ஆபாசத்தை தவிர்ந்து கொள்வது எப்படி...?
-மௌலவி யூனுஸ் தப்ரீஸ்
மனிதன் பலவிதமான பாவங்களுக்கு மத்தியில் படைக்கப் பட்டுள்ளான்.
யார், யார் எந்த, எந்த விசயங்களில் பலகீனமோ அந்த விசயங்களை ஷைத்தான் தனக்கு சாதகமாக பயன்படுத்தி மனிதர்களை பாவத்தின் பக்கம் தூண்டக் கூடிய நிலையை நாம் கண்டு வருகிறோம்.
இன்றைய காலகட்டத்தில் பாவங்களில் ஆபாசமே முதன்மையானதாக பரவியுள்ளது.
யாருமே தப்பிக்க முடியாத...
Read More →மஸ்ஜிதின் ஒழுக்கங்கள்
- இமாமுத்தீன் ஹஸனீ
மஸ்ஜிதுகள் அல்லாஹ்வின் வீடு ஆகும். நாம், நமது வீடுகளை சுத்தமாகவும் தூய்மையாகவும் வைத்திருப்பது போன்று அல்லாஹ்வின் வீடாகிய மஸ்ஜிதை சுத்தமாகவும் தூய்மையாகவும் வைத்திருக்க வேண்டும். இந்த செயலுக்கு அல்லாஹ்விடத்தில் மிகப்பெரிய கூலி கிடைக்கும். அதுபோன்று, மஸ்ஜிதுகள் என்பன அல்லாஹ்வை வணங்குவதற்காகவும், அவனை திக்ர் செய்வதற்காகவும், அவனிடம் பிரார்த்தனை செய்வதற்காகவும், மார்க்க கல்வியை கற்றுக்கொள்வதற்காகவும் உள்ள இடமாகும். எனவே, அதற்குரிய...
Read More →நெருக்கம் இறுதிவரை தொடரட்டும்.....
- அபூ தல்ஹா முஹம்மது மஷாரிக்
கணவன் மனைவியாக நெருக்கமாக வாழும் தருணம் ஒரு குறிப்பிட்ட வயது வரம்புகளோடு முடிந்து போவதை பலரது வாழ்விலும் நம்மால் பார்க்க முடிகிறது. குறிப்பாக 45 அல்லது 50 வயதை தாண்டி விட்ட தம்பதிகள், பேச்சில் உறவாடுவதோடு தமது நெருக்கங்களை சுருக்கிக் கொள்கிறார்கள். அந்த வயதில் எவரேனும் நெருக்கமாக இருந்து விட்டால், அதை ஒரு அசவுகரியமான செயலாக நமது சமூகமும் பார்க்கத் துவங்கியுள்ளது. இரண்டு மூன்று...
Read More →முஹம்மதிய சமுதாயத்தின் காரூன்கள்
-திருவல்லவர் (எ) அப்துர் ரஹ்மான்
கல்வியிலும் அரசுப் பணிகளிலும் பொருளாதாரத்திலும் நமது இந்தியாவில் பின்தங்கிய சமூகங்களில் எல்லாம் மிக பின்தங்கிய சமூகமாக முஸ்லிம் சமூகம் இருந்து கொண்டிருப்பதை நாம் அறிவோம்.
இந்த நிலையை மாற்றுவதற்கு கல்வியில் முன்னேற்றம் அடைய வேண்டும். கல்வியில் முன்னேற்றம் அடைந்து விட்டால்...
Read More →பொது சிவில் சட்டம்
எனும் பூச்சாண்டி!
- ரஹ்மத்துல்லாஹ் ஃபிர்தவ்ஸி
" மீண்டும் பூச்சாண்டி கிளம்பியிருக்கிறது! " இந்த கட்டுரையை இந்த தலைப்பு போட்டு தான் ஆரம்பம் செய்ய வேண்டி உள்ளது பொதுசிவில் சட்டம் தேவையா தேவையில்லையா என்ற கருத்துகளை பதிவு செய்ய மத்திய அரசு கடந்த மாதம் 14ம் தேதி வரையும் அடுத்து 28 தேதி வரையும் நீட்டிப்பு செய்தது இந்த கட்டுரையை படிக்கும் போது நீட்டிப்பு செய்திருக்கிறதா அல்லது முடித்து வைத்திருக்கிறதா என்ற செய்தியை நாம் கண்டிருப்போம்.
இதில் மத்திய அரசு எதிர்பார்த்த...
Read More →நற்குணமும் நபியும்
வழிகாட்டும் வாழ்வியல்- தொடர் 03
-முஹம்மது சுபைர் முஹம்மதி ஃபிர்தௌஸி
யார் இந்த அடிமையை விலைக்கு வாங்குவீர்கள்?..
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் போற்றத்தக்க குணங்களில் உள்ள ஒரு உயரிய பண்பு, அவர்கள் சாதாரண பொது மனிதரின் மானம், மரியாதை கண்ணியத்தை காத்து நடப்பார்கள். அதை காப்பார்கள், மற்றவர்களுக்கு அதை தருவார்கள். சக தோழர் போன்றும் நடந்து கொள்வார்கள்.
பணம், புகழ், அழகு, பதவி இவற்றைப் பார்த்து அன்பு கொள்ளும் இக்காலகட்டத்தில் இவை எதுவுமே இல்லாத ஒரு சாதாரண கிராமவாசியை முஹம்மது நபி (ஸல்) எந்த அளவு நேசித்தார்கள் என்பது இன்றைய உலகிற்கு ஒரு முன் மாதிரியாகும். அவ்வாறான கலப்பற்ற நேசம்...
Read More →முஹர்ரம் மாதமும் ஆஷூரா நோன்பும்
-S.H.M. இஸ்மாயில் ஸலஃபி
மனிதனின் ஆன்மீக உணர்வுகளை உற்சாகப்படுத்தி ஊக்கப்படுத்துவதற்காக இஸ்லாம் சில காலங்களை ஏற்படுத்தியுள்ளது. ரமழான் மாதம், துல்ஹஜ் மாதம் போன்றவற்றை இதற்கு உதாரணமாகக் கூறலாம். இத்தகைய மாதங்களில் ஒன்றுதான் முஹர்ரம் மாதமாகும்.
புனித மாதம்:
இந்த மாதம் போர் செய்வது தடுக்கப்பட்ட புனித மாதங்களில் ஒன்றாகும்.
‘அல்லாஹ்விடம் நிச்சயமாக...
Read More →நற்குணமும் நபியும்
- அஷ்ஷேக் முஹம்மது சுபைர். முஹம்மதி.,பிர்தௌஸி.
நீங்கள் வந்து விடுங்கள்.. 100 ஒட்டகங்களை தருவேன்...
மக்கா வெற்றி என்பது அரபிகள் யாரும் எதிர்பாராத நிகழ்ச்சியாகும். அதற்குப்பின் பலர் இஸ்லாத்தை ஏற்றனர். கர்வமும், முரட்டு குணமும், கொண்ட சில சமூகத்தவர்கள் அடிபணிய மறுத்தனர்.
அவற்றுள் முன்னிலை வகுத்தவர்கள் ஹவாஸின், ஸகீஃப் கோத்திரத்தினர். இவர்களுடன் கைஸ், அய்லான் கோத்திரத்தைச் சார்ந்த நஸ்ர், ஜுஷம், ஸஅது இப்னு பக்ர் ஆகிய குடும்பத்தினரும், ஹிலால் குடும்பத்தைச் சேர்ந்த சிலரும் சேர்ந்து கொண்டனர்.
வெற்றியை ஏற்கமுடியாத அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு எதிராக போரிட முடிவு செய்தார்கள்.
Read More →