கேள்வி:

கேள்வி-5: இஸ்லாத்தில் மன்னராட்சி முறை தடை செய்யப்பட்டதா? நபி(ஸல்) அவர்கள் ஆட்சித் தலைவராகத் தானே இருந்தார்கள்?

Answer by admin On April 14, 2020

பதில்:

இஸ்லாத்தில் மன்னராட்சி முறை தடை செய்யப்பட்டதல்ல, அல்லாஹ்வின் வேதத்தையும் நபியின் வழிகாட்டுதலையும் நடைமுறைப் படுத்தி ஆட்சி செய்ய வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆட்சித் தலைவர் என்ற நிலையில் இருந்தாலும் அவர்களுக்குப் பின் ஆட்சித் தலைவர் என்ற நிலையில் ஆட்சியாளர்கள் வருவார்கள் என்பதை உணர்த்தியிருந்தாலும் மன்னராட்சி முறையையும் அங்கீகரிக்கக் கூடிய வார்த்தைகள் குர்ஆனிலும் ஹதீஸிலும் காணப்படுகின்றன.

பனூ இஸ்ராயீல்களுக்குள் அரசர்களை ஆக்கிவைத்ததை அல்லாஹ்வின் சிறப்புக்குரிய அருள் என மூஸா(அலை) சொல்லியதை அல்லாஹ் கூறிக்காட்டுகிறான். (அல்குர்ஆன் 5:20)

சுலைமான்(அலை) அவர்கள் தாவூத் (அலை) அவர்களின் அரசாட்சியை வாரிசு அடிப்படையில் பெற்றதாகவும் அல்லாஹ் கூறுகிறான். (அல்குர்ஆன் 27:16)

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “எனக்குப் பின் கிலாஃபத் முப்பது வருடங்கள் இருக்கும் அதன் பின்பு அரசாட்சி ஏற்ப்படும்.” (அபூதாவூத் 4648)

இங்கு அரசாட்சி ஏற்ப்படும் என்று பொதுவாக சொல்லியிருக்கிறார்கள். இஸ்லாமிய முறைப்படி அந்த அரசாட்சி அமைந்தால் அது நல்ல அரசாட்சி. இஸ்லாத்திற்கு மாற்றமாக அமைந்தால் அது தீய அரசாட்சி. அவ்வளவுதான்!

உங்கள் கேள்விகளை ( ? ) இங்கே கேட்க்கலாம்.