கேள்வி:

கேள்வி 15: கடனை திருப்பி வாங்காமல் ஜகாத்தில் கழித்து கொள்ளலாமா?

Answer by admin On June 20, 2020

பதில்:

தாராளமாக ஒரு மனிதர் தான் கொடுத்த கடன் தொகையை அல்லாஹ்வின் பாதையில் நல்ல வழியில்  செலவிட்டதாக 

நிய்யத் வைத்து அத்தொகையை அப்படியே விட்டு விட்டு தன் கையில் மொத்தம் இருக்கக்கூடிய பணத்தை கணக்கிட்டு அதற்கு எவ்வளவு ஸகாத் கொடுக்க வேண்டுமோ அதை மட்டும் கொடுத்தால்  போதுமானது. 


அல்லது இதையே இன்னொரு விதத்தில் செய்யலாம், அம்மனிதர் கொடுத்த கடன் தொகையையும் அவர் கையில் மீதமுள்ள மொத்த தொகையையும் ஒன்று சேர்த்து கணக்கிட்டு அதற்கு எவ்வளவு ஸகாத் கொடுக்க வேண்டி வருகிறதோ  அஸ்ஸகாத் தொகையில்  கடன் கொடுத்ததாக நிய்யத் வைத்து அச் சகோதரரிடம் கடனை திருப்பி தர வேண்டாம் என்று சொல்லி விடலாம். 

ஏனென்றால் கடன் பெற்றவர் கடனை திருப்பி  தர இயலாமல் இருக்கும்பொழுது பெற்ற கடனை அடைப்பதற்காக அவர் ஸகாத் பெறும் தகுதி உடையவராக ஆகிவிடுகிறார்.


 மேலும் கடன் கொடுத்தவர் தான் கொடுத்த கடனை, அவர் தர வேண்டிய ஸகாத்தாக நிய்யத் வைத்து அதனை கழித்து விடலாம்.


- ஷேய்க் அப்துர் ரஹ்மான் மன்பஈ.M.phil


Youtube - Ahlul Islam : கேள்வி 48. ஆடியோவிலிருந்து எடுக்கப்பட்டது.

உங்கள் கேள்விகளை ( ? ) இங்கே கேட்க்கலாம்.