ஹதீஸ் எப்படி புரிவது? – 9
-அபூ அக்மல்
புகாரி - பாடம் : 159 (தொழுது முடித்தபின் இமாம்) வலப் பக்கமோ இடப் பக்கமோ திரும்பி அமர்வதும் திரும்பிச் செல்வதும்
அனஸ் (ரலி) அவர்கள் (தொழுது முடித்தபின்) வலப் பக்கமாகவும் திரும்பி அமர்வார்கள். இடப் பக்கமாகவும் திரும்பி அமர்வார்கள். வலப் பக்கமே திரும்ப வேண்டும் என்று கருதுவோரை அவர்கள் கண்டிப்பார்கள்.
Read More →ஹதீஸ் எப்படி புரிவது ? -8 - அபூ அக்மல்
நபியவர்கள் தங்க மோதிரம் அணிந்ததாக கூறப்படும் ஹதீஸ்,
அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) அவர்கள் அறிவித்தார்கள் : நபி(ஸல்) அவர்கள் தங்க மோதிரம் ஒன்றைச் செய்து, அதன் குமிழைத் தம் உள்ளங்கைப் பக்கமாக வைத்து அணிந்தார்கள். மக்களும் (அவ்வாறே) தங்க மோதிரங்களைச் செய்தனர். (இதற்கிடையில் ஒருநாள்) நபி(ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடையில் (மின்பரில்) ஏறி அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, "நான் அதைச் செய்திருந்தேன். ஆனால் அதை நான் இனி அணியமாட்மேடன்'' என்று கூறிவிட்டு அதை(க் கழற்றி) எறிந்துவிட்டார்கள், மக்களும் எறிந்துவிட்டனர்.
Read More →ஹதீஸ் எப்படி புரிவது? - 7
மௌலவி. அப்துர் ரஹ்மான் மன்பஈ.MA.,Mphil
ஷைத்தான்கள் பரவுதல் பற்றிய ஹதீஸ்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரவின் இருள் படர தொடங்கி விட்டால் உங்கள் சிறுவர்களை (வெளியே திரிய விடாமல்) தடுத்து விடுங்கள். ஏனெனில் அப்போதுதான் (பூமியெங்கும்) ஷைத்தான்கள் பரவி விடுகின்றன. இரவு வேளையில் சிறிது நேரம் கழிந்து விட்டால் அவர்களை (வெளியே செல்ல) விட்டு விடுங்கள். மேலும் (இரவு நேரத்தில்) உன் கதவை மூடி விடு. (அப்போது) அல்லாஹ்வின் பெயரைச் சொல். (உறங்கச் செல்கையில்) உன்னுடைய விளக்கை அணைத்து விடு. (அப்போதும்) அல்லாஹ்வின் பெயரைக் சொல் உன் தண்ணீர் பையை சுறுக்கிட்டு மூடி விடு. (அப்போதும்) அல்லாஹ்வின் பெயரைச் சொல். உன்னுடைய பாத்திரத்தை மூடி வை.(அதை முழுவதும் மூட இயலாவிட்டாலும்) அதன் மீது எதையேனும் குறுக்காக வைத்தேனும் மூடி விடு. (அப்போதும்) அல்லாஹ்வின் பெயரைச் சொல். (புகாரி 3280, 3304)
ஹதீஸ் எப்படி புரிவது?
ஹதீஸ் - 6
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (பத்ருப் போரில் கொல்லப்பட்ட இறை நிராகரிப்பாளர்கள் போடப்பட்டிருந்த) பத்ரின் பாழடைந்த கிணற்றுக்கருகில் நபி(ஸல்) அவர்கள் நின்று, “உங்கள் இறைவன் உங்களுக்கு வாக்களித்ததை உண்மையானதாக பெற்றுக் கொண்டீர்களா?” என்று கேட்டார்கள். அப்போது நபியவர்களிடம், மரணித்தவர்களையா அழைத்து பேசுகிறீர்கள்? என்று கேட்கப்பட்டது. அதற்கவர்கள், “நீங்கள் அவர்களை விட நன்றாக செவியேற்பவர்கள் அல்ல. ஆனாலும் அவர்களால் பதிலளிக்க முடியாது” என்றார்கள்.
(புகாரி 1370).
Read More →இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள்
கூறியதாவது: உமர்(ரலி) அவர்கள் மரணக் காயமுற்றிருந்தபோது, “சகோதரரே! நண்பரே!” எனக் கூறியவராக ஸுஹைப்(ரலி) சப்தமிட்டு அழத் தொடங்கினார்...
அப்போது உமர்(ரலி) 'உயிருடனிருப்பவர்கள் அழுவதன் காரணமாக மய்யித் வேதனை செய்யப்படுகிறது
என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதை நீர் அறியவில்லையா?' எனக் கேட்டார்.
(புகாரி 1287)
ஹதீஸ் எப்படி புரிவது?
ஹதீஸ் - 4
தொழுகையை முறிக்கும் மூன்று
அப்துல்லாஹ் பின் அஸ்ஸாமித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூதர் அல்கிஃபாரீ (ரலி) அவர்கள், உங்களில் ஒருவர் (திறந்தவெளியில்) தொழ நிற்கும் போது தமக்கு முன்னால் வாகன (ஒட்டக)த்தின் (சேணத்திலுள்ள) சாய்வுக்கட்டை போன்றது இருந்தால் அதுவே அவருக்குத் தடுப்பாக அமைந்துவிடும். சாய்வுக்கட்டை போன்றது இல்லாவிட்டால் கழுதை, பெண் மற்றும் கறுப்புநாய் ஆகியன அவரது தொழுகையை முறித்துவிடும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்றார்கள். உடனே நான், அபூதர் (ரலி) அவர்களே! சிவப்பு நிற நாய், மஞ்சள் நிற நாய் ஆகியவற்றை விட்டுவிட்டுக் கறுப்பு நிற நாயை மட்டுமே குறிப்பிடக் காரணம் என்ன? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், என் சகோதரரின் புதல்வரே! நீங்கள் என்னிடம் கேட்டதைப் போன்றே நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் கறுப்பு நாய் ஷைத்தான் ஆகும் என்று கூறினார்கள் என்றார்கள்.
(முஸ்லிம் 882)
இந்த ஹதீஸின் கருத்தை கீழ்காணும் ஹதீசும் கூறுகிறது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(தடுப்பு இல்லாமல் தொழுகின்றவரின்) தொழுகையைப் பெண் (முறித்துவிடுவாள். மேலும்), கழுதை, நாய் ஆகியவை(யும்) முறித்துவிடும். வாகன (ஒட்டக)த்தின் (சேணத்திலுள்ள) சாய்வுக்கட்டை போன்றது அதிலிருந்து பாதுகாத்துவிடும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம் 883)
Read More →அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் அபசகுனம் என்பது பெண், வீடு, குதிரை ஆகிய மூன்று விஷயங்களில்தான்!
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர்(ரழி) நூல்: புகாரீ (5093), முஸ்லிம் (4478).
Read More →“லாஇலாஹ இல்லல்லாஹ்” வை ஏற்காதவருடன் போரிட வேண்டுமா?
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை” என்று கூறுகிற (நிலை ஏற்படும்) வரை மக்களுடன் போரிடும் படி நான் கட்டளையிடப்பட்டுள்ளேன். “வணக்கத்திற்குரியவன் (இறைவன்) அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் இல்லை” என்று கூறுகிறவர் தன் உயிரையும், உடமையையும் என்னிடமிருந்து காப்பாற்றிக் கொள்வார். நியாயமான காரணம் இருந்தாலே தவிர. அவரிடம் (அவரின் மற்ற செயல்களுக்கு) கணக்கு வாங்கு வது அல்லாஹ்வின் பொறுப்பாகும்”.
Read More →