கேள்வி:

கேள்வி 22: ஆண்கள் செயின் கைவளை/காப்பு அணியலாமா.?

Answer by admin On June 20, 2020

பதில்:

ஆண்கள் ஆபரணங்கள் அணியலாம் என்று நேரடியான ஹதீஸ்களில் நாம் காண முடியவில்லை, நபி(ஸல்) கூறினார்கள் ஆண்களில் பெண்களுக்கு ஒப்பாக நடக்க கூடியவர்களையும் பெண்களில் ஆண்களுக்கு ஒப்பாக நடக்க கூடியவர்களையும் நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள் என்று  புகாரி ஹதீஸ்களில் காணமுடிகிறது. ஆண்/பெண் ஒருவரையொருவர் ஒப்பாக கூடாது இரு பாலினத்திற்கும் அவரவருக்கு பிரத்தியேகம் இருக்கிறது பெண்கள் பயன்படுத்தும் நகையை போல ஆண்கள் பயன்படுத்துவது கூடாது என்பதற்கு இந்த ஹதீஸ் ஆதாரமாக இருக்கிறது செயின்/ கைவளை  பெரும்பாலும் பெண்கள் உபயோகப்படுத்தும் ஆபரணங்களாக இருக்கிறது அதனால் ஆண்கள் பயன்படுத்துவது பெண்களுக்கு ஒப்பாகும் என்ற காரணத்தினால் ஆண்கள் அணிவதை தவிர்க்க வேண்டும்.


- ஷேய்க் அப்துர் ரஹ்மான் மன்பஈ.M.phil

Youtube - Ahlul Islam : கேள்வி 04, ஆடியோவிலிருந்து எடுக்கப்பட்டது.

உங்கள் கேள்விகளை ( ? ) இங்கே கேட்க்கலாம்.