கேள்வி:

கேள்வி-2: உளூ செய்த பின்பு மேலாடை அணியாமல் இருதோள்பட்டைகள் திறந்த வண்ணம் உட்கார்ந்து குர்ஆன் ஓதவும் திக்ரு செய்யவும் நேரிடுகிறது. இது கூடுமா? இத்தருணத்தில் தொலைக்காட்சியில் செய்திகள், விவசாய நிகழ்சிகள், வானிலை செய்திகள், இஸ்லாமிய நிகழ்சிகள் உள்ளிட்டவற்றை பார்ப்பது உளூவிற்கு ஊறு விளைவிக்குமா? – அ. காஜா நிஜாமுதீன், ஏர்வாடி.

Answer by admin On April 14, 2020

பதில்:

குர்ஆன் ஓதுவதற்கும் திக்ரு செய்வதற்கும் தோள்புஜத்தை மறைத்திருக்க வேண்டுமென்று மார்க்கத்தில் சொல்லப்படவில்லை. தொழும்போது இரு தோள்புஜங்களையும் மறைத்திருக்க வேண்டுமென ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது. “தன்னிரு தோள்புஜங்கள் மீது எதுவும் இல்லாத நிலையில் உங்களில் ஒருவர் தோழா வேண்டாம்.” என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (புகாரி 359)

பொதுவாக பிறர் பார்க்கும் போது மேலாடையுடன் இருந்தால் அல்லது தோள்புஜங்கள் மீது துணி இருந்தால் நன்றாக இருக்கும்.

உளூவுடன் இருக்கும்போது தொலைகாட்சி நிகழ்சிகள் பார்ப்பது உளூவிற்கு பாதகம் விளைவிக்காது. பார்க்கக் கூடாதவற்றை எல்லா நிலைகளிலும் தவிர்க்க வேண்டும்.

 

உங்கள் கேள்விகளை ( ? ) இங்கே கேட்க்கலாம்.