கடந்த ஆகஸ்ட் செப்டம்பர் மாதங்களில் ஆர் எஸ் எஸ் ஊழியர் ஒருவர் இந்த மூன்று அமைப்புகளையும் தடை செய்ய வேண்டும் என்று அறிவித்திருந்த செய்தி முகநூல் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட இணைய ஊடகங்களில் வெளியாகி இருந்தது. ஆனால் நம் நாட்டின் முக்கிய செய்தி பத்திரிகைகள் மற்றும் பிரபல மீடியாக்கள் ஆகியவற்றில் இந்த செய்தி வெளிவரவில்லை. பயங்கரவாத அமைப்புகளின் பயங்கரவாத செயல்களை வெளிப்படுத்த இந்த செய்தி நிறுவனங்கள் விரும்பவில்லை. அப்படியானால் இந்த செய்தி நிறுவனங்களும் பயங்கரவாதத்தின்  ஆதரவாளர்கள் தான் என்று தெரிந்து கொள்ள முடிகிறது.

       2000 ஆம் ஆண்டுகளில் ஆர் எஸ் எஸ் அமைப்பு எப்படி எல்லாம் குண்டு வெடிப்புகளை நடத்தினார்கள் என்பது பற்றியும் ஆபத்தான ஆயுதங்களை பயன்படுத்தும் பயிற்சியை வழங்கியது பற்றியும் மீண்டும் வலியுறுத்தி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கர்நாடக உள்துறை அமைச்சர் பிரியங் கார்கே ஆகியோருக்கு அந்த முன்னாள் ஆர் எஸ் எஸ் பிரச்சாரகர் கடிதம் எழுதியுள்ளார்.

          பயங்கரவாத ஆர் எஸ் எஸ் கூட்டத்தின் முன்னாள் பிரச்சாரகரான எஸ்வந்த் சக்தேவ் ஷிண்டே என்பவர் தான் அவர். ஆர் எஸ் எஸ், வி எச் பி, பஜ்ரங்தல் ஆகிய இயக்கங்களை பயங்கரவாத அமைப்புகள் என அறிவிக்க வேண்டுமென கோரிக்கை வைத்து கர்நாடக உள்துறை அமைச்சர் பிரியங் கார்கே மற்றும் ஒன்றிய உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோருக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.

            இதற்கு முன்பு ஆகஸ்ட் 2022 ல் மகாராஷ்டிராவின் நாந் தேடில் உள்ள சி பி ஐ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் நாடு முழுவதும் தொடர் குண்டு வெடிப்புகளை நடத்த ஆர் எஸ் எஸ் மற்றும் வி ஹெச் பி உறுப்பினர்கள் ( இதில் தற்போது வி ஹெச் பியின் பொதுச் செயலாளராக உள்ள பரண்டேவும் அடக்கம்) திட்டமிட்ட கூட்டங்களில் தான் பங்கேற்றதாக ஷிண்டே குறிப்பிட்டு இருந்தார்.
             அத்துடன் 2003 ஆம் ஆண்டு பரண்டே என்பவரின் வழிகாட்டுதலில் சுமார் 20 பேருடன் இணைந்து தானும் வெடிகுண்டு தயாரிப்பதற்கான பயிற்சியை பெற்றதாக ஷிண்டே பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

        1990 லிருந்து ஆர் எஸ் எஸ்ஸில் முழுநேர ஊழியராக பணியாற்றி வந்த ஷிண்டே, குண்டு தயாரிப்பு மற்றும் பயிற்சி அளிக்கும் குழுவில் இணையுமாறு தன்னிடம் கூறப்பட்ட போது அந்த அமைப்பில் இருந்து விலகியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

           ஷிண்டே தனது கடிதத்தில் அஜ்மீர் ஷெரீப் தர்கா குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக இந்திரேஷ் குமார் மீதும் 2008 ஆம் ஆண்டு மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் விசாரணையை எதிர்கொண்டு இறுதியில் விடுவிக்கப்பட்ட கர்னல் பிரசாத் புரோகித் மற்றும் முன்னாள் பி ஜே பி எம்.பி பிரக்யா சிங் தாகூர் ஆகியோரையும் குற்றவாளிகள் என்று குறிப்பிட்டுள்ளார்.

   (மக்கள் ரிப்போர்ட் வார இதழ் - செப்டம்பர் 16 - 24/2026)
    மேற்கண்ட செய்தியில் முன்னாள் ஆர் எஸ் எஸ் ஊழியர் ஷிண்டே சொல்லி இருப்பது போல் அதிகமான பயங்கரவாத குண்டு வெடிப்பு செயல்களை ஆர் எஸ் எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகள் செய்துள்ளனர். 
இந்த சங் பயங்கரவாத கூட்டத்தின் பயங்கரவாத செயல்களில்  சிலவற்றை எஸ்.எம்.முஷ்ரிப் ஐ பி எஸ் ( முன்னாள் காவல்துறை மண்டல தலைவர், மகாராஷ்டிரா) ஆய்வு செய்து  ஒரு நூலாக தொகுத்திருக்கிறார்கள். அந்த நூலின் பெயர் "இந்தியாவின் ஒரே தீவிரவாத அமைப்பு" என்பதாகும். 
           அதில் இந்த பயங்கரவாத கூட்டங்கள் நடத்திய குண்டுவெடிப்புகளை விவரமாக எழுதி இருக்கிறார்கள் வாங்கி படித்துப் பார்க்கவும்.

            அதில் இந்த பயங்கரவாத கூட்டங்கள் செய்த 18 குண்டு வெடிப்புகளின் விவரத்தை அட்டவணைப்படுத்தி வெளியிட்டு இருக்கிறார்கள். 
அவை: 
1. அஜ்மீர் (ராஜஸ்தான்) 2007
2. மக்கா மஸ்ஜித் ஹைதராபாத்( 2007
3. சம்ஜோதா எக்ஸ்பிரஸ் (ஹரியானா2007) 
4. மாலேகான்( மகாராஷ்டிரா 2006) 
5. மாலேகான் (மகாராஷ்டிரா 2008) 
6. மொடாசா( குஜராத்  2008) 
7. நான்டேட்( மகாராஷ்டிரா)(2006) 
8. பர்பணீ ( மகாராஷ்டிரா2003) 
9. ஜாலானா (மகாராஷ்டிரா 2004) 
10. பூர்ணா (மகாராஷ்டிரா 2004) 
11. லாம்பா கேரா (போபால்)2003) 
12. கான்பூர் (உ.பி 2008) 
13. கண்ணூர் (கேரளா 2008) 
14. தென்காசி (தமிழ்நாடு 2008) 
15. பன்வேல் (மகாராஷ்டிரா 2008) 
 16. தானா      (மகாராஷ்டிரா 2008) 
17. வாஷி ( மகாராஷ்டிரா 2008) 
18. மட்காவ்ன் (கோவா 2009)

           இந்த கொடுமையான குண்டுவெடிப்பு பயங்கரவாதத்தில் ஈடுபட்ட அமைப்புகள்:

ஆர் எஸ் எஸ்
அபிநவ் பாரத்
ஜெய் வந்தே மாதரம்
பஜ்ரங்தலம்
சனாதன் சன்ஸ்த்த
    நூல்: இந்தியாவின் ஒரே  தீவிரவாத அமைப்பு. 
பக்கம்: 57,58.
இந்த சாத்தான்கள் பரிவாரத்தின் அட்டூழியங்கள் மிக அதிகமாக உள்ளன இப்போதும் பலவித கொடுமைகளில் ஈடுபட்டு வருவதை நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். 
         இந்த பயங்கரவாத கூட்டத்திடமிருந்து நமது தாயகத்தை காப்பாற்ற வேண்டும். அதற்கு  இந்த தேசத்தில் உள்ள இந்துக்கள் முஸ்லிம்கள் கிருத்துவர்கள் உள்ளிட்ட எல்லா மக்களும் இணைந்து செயல்பட வேண்டும் அப்போதுதான் நம் நாட்டில் சாந்தியும் சமாதானமும் நிலைத்திருக்கும் எல்லாம் வல்ல இறைவன் அதற்கு நல்ல அருள் புரியட்டும்.