பதில்
"அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்" என்று நீண்டு தொடங்கும் தக்பீரானது நபி (ஸல்) அவர்கள் கூறியதாக (தாரகுத்னீ) என்கிற ஹதீஸில் பதிவு செய்யப்பட்டுள்ளது அது பலகீனமான ஹதீஸாக பார்க்கப்படுகிறது. மேலும் சஹாபாக்கள் மற்றும் இப்னு மஸுத்(ரழி) இதே தக்பீரை கூறியதாக (முஸன்னஃப் இப்னு அபிஷைபா) என்கிற ஹதீஸில் ஆதாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
அவற்றை தொடர்ந்து ஃபிக்ஹ் ஸுன்னாஹ் நூலில் ஸல்மான்(ரழி) அவர்கள் "அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் கபீரா" இப்படி தக்பீர் கூறியதாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது சஹாபாக்கள் தக்பீர் சொன்னது உறுதியான செய்தி. அவர்களின் வழியாக மாற்றுக்கருத்து இல்லாமல் இவற்றை ஆதாராமாக கருதி அதனை பின்பற்ற வேண்டும்.
- ஷேய்க் அப்துர் ரஹ்மான் மன்பஈ.M.phil
Youtube - Ahlul Islam : கேள்வி 100, ஆடியோவிலிருந்து எடுக்கப்பட்டது.