கேள்வி:

கேள்வி 18 : நோன்பு வைத்த நிலையில் ஊசி போடலாமா? சத்து ஊசி, INSULIN, INHALER?

Answer by admin On June 20, 2020

பதில்:

நோன்பு வைத்த நிலையில் உணவு உட்கொள்ளக்கூடாது மற்றும் மருந்து வகைகள், tonic போன்ற வகைகள் உட்கொள்ளக்கூடாது.

நவீன அடிப்படையில் ஆய்வு செய்யும் ஆய்வாளர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால் உடல்நலக்குறைவால் ஊசி போடுவது ,  ஆஸ்த்துமா நோய் போன்ற பாதிப்பு இருந்தால் Inhaler பயன்படுத்துவது, உணவு உட்கொள்வதற்கு ஈடாகாது அதனால் அதை எடுத்துக்கொள்ளலாம் மற்றும் நோய்க்காக ரத்தப் பரிசோதனையும் செய்து கொள்ளலாம் இதனால் நோன்பு வைப்பதற்கு எந்த பாதிப்பும் இல்லை. 

ஆனால் நோன்பில் எனர்ஜியோடு இருப்பதற்காக ஊட்டச்சத்து போன்ற ஏதேனும் ஊசியை எடுத்துக் கொண்டால் நோன்பு முறிந்துவிடும்.


- உஸ்தாத் சதாம் ஹுஸைன் ஹஸனி


Youtube - Ahlul Islam : கேள்வி 89, ஆடியோவிலிருந்து எடுக்கப்பட்டது.

உங்கள் கேள்விகளை ( ? ) இங்கே கேட்க்கலாம்.