பதில்
ஆண்கள் ஆபரணங்கள் அணியலாம் என்று நேரடியான ஹதீஸ்களில் நாம் காண முடியவில்லை, நபி(ஸல்) கூறினார்கள் ஆண்களில் பெண்களுக்கு ஒப்பாக நடக்க கூடியவர்களையும் பெண்களில் ஆண்களுக்கு ஒப்பாக நடக்க கூடியவர்களையும் நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள் என்று புகாரி ஹதீஸ்களில் காணமுடிகிறது. ஆண்/பெண் ஒருவரையொருவர் ஒப்பாக கூடாது இரு பாலினத்திற்கும் அவரவருக்கு பிரத்தியேகம் இருக்கிறது பெண்கள் பயன்படுத்தும் நகையை போல ஆண்கள் பயன்படுத்துவது கூடாது என்பதற்கு இந்த ஹதீஸ் ஆதாரமாக இருக்கிறது செயின்/ கைவளை பெரும்பாலும் பெண்கள் உபயோகப்படுத்தும் ஆபரணங்களாக இருக்கிறது அதனால் ஆண்கள் பயன்படுத்துவது பெண்களுக்கு ஒப்பாகும் என்ற காரணத்தினால் ஆண்கள் அணிவதை தவிர்க்க வேண்டும்.
- ஷேய்க் அப்துர் ரஹ்மான் மன்பஈ.M.phil
Youtube - Ahlul Islam : கேள்வி 04, ஆடியோவிலிருந்து எடுக்கப்பட்டது.