கேள்வி:

கேள்வி17: பைத்துல் மஃமூர் என்றால் என்ன அதில் மலக்குகள் தவாஃப் செய்கிறார்களா?

Answer by admin On June 20, 2020

பதில்:

பைத்துல் மஃமூர் என்பது நபி(ஸல்) அவர்கள் மிஃராஜ் செல்லும்போது 7வது வானத்தில் அந்த பைத்துல் மஃமூர் பள்ளிவாசலை கண்டதாக கூறுகிறார்கள் அதில் ஒவ்வொரு நாளும் 70,000 மலக்குமார்கள் அல்லாஹ்வை வணங்குகிறார்கள் ஒரு சமயம் அதில் இருந்து வெளியேறிய பிறகு மறுசமயம் கியாமத் நாள் வரை அந்த பைத்துல் மஃமூரில் அவர்களால் செல்ல இயலாது இவ்வாறு ஒவ்வொரு நாளும் புதியதாக 70000 மலக்குமார்கள் அந்த பள்ளியில் வருகை தந்து அல்லாஹ்வை வணங்குவார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் இதனுடைய சிறப்பைப் பற்றிக் கூறுவதாக ஹதீஸ்களில் காண்கிறோம் மேலும் அலி(ரலி) கூறியதாக இந்த பைத்துல் மஃமூர் காஃபாவின் நேர்கோட்டில் 7வது வானத்தில் இருப்பதாக ஒரு அறிவிப்புகளில் காண்கிறோம். நபி(ஸல்) சொன்னதாக முர்ஸலான அறிவிப்பு இந்த செய்தி ஒரு தாபியீன் சொல்லக்கூடிய ஸஹாபி பெயர் விடுபட்டு வரக்கூடிய ஹதீஸ்களில் கஃபாவுக்கு நேராக மேலே பைத்துல் மஃமூர்  இருக்கிறது என்ற செய்தி பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இதை வைத்துப் பார்க்கும் பொழுது கஃபாவிற்கு நேராக பைத்துல் மஃமூர் இருப்பது உறுதியாகிறது.

 ஆக இந்த செய்திகள் தான் பதிவு செய்யப்பட்டிருக்கிறது அதனை சுற்றி மலக்குமார்கள் தவாஃப் செய்கிறார்கள் என்று ஹதீஸ்களில் பதிவு செய்யப்படவில்லை பொதுவாக அறிஞர்களுல் சொல்லப்படுவது இந்த காஃபாவிற்கு நேர்கோட்டில் 7வது வானத்தில் இருப்பதினால் மலக்குமார்கள் அதனை தவாஃப் செய்கிறார்கள் என்று கூறப்படுகிறது ஆனால் நபி(ஸல்) அவர்கள் கூறியதாவது மலக்குமார்கள் தொழுவது உறுதியான செய்தி ஆனால் தவாஃப் செய்வது என்பது எந்த ஹதீஸ்களிலும் பதிவு செய்யப்படவில்லை.


- ஷேய்க் அப்துர் ரஹ்மான் மன்பஈ.M.phil


Youtube - Ahlul Islam : கேள்வி 49, ஆடியோவிலிருந்து எடுக்கப்பட்டது.

உங்கள் கேள்விகளை ( ? ) இங்கே கேட்க்கலாம்.