ஆய்வுகள் | மற்றவை by அப்துர்ரஹ்மான் மன்பஈ On Aug 16, 2014 Viewers: 2234 0
ஆட்சி மாற்றம்! அஞ்சத் தேவையில்லை!
நமது இந்தியாவில் ஆட்சி மற்றம் ஏற்ப்பட்டுள்ளது. இந்த புதிய ஆட்சியாளர்கள் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் விரோதிகள். முஸ்லிம்களாகிய நாம் இதை விரும்பவில்லை. ஆனாலும் இது அல்லாஹ்வின் நாட்டம்!
ஆதிகாலம் தொட்டு நல்லோர் தீயோர் மாறி மாறி அதிகாரம் செலுத்துவது தொடர்ந்து கொண்டிருக்கிறது. அத்தொடரில் இக்காலத்தில் தீயோர் ஆதிக்கம் அதிகமாக இருந்து கொண்டிருக்கிறது. இந்நிலைக் கண்டு இறைநம்பிக்கையாளர்கள் கலங்கக் கூடாது. இது அல்லாஹ் சொல்லித்தரும் பாடம்.
இறை நிராகரிப்பாளர்கள் அல்லாஹ்வின் மார்க்கத்திற்கும் இறைநம்பிக்கையாளர்களுக்கும் எதிராக செயல்பட்டுக் கொண்டிருந்தாலும் பொருள் செல்வம், பதவி உள்ளிட்ட நலவுகளை வைத்துக் கொண்டு சுகபோகத்துடன் வாழ்வதைப் பார்த்து மிரட்சி அடைந்து விடக் கூடாது.
இவ்வுலக வாழ்க்கையில் சொற்பகால இன்பங்களை அனுபவித்துக் கொண்டு அட்டூழியம் செய்பவர்கள் மறுமையில் அல்லாஹ்வின் கடுமையான தண்டனைக்கு ஆளாவார்கள், அவர்களில் பலருக்கு இவ்வுலகிலும் தண்டனை வழங்கப்படுகிறது.
அல்லாஹ் கூறுகிறான்:
“யார் நம்பிக்கைக்கு (பகரமாக) நிராகரிப்பை விலைக்கு வாங்கிக் கொண்டார்களோ அவர்கள் அல்லாஹ்விற்கு ஒரு தீங்கும் செய்துவிட முடியாது. மேலும் அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனையும் உண்டு.
இன்னும் நிராகரித்தவர்கள் அவர்களை (உடனுக்குடன் தண்டிக்காமல்) தாமதப்படுத்துவதெல்லாம், தங்களுக்கு நல்லது என்று அவர்கள் கருத வேண்டாம். (தண்டனையை) நாம் அவர்களுக்குத் தாமதப் படுத்துவதெல்லாம் அவர்கள் பாவத்தை அதிகமாக்குவதற்கேதான், அவர்களுக்கு இழிவுதரும் வேதனையுமுண்டு.
நல்லவரிலிருந்து தீயவரை பிரித்தறிவிக்கும் வரை நீங்கள் எதன் மீது இருக்கிறீர்களோ அதன் மீது நம்பிக்கையாளர்களை அல்லாஹ் விட்டு வைப்பவனாக இல்லை. இன்னும் அல்லாஹ் உங்களுக்கு மறைவானவற்றை அறிவிப்பவனாகவும் இல்லை, ஏனெனில், (இவ்வாறு அறிவிப்பதற்கு) அல்லாஹ் தான் நாடியவர்களை தன் தூதர்களிலிருந்து தேர்ந்தெடுக்கிறான், ஆகவே அல்லாஹ்வின் மீதும் அவனது தூதர்கள் மீதும் நம்பிக்கைக் கொள்ளுங்கள், நீங்கள் நம்பிக்கைக் கொண்டு அல்லாஹ்வை அஞ்சுவீர்களாயின் உங்களுக்கு மகத்தான கூலியுண்டு.” (அல்குர்ஆன் 3:177-179)
மேற்கண்ட வசனங்களில் நிராகரிப்பாளர்கள் நல்ல சூழ்நிலையில் இருந்து கொண்டிருந்தாலும் இறுதி முடிவு அவர்களுக்கு பாதகமாகவே அமையும் என்று அல்லாஹ் எச்சரிக்கிறான். குறிப்பாக இறுதி (179 வது) வசனத்தில் இறைநம்பிக்கையாளர்களின் பலவீனப்பட்ட நிலையை மாற்றிக் காட்டுவான் என்றும் வாக்களிக்கின்றான். ஆனால் அது எப்போது எப்படி என்று எல்லோருக்கும் அவன் அறிவிப்பதில்லை. வரலாறுகளைக் கவனித்தால் அல்லாஹுதஆலா இவ்வாறு நிகழ்த்தி வந்திருப்பதை அறியலாம்.
முஸ்லிம்களுக்கு எதிரான அட்டூழியங்கள் அதிகரித்துக் கொண்டே சென்றாலும் இறுதியில் அல்லாஹ் அவர்களுக்கு தன் உதவி மூலம் வெற்றியையும் உயர்வையும் வழங்கியே தீருவான் என்பது அல்லாஹ்வின் தூதர் நமக்கு வழங்கியுள்ள சுபச் செய்தியாகும். முஸ்லிம்கள் யூதர்களுடன் போரிட்டு அவர்களை கொன்று குவிக்காத வரை மறுமை நாள் வராது என்பது நபி(ஸல்) அவர்கள் கூறிய முன்னறிவிப்பு. (நூல்: முஸ்லிம் 5203)
இந்த நபிமொழியில் யூதர்கள் என்று குறிப்பிட்டிருந்தாலும் அவர்கள் அல்லாஹ்வின் மார்க்கத்திற்கும் அதைப் பின்பற்றுவோருக்கும் எதிராக அட்டூழியம் புரிவதால் இறுதி காலத்தில் அவர்களை தண்டிப்பதற்காகவும் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் மேலோங்குவதற்காகவும் இவ்வாறு அல்லாஹ்வால் நிகழ்த்தப் படுகிறது. அப்படியானால் அந்த தீயவர்களான யூதர்களின் வழிமுறையில் செல்பவர்களுக்கும் அதே தண்டனை உண்டு என்பது தெளிவு!
ஆகவே மோடியும் அவரது கொள்கையைச் சார்ந்தவர்களும் முஸ்லிம்களுக்கு இதுவரை செய்துள்ள அநியாயங்கள் அட்டூழியங்களை ஒப்புக்கொண்டு தங்களைத் திருத்திக் கொண்டால் அவர்களுக்கு நன்மையாக அமையும், இல்லாவிட்டால் அகிலங்களின் இரட்சகனாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வுடைய கீழ்வரும் எச்சரிக்கையை அவர்களுக்கு எத்தி வைக்கிறோம்.
“நிராகரிப்பாளர்கள் தாங்கள் (தண்டனையிலிருந்து) தப்பித்துக் கொண்டதாக என்ன வேண்டாம். நிச்சயமாக அவர்கள் (நம்மை எதிலும்) இயலாமலாக்க முடியாது.” (அல்குர்ஆன் 8:59)
“நிராகரிப்போரிடம் நீர் கூறுவீராக: வெகு விரைவில் நீங்கள் வெற்றி கொள்ளப்படுவீர்கள்; அன்றியும் (மறுமையில்) நரகத்தில் சேர்க்கப்படுவீர்கள், இன்னும் தங்குமிடமான அது கெட்டதாகும்.” (அல்குர்ஆன் 3:12)
-M. அப்துர்ரஹ்மான் மன்பஈ, MA.
,M.phil