பதில்

பெண்களுக்கு பெண்கள் இமாமத் செய்யலாம் என நபி(ஸல்) அவர்கள் ஒரு ஸஹாபிய பெண்ணமணிக்கு அவர்கள் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு அனுமதி கொடுத்திருக்கிறார்கள் இந்த செய்தி (ஸஹீஹ் இப்னு ஹுஸைமா)வில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அன்னை ஆயிஷா(ரலி) ஃபர்ளான‌ தொழுகையை ஜமாத்தாக தொழுகை நடத்தியதும் அவர்கள் அந்த பெண்களோடு பெண்களாக நடுவில் இருந்தார்கள் என்றும் (ஸுனனுல் குப்ரா) என்கிற ஹதீஸ்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அன்னை உம்மு ஸலமா(ரலி) அவர்களும் ஜமாத்தாக தொழுகை நடத்தியதும் அவர்கள் அந்த பெண்களோடு பெண்களாக நடுவில் இருந்தார்கள் என்றும் (ஸுனனுல் குப்ரா) ஹதீஸ்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது பெண்கள் ஜமாத்தாக தொழுகை நடத்தலாம் ஆனால் ஆண்கள் போல் முன்னிறுத்தி அல்லாமல் பெண்களோடு பெண்களாக வரிசையில் நின்று தொழுகை நடத்த வேண்டும்.

- ஷேய்க் அப்துர் ரஹ்மான் மன்பஈ.M.phil

Youtube - Ahlul Islam : கேள்வி 51, ஆடியோவிலிருந்து எடுக்கப்பட்டது.