். பல சமயங்களில் பேச்சு , எழுத்து உள்ளிட்ட பல வழிகளில் நடக்கும். அசத்தியமும் தீமையும் ஆயுத்தத்தோடு வந்தால்தான் அறப்போர் வீரர்களும் (அதாவது ஜிஹாதிகளும்) ஆயுதம் தூக்குவார்கள்.

     மற்றபடி பேச்சின் மூலமாகவே சிறப்பாக ஜிஹாத செய்ய முடியும். இது குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியது: ஜிஹாதிலேயே (அறப்போராட்டத்திலேயே) மிகச்சிறந்த ஜிஹாத் அநியாயக்கார ஆட்சியாளரிடம் சத்தியத்தை பேசுவதாகும் (நூல்: நஸாயி , இப்னு மாஜா)

      நபி (ஸல்) அவர்களின் இந்த கூற்றின் மூலம் நமக்கு தெரிய வருவது என்ன? ஆயுதத்தின் மூலம் ஜிஹாத் எனும்  அறப்போராட்டம் நடத்துவதென்பது நிர்பந்தமான ஒரு கட்டத்தில்தான். ஆனால் அதிகமாக நடக்க வேண்டிய சிறப்புக்குரிய ஜிஹாத் என்பது நாவின் மூலம் நடப்பதுதான்.

        ஆயுதமேந்தி செய்யப்படும் ஜிஹாத் எனும் அறப்போர் யாருடன் நடத்த வேண்டுமென்பதையும் திருகுர்ஆன் தெளிவுபடுத்தியுள்ளது. பாருங்கள்:

      உங்களை எதிர்த்துப் போர் புரிபவர்களுடன் நீங்களும், அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள்; ஆனால் வரம்பு மீறாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை. (அத்தியாயம் 2, வசனம் 190)

            இறை மார்க்கத்தை அழிப்பதற்காக ஆயுதமேந்தி வருபவர்களுடந்தான் போரிட வேண்டும் என்று சொல்வதன் மூலம் ஆயுதம தாங்கி செய்யப்படும் ஜிஹாத் எனும் அறப்போராட்டத்துக்கு நியாயமான காரணத்துடன் வரைமுறை இருப்பதை புரிந்து கொள்ளாலாம்.

            பலவீனப்படுத்தப்பட்ட  அடக்குமுறைக்குள்ளாக்கப்பட்ட மக்களுக்காக போரிடுவதும் இறை மார்க்கத்தை காப்பாற்றுவதற்காக நடத்தும் ஜிஹாதுடன் இனத்தே சொல்லப்படுகிறது. அந்த வசனம்:

       இறைவனின் பாதையிலும் ஆண்கள் , பெண்கள் , சிறுவர்கள் ஆகியோரில் பலவீனமானவர்களின் (பாதுகாப்பு) விசயத்திலும் நீங்கள் போர் செய்யாதிருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது?  (திரு குர்ஆன் 4: 75)

          ஆக பலவீனப்பட்ட மக்களின் நலன் காக்க போரிடுவதும் ஜிஹாத் எனும் அறப் போராட்டம்தான்.

             ஆக நியாமான காரணங்களால் சரியான வழிமுறையில் ஜிஹாத் செய்ய வேண்டுமென்று இறைவனின் சத்திய மார்க்கத்தில் வழி காட்டப்பட்டுள்ளது.

        அறப்போராட்டம் நடத்தப்பட வேண்டிய அசத்திய வாதிகளும் தீயவர்களும் நிறைந்திருக்கக் கூடிய கால கட்டத்தில் தான் நாம் இருந்து கொண்டிருக்கிறோம். அவர்களை தெள்ளத்தெளிவாக அறிந்து கொள்ளக்கூடிய அடையாளங்களை கீழே தருகிறேன்.

-              மாடு புனிதமானது அதை அறுத்து உண்ணக்கூடாது என்று அராஜகம் செய்வதோடு மாட்டுக்கறி சாப்பிடுவதாக சொல்லி மனிதர்களை அடித்தே கொலை செய்கிறார்கள் சில கட்சிக்காரர்கள். இந்த கொடுமையை இந்து மதத்தின் பெயரில் செய்கிறார்கள்.  இதே கருத்தை கொண்டவர்கள்தான் ஆட்சியிலும் இருக்கிறார்கள். ஆனாலும் மாட்டுக்கறி ஏற்றுமதி செய்யும் கம்பெனிகளுக்கு அனுமதியளித்து வரி வசூலித்து வருவாய் ஈட்டுகிறார்கள். இதிலே கூடுதல் வேதனை என்னவென்றால் இப்படி மாடுகளை அறுத்து,அந்நிய நாட்டு மக்கள் தின்பதற்காக வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களை நடத்தும் பலர் இந்து மத மக்களை வழிநடத்துபவர்கள் என்று சொல்லப்படும் பிராமணர்கள்.

               இவர்களை விட கொடிய அயோக்கியர்கள் உலகத்தில் வேறு எங்கும் இருப்பார்களா?

-              காந்திஜி கொலை செய்யப்பட்டதை நியாயப்படுத்துபவர்கள். அதற்காக சந்தோசப்படுபவர்கள். காந்தி இந்துக்களும் முஸ்லிம்களும் சமாதானத்துடனும் ஒற்றுமையுடனும் வாழ வேண்டுமென்று விரும்பினார் அதற்கான முயற்சிகளை செய்தார். தேசத்திற்கு சேவை செய்து தேசத் தந்தை என்று அழைக்கப்பட்ட காந்தியை ஒற்றுமைக்கும் சமாதானத்துக்கும் முயற்சித்த காரணத்தினாலேயே கொன்ற கூட்டமும் அந்த கூட்டத்தின் கொள்கையையும் வழிமுறையையும் பின்பற்றும் கூட்டமும் எவ்வளவு பெரிய தீயவர்கள்!

-              தாம் செய்யும் பாவத்தை பிறர் செய்ததாக பேசும் அயோக்கியர்கள். இவர்களின் தீய முன்னோர் முற்காலத்தில் பௌத்த ஆலயங்களை இடித்தார்கள். ஆனால் இப்போது இந்த தீயவர்கள் முஸ்லிம் மன்னர்கள் இவர்களின் வணக்கத்தளங்களை இடித்ததாக பொய் சொல்லி பாபரி பள்ளிவாசலை இடித்தார்கள். ஆனால் பாபரி மஸ்ஜித் எந்தக் கோயிலையும் இடித்துக் கட்டப்பட்டது என்பதற்கு ஆதாரமில்லை என்று பாபரி மஸ்ஜித் தீர்ப்பில் கூறப்பட்டது.

 

         இப்படிப்பட்டவர்கள் அசத்தியவாதிகள் , தீயவர்கள் என்பதை எந்த ஒரு சாதாரண மனிதரும் இலகுவாக அறிந்து கொள்ள முடியும். அதிகமான இந்துக்களும் இவர்களுக்கு எதிராக அறப்போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

         இது போன்ற  தீயவர்களின் அசத்தியத்திற்கும் தீமைக்கும் எதிராக முஸ்லீம்கள் அறப்போராட்டம் என்ற ஜிஹாத்  நடத்த வேண்டிய அவசியம் உள்ளது. அதனால் முஸ்லீம்கள் எல்லாரும் ஜிஹாதி தான்!