இறுதி வரை ஏகத்துவம்

ஆய்வுகள் | மற்றவை by மௌலவி. ரஹ்மத்துல்லாஹ் ஃபிர்தௌஸி On Mar 26, 2023 Viewers: 300


இறுதி வரை ஏகத்துவம்

 இறுதி வரை ஏகத்துவம் 

- மௌலவி ரஹ்மத்துல்லாஹ் ஃபிர்தௌஸி

தவ்ஹீத் இந்த வார்த்தை இன்றளவும் பலருக்கு கசப்பாகவே உள்ளது தவ்ஹீதைப்பற்றி பேசினால் வேறு ஏதாவது பேசலாம் என ஒதுங்குபவர்கள் உண்டு வேறு சிலரோ தவ்ஹீதைப்பற்றி பிறகு பேசுவோம் இங்கு பேசப்பட வேண்டிய பல உண்டு என தவிர்ப்பார்கள் சமீப காலமாக தவ்ஹீத் வேண்டாம் அதிகாரத்தை பேசுவோம் அதற்கான வழிகளை தேடுவோம் அது தான் முக்கியம் என ஒரு கூட்டம் போராட்டமும் தாக்குதலும் தான் இலட்சியம் என இளைய சமூகத்திற்கு மத்தியில் மார்க்கத்தை தவறாக போதித்து கொண்டிருக்கும் பல தவறான சிந்தனை கொண்ட கூட்டங்களும் உண்டு.

ஆனால் நமது தலையாய பணி இறுதி வரை நிலைத்திருக்கக்கூடிய அடிப்படை தவ்ஹீத் தான் தவ்ஹீத் என்ற அடிப்படை இல்லாமல் எதை போதித்தாலும் எதன் பக்கம் அழைத்தாலும் அது வெற்றியின் பக்கம் நம்மை அழைத்துச் செல்லாது. அல்லாஹ் தவ்ஹீத் இல்லாமல் எந்த செயல்களை செய்தாலும் நன்மையில்லை என தெளிவாக போதிக்கின்றான்.


மேற்கிலோ கிழக்கிலோ உங்கள் முகங்களை நீங்கள் திருப்பி விடுவதனால் மட்டும் நன்மை செய்தவர்களாக ஆகிவிடமாட்டீர்கள். (உங்களில்) எவர் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் (மறுமை நாளையும்), மலக்குகளையும், வேதங்களையும், நபிமார்களையும், நிச்சயமாக நம்பிக்கை கொண்டு (தனக்கு விருப்பமுள்ள) பொருளை அல்லாஹ்வுக்காக உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும், யாசகர்களுக்கும்,   விடுதலையை விரும்பிய (அடிமைகள், கடன்காரர்கள் ஆகிய) வர்களுக்கும் கொடுத்து (உதவி செய்து,) தொழுகையையும் கடைப்பிடித்து தொழுது, ஜகாத்து (மார்க்க வரியு)ம் கொடுத்து வருகின்றாரோ அவரும்; வாக்குறுதி செய்த சமயத்தில் தங்களுடைய வாக்குறுதியை(ச் சரிவர) நிறைவேற்றுபவர்களும்; கடினமான வறுமையிலும், நோய் நொடிகளிலும், கடுமையான போர் நேரத்திலும் பொறுமையைக் கைக்கொண்டவர்களும் ஆகிய (இவர்கள்தாம் நல்லோர்கள்.) இவர்கள்தாம் (அல்லாஹ்வை நம்பிக்கை கொள்வதில்) உண்மையானவர்கள். இவர்கள்தாம் இறை அச்சமுடையவர்கள்!

(அல்குர்ஆன் : 2:177)


மேற்கூறிய வசனத்தின் முதல் பகுதியில் ஈமான் என்ற அடிப்படை இல்லாமல் நமது எந்த செயலும் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை என்பதை பார்க்க முடிகிறது.


ஆனால் இன்றைய சூழலில் கிலாபத் மற்றும் ஜிஹாத் என்ற பெயரில் மக்களுக்கு மத்தியில் பிரச்சாரம் செய்யும் ஒரு கூட்டம் தவ்ஹீத் தான் முதல் அடிப்படை என்பதை சொல்வதற்கு தயாராக இல்லை ஏனெனில் அப்படி சொன்னால் தாங்கள் சொல்லும் தவறான வாதங்கள் அடிபட்டு போய்விடும் அப்படி தவ்ஹீதை புரிய வரும் போது இவர்கள் கற்றுக்கொடுக்கும் தவறான போதனைகளை மக்கள் விளங்கிக் கொள்வார்கள் அதனால் தான் தலையும் இல்லாமல் வாலும் இல்லாமல் மார்க்கத்தை போதிக்கின்றார்கள்.


அல்லாஹ்வும் சரி அல்லாஹ்வின் தூதரும் சரி அவர்கள் நம்மிடம் இறுதி இருக்க வேண்டிய அடிப்படை தவ்ஹீத் மட்டுமே தவ்ஹீத் சரியாக இருந்தால் அனைத்து உங்களை தேடிவரும் என்பதை போதிக்கின்றார்கள்.

மனிதனை படைத்ததும் இறைத்தூதர்களை அனுப்பியது தவ்ஹீத் என்ற இக்கொள்கையை நிலைநாட்டத்தானே தவிர வேறு எதற்கும் இல்லை.


கிலாபத்தையும் ஜிஹாதையும் பிரதான அழைப்பாக கொண்டு மனிதன் படைக்கப்பட்டான் என்றும் இதற்காகத்தான் தூதர்கள் அனுப்பப்பட்டார்கள் என ஏதேனும் செய்திகள் குர்ஆனிலும் சுன்னாவிலும் உண்டா?


தவ்ஹீத் என்ற அடிப்படை இல்லாமல் கிலாபத் ஏற்படுத்தப்பட்ட வரலாறு உண்டா அல்லது கிலாபத்தை நோக்கி தஃவா நடைபெற்றதா? 


அல்லாஹ் கூறும் செய்திகளையும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நடைமுறையும் பார்த்தால் இதை நாம் தெளிவாக விளங்கலாம் .




அல்லாஹ் கூறுகிறான்

وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْاِنْسَ اِلَّا لِيَعْبُدُوْنِ‏

ஜின்களையும், மனிதர்களையும் (எனக்கு வழிப்பட்டு) என்னை வணங்குவதற்கன்றி (வேறெதற்காகவும்) நான் படைக்கவில்லை.

(அல்குர்ஆன் : 51:56)


وَلَـقَدْ بَعَثْنَا فِىْ كُلِّ اُمَّةٍ رَّسُوْلًا اَنِ اعْبُدُوا اللّٰهَ وَاجْتَنِبُوا الطَّاغُوْتَ‌ۚ فَمِنْهُمْ مَّنْ هَدَى اللّٰهُ وَمِنْهُمْ مَّنْ حَقَّتْ عَلَيْهِ الضَّلٰلَةُ‌ ؕ فَسِيْرُوْا فِىْ الْاَرْضِ فَانْظُرُوْا كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُكَذِّبِيْنَ‏

(பூமியின் பல பாகங்களிலும் வசித்திருந்த) ஒவ்வொரு வகுப்பினருக்கும் நிச்சயமாக நாம் தூதரை அனுப்பியிருக்கிறோம். (அத்தூதர்கள் அவர்களை நோக்கி) "அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். (வழி கெடுக்கும்) ஷைத்தான்களிலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள் என்(று கூறிச் சென்)றார்கள். அல்லாஹ்வின் நேர்வழியை அடைந்தவர்களும் அவர்களில் உண்டு; வழி கேட்டிலேயே நிலைபெற்றோரும் அவர்களில் உண்டு. ஆகவே, நீங்கள் பூமியில் சுற்றித் திரிந்து (நபிமார்களைப்) பொய்யாக்கிய வர்களின் முடிவு எவ்வாறாயிற்று என்பதைப் பாருங்கள்.

(அல்குர்ஆன் : 16:36)


وَلَقَدْ اَرْسَلْنَا نُوْحًا اِلٰى قَوْمِهٖۤ اِنِّىْ لَـكُمْ نَذِيْرٌ مُّبِيْنٌۙ‏

மெய்யாகவே நாம் "நூஹை" அவருடைய மக்களிடம் (நம்முடைய தூதராக) அனுப்பி வைத்தோம். (அவர், அவர்களை நோக்கி) "நிச்சயமாக நான் உங்களுக்குப் பகிரங்கமாகவே அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறேன்.

(அல்குர்ஆன் : 11:25)


اَنْ لَّا تَعْبُدُوْۤا اِلَّا اللّٰهَ‌ؕ اِنِّىْۤ اَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ اَلِيْمٍ‏

அல்லாஹ்வையன்றி (மற்றெதையும்) நீங்கள் வணங்கக் கூடாது. (வணங்கினால்) துன்புறுத்தும் நாளின் வேதனை  (நிச்சயமாக) உங்களுக்கு (வருமென்று) நான் அஞ்சுகிறேன்" (என்று கூறினார்.)

(அல்குர்ஆன் : 11:26)


وَاِلٰى عَادٍ اَخَاهُمْ هُوْدًا‌ ؕ قَالَ يٰقَوْمِ اعْبُدُوا اللّٰهَ مَا لَـكُمْ مِّنْ اِلٰهٍ غَيْرُهٗ‌ ؕ اِنْ اَنْتُمْ اِلَّا مُفْتَرُوْنَ‏

"ஆது" (என்னும்) மக்களிடம் அவர்களுடைய சகோதரர் "ஹூதை" (நம்முடைய தூதராக அனுப்பி வைத்தோம். அவர்களை நோக்கி) அவர் கூறினார்: "என்னுடைய மக்களே! அல்லாஹ் ஒருவனையே நீங்கள் வணங்குங்கள். அவனைத் தவிர வேறு இறைவன் உங்களுக்கு இல்லை. (வேறு இறைவன் உண்டென்று கூறும்) நீங்கள் கற்பனையாகப் பொய் கூறுபவர்களே.

(அல்குர்ஆன் : 11:50)


‌وَاِلٰى ثَمُوْدَ اَخَاهُمْ صٰلِحًا‌ۘ قَالَ يٰقَوْمِ اعْبُدُوا اللّٰهَ مَا لَـكُمْ مِّنْ اِلٰهٍ غَيْرُهٗ‌ ؕ هُوَ اَنْشَاَكُمْ مِّنَ الْاَرْضِ وَاسْتَعْمَرَكُمْ فِيْهَا فَاسْتَغْفِرُوْهُ ثُمَّ تُوْبُوْۤا اِلَيْهِ‌ ؕ اِنَّ رَبِّىْ قَرِيْبٌ مُّجِيْبٌ‏

"ஸமூது" (என்னும் மக்)களிடம் அவர்களுடைய சகோதரர் "ஸாலிஹை" (நம்முடைய தூதராக அனுப்பி வைத்தோம். அவர் அவர்களை நோக்கி) "என்னுடைய மக்களே! அல்லாஹ் ஒருவனையே நீங்கள் வணங்குங்கள்; உங்களுக்கு அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவனே உங்களைப் பூமியிலிருந்து படைத்தான். அதிலேயே அவன் உங்களை வசிக்கவும் செய்தான். ஆதலால், நீங்கள் அவனிடமே மன்னிப்பைக் கோரி அவன் பக்கமே திரும்புங்கள். நிச்சயமாக என்னுடைய இறைவன் (உங்களுக்கு) மிகச் சமீபமானவனாகவும் (பிரார்த்தனைகளை) அங்கீகரிப்பவனாகவும் இருக்கின்றான்" என்று கூறினார்.

(அல்குர்ஆன் : 11:61)


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முஆத் ரலி அவர்களை யமனுக்கு அனுப்பும் போது முதலில் அம்மக்களுக்கு தவ்ஹீதை எடுத்து சொல்லும்படி தான் கட்டளையிட்டார்கள் அதிகாரம் நம்மிடம் வந்துவிட்டது நாம் அவர்களிடம் போர் புரியுங்கள் என்று கட்டளையிடவில்லையே. 


கைபர் போர் சமயத்தில் கொடியை அலி ரலி அவர்களிடம் தந்து கண்ட இடங்களில் அவர்களை வெட்டிக் கொள்ளுங்கள் என்று சொன்னார்களா அல்லது உன் மூலம் ஒருவர் நேர்வழி அடைவது உலகத்தை விட சிறந்தது அதனால் முதலில் தவ்ஹீதை எடுத்துரையுங்கள் என்று சொன்னார்களா?


இஸ்லாமிய பிரச்சாரத்தின் ஆரம்பத்திலும் சரி அரபு தீபகற்பமே அவர்களுக்கு கீழாக வந்த போதும் தவ்ஹீத் மட்டுமே இலட்சியம் இதை நோக்கி பயணித்தால் எல்லாவற்றையும் அல்லாஹ் நம் வசப்படுத்துவான் என்பதில் இறுதி வரை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உறுதியாக இருந்தார்கள் 

அதே இலட்சியத்தோடு பயணித்தால் தான் நாமும் வெற்றி பெற முடியும் இல்லையென்றால் தோல்வியும் இழப்பும் தான் மிஞ்சும்.


قُلْ يٰۤـاَهْلَ الْكِتٰبِ تَعَالَوْا اِلٰى كَلِمَةٍ سَوَآءٍۢ بَيْنَـنَا وَبَيْنَكُمْ اَلَّا نَـعْبُدَ اِلَّا اللّٰهَ وَلَا نُشْرِكَ بِهٖ شَيْئًا وَّلَا يَتَّخِذَ بَعْضُنَا بَعْضًا اَرْبَابًا مِّنْ دُوْنِ اللّٰهِ‌ؕ فَاِنْ تَوَلَّوْا فَقُوْلُوا اشْهَدُوْا بِاَنَّا مُسْلِمُوْنَ‏

(நபியே! பின்னும் அவர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள்: "வேதத்தை உடையவர்களே! நமக்கும் உங்களுக்கும் ஒரு சமத்துவமான விஷயத்தின் பக்கம் வருவீர்களாக! (அதாவது) நாம் அல்லாஹ்வைத் தவிர வேறொன்றையும் வணங்க மாட்டோம். நாம் அவனுக்கு யாதொன்றையும் இணையாக்க மாட்டோம். நம்மில் ஒருவரும் அல்லாஹ்வையன்றி எவரையும் இறைவனாக எடுத்துக் கொள்ள மாட்டோம்" (என்று கூறுங்கள். நம்பிக்கையாளர்களே! இதனையும்) அவர்கள் புறக்கணித்தால் (அவர்களை நோக்கி) "நிச்சயமாக நாங்கள் (அவன் ஒருவனுக்கே) வழிப்பட்டவர்கள் என்று நீங்கள் சாட்சி கூறுங்கள்!" என்று நீங்கள் கூறிவிடுங்கள்.

(அல்குர்ஆன் : 3:64)