ஹதீஸ் எப்படி புரிவது? – 9
-அபூ அக்மல்
புகாரி - பாடம் : 159 (தொழுது முடித்தபின் இமாம்) வலப் பக்கமோ இடப் பக்கமோ திரும்பி அமர்வதும் திரும்பிச் செல்வதும்
அனஸ் (ரலி) அவர்கள் (தொழுது முடித்தபின்) வலப் பக்கமாகவும் திரும்பி அமர்வார்கள். இடப் பக்கமாகவும் திரும்பி அமர்வார்கள். வலப் பக்கமே திரும்ப வேண்டும் என்று கருதுவோரை அவர்கள் கண்டிப்பார்கள்.
Read More →மகத்தான வழிகாட்டிகள் - 6
இமாம் அஹ்மத் பின் ஹன்பல்
(ரஹ்)---2
கடந்த இதழில் இமாம்
அஹ்மத் அவர்களின் வாழ்க்கை வரலாற்றில்
அவர்கள் கல்வி பயின்றது. ஆசிரியர்
பணி செய்தது, அவர்களின்
வாழ்வில் ஏற்பட்ட சோதனைகள் உள்ளிட்ட
பல நிகழ்வுகள் குறித்து
பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக இன்னும்
சில விஷயங்களை பார்ப்போம்
இன்ஷா அல்லாஹ்.
வணக்கவழிபாடுகள் : இமாம் அவர்கள் ஃபர்லான
வணக்கங்கள் தவிர்த்து உபரியான வணக்க
வழிபாடுகளில் அதிகமாக ஈடுபடுவார்கள். அதிகமாகன
நஃபில் நோன்புகள் நோற்பார்கள். எந்த
அளவிற்கென்றால் அவர்கள் சிறையிலடைக்கப்பட்டு சங்கிலிகளால்
பிணைக்கப்பட்டு சாட்டையடி தண்டனை கொடுக்கப்பட்ட
நாட்களில் கூட நஃபிலான நோன்புகள்
வைத்திருப்பார்கள், பொதுவாக ஒரு வாரத்தில்
ஒரு தடவை குர்ஆனை
முழுமையாக ஒதி முடிப்பார்கள் என்றும்
அன்னாரின் வாழ்க்கை வரலாற்றில் கூறப்படுகிறது
.
இமாம் அஹ்மத் பின் ஹன்பல்
(ரஹ்)
இமாம் அஹ்மத்(ரஹ்)
அவர்கள் நான்கு பெரும் இமாம்களில்
இறுதியானவர் அவர்களின் முழுப்பெயர் அஹ்மத்
பின் முஹம்மத் பின் ஹன்பல்
அஷ்ஷய்பானி என்பதாகும். இவர்களின் கூற்றுகளும் கருத்துகளுமே
ஹன்பலி மத்ஹப் என்று சொல்லப்படுகிறது
.
இமாம் அவர்கள் ஹிஜ்ரி
164 வது வருடம் பக்தாத் நகரில்
பிறந்தார்கள். பாக்தாத் நகரம் அக்காலத்தில்
இஸ்லாமிய உலகின் முதன்மையான பெருநகரமாக
இருந்தது.
இமாமவர்கள் சிறுவராக இருக்கும்போதே அவர்களின்
தந்தை மரணம் அடைந்து விட்டார்கள்.
எனவே இமாமவர்களின் தாயார் அவர்களை பராமரித்து
வளர்த்து வந்தார்.
இந்தியாவின்
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம்
அவர்கள் மீது அவதூறு பேசியுள்ள
மதவெறியர் நரசிங்கானந்த் சரஸ்வதி மீது வழக்குப்
பதிவு செய்திருக்கிறது மகாராஷ்டிராவின் அஹ்மத்நகர் போலீஸ்.
போலீஸ் பதிவு செய்திருக்கும்
எஃப்,ஐ.ஆரில்
கூறப்பட்டுள்ளதாவது:
"இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.
அப்துல் கலாம் ஜிஹாதி நவம்பர்
ஒன், அவரது பதவிக் காலத்தின்
போது அவர் அணுகுண்டின் வடிவமைப்பு
முறையை (ஃபார்முலா) பாகிஸ்தானுக்கு கொடுத்தார் என்று நரசிங்கானந்த் பேசியிருந்த
வகுப்புவாதப் பேச்சு யூடியூப்பில் பகிரப்பட்டது.
அத்தோடு, பஞ்சாப் கேசரி செய்தி
ஏட்டியன் ஆன்லைன் பதிப்பிலும் இது
வெளியாகியுள்ளது.
ஹதீஸ் எப்படி புரிவது ? -8 - அபூ அக்மல்
நபியவர்கள் தங்க மோதிரம் அணிந்ததாக கூறப்படும் ஹதீஸ்,
அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) அவர்கள் அறிவித்தார்கள் : நபி(ஸல்) அவர்கள் தங்க மோதிரம் ஒன்றைச் செய்து, அதன் குமிழைத் தம் உள்ளங்கைப் பக்கமாக வைத்து அணிந்தார்கள். மக்களும் (அவ்வாறே) தங்க மோதிரங்களைச் செய்தனர். (இதற்கிடையில் ஒருநாள்) நபி(ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடையில் (மின்பரில்) ஏறி அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, "நான் அதைச் செய்திருந்தேன். ஆனால் அதை நான் இனி அணியமாட்மேடன்'' என்று கூறிவிட்டு அதை(க் கழற்றி) எறிந்துவிட்டார்கள், மக்களும் எறிந்துவிட்டனர்.
Read More →நல்லோரும் செய்யும் தவறுகள் - 7 (மனைவியரிடம் கடுமை காட்டும் கணவர்கள் - 2)
கடந்த இதழில் இதே தலைப்பில் மனைவியரிடம் எஜமானர்கள்போல் நடந்து கொள்வது; மனைவி தனக்கு மாற்று கருத்து சொல்லவே கூடாது என்று எண்ணுவது; மனைவியின் ஆலோசனையை கேட்க மறுப்பது ஆகியவை சில கணவர்மார்கள் செய்யும் தவறுகள் என்பதைப் பார்த்தோம்.
இதேபோல் இன்னும் சில தவறுகளும் உள்ளன. அவற்றில் ஒன்று மனைவியின் சிரமமான வேலைகளில் கணவன் ஒத்தாசை செய்யாமலிருப்பது. மனைவி சமையலறையில் வேலையில் இருக்கும்போது தொட்டிலில் தூங்கும் குழந்தை விழித்து அழுதால் கணவன் தொட்டிலை ஆட்டிவிட வேண்டும். அல்லது பிள்ளையை தூக்கி அமைதிப்படுத்த வேண்டும்.
Read More →நல்லோரும் செய்யும் தவறுகள் - 6
மனைவியரிடம் கடுமை காட்டும் கணவர்கள்
பண்பாட்டிலும் செயல்பாட்டிலும் நல்லவர்களாக இருப்பவர்களில் சிலர், குறிப்பிடத்தக்க தவறுகளை செய்கிறார்கள். அப்படிபட்ட தவறுகளை இந்தத் தொடரில் பார்த்து வருகிறோம்.
Read More →ஹதீஸ் எப்படி புரிவது? - 7
மௌலவி. அப்துர் ரஹ்மான் மன்பஈ.MA.,Mphil
ஷைத்தான்கள் பரவுதல் பற்றிய ஹதீஸ்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரவின் இருள் படர தொடங்கி விட்டால் உங்கள் சிறுவர்களை (வெளியே திரிய விடாமல்) தடுத்து விடுங்கள். ஏனெனில் அப்போதுதான் (பூமியெங்கும்) ஷைத்தான்கள் பரவி விடுகின்றன. இரவு வேளையில் சிறிது நேரம் கழிந்து விட்டால் அவர்களை (வெளியே செல்ல) விட்டு விடுங்கள். மேலும் (இரவு நேரத்தில்) உன் கதவை மூடி விடு. (அப்போது) அல்லாஹ்வின் பெயரைச் சொல். (உறங்கச் செல்கையில்) உன்னுடைய விளக்கை அணைத்து விடு. (அப்போதும்) அல்லாஹ்வின் பெயரைக் சொல் உன் தண்ணீர் பையை சுறுக்கிட்டு மூடி விடு. (அப்போதும்) அல்லாஹ்வின் பெயரைச் சொல். உன்னுடைய பாத்திரத்தை மூடி வை.(அதை முழுவதும் மூட இயலாவிட்டாலும்) அதன் மீது எதையேனும் குறுக்காக வைத்தேனும் மூடி விடு. (அப்போதும்) அல்லாஹ்வின் பெயரைச் சொல். (புகாரி 3280, 3304)