வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத அழகிய பண்புகளையும் சிறந்த குணங்களையும் கொண்டவர், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். மக்களின் இதயங்களின் ஆழத்தில் நபிகளாரின் கண்ணியம் வேரூன்றி இருந்தது.இறைத்தூதர் ஆவதற்கு முன்னரே அவர்களது வாழ்க்கை தூய்மையானதாகவும் நேர்மையானதாகவும் இருந்தது. இளமைப் பருவத்திலேயே 'நம்பிக்கையாளர்’ (அல்அமீன்), ‘உண்மையாளர்’ (அஸ்ஸாதிக்) என்று மக்களால் அழைக்கப்பட்டார்கள். எதிரிகள் கூட அவர்களைக் குறை கூறியதில்லை.அவர்களுடைய பரம எதிரி அபூஜஹ்ல் ஒருமுறை, ‘‘முஹம்மதே! நீர் கொண்டு வந்த மார்க்கத்தைத்தான் நான் பொய்யாகக் கருதுகிறேன். ஆனால் நீர் பொய்யர் அல்லர்’’ என்று கூறினான்.
“நபியே! நிச்சயமாக நீர் மகத்தான நற்குணம் உடையவராகவே இருக்கின்றீர்’’ (68:4) என்ற இறைக் கூற்றுக்கு ஏற்றவராக நபிகளார் விளங்கினார்கள்.
தூதுத்துவம் கிடைப்பதற்கு முன்பே அண்ணல் நபி அவர்கள் அழகிய குணம் கொண்டிருந்தார்கள் என்பதற்கு நிறைய சான்றுகள் இருக்கின்றது. வெளியில் யாரிடம் வேண்டுமானாலும் நல்ல பெயர் வாங்கிவிடலாம் ஆனால் மனைவியிடம் நற்பெயர் பெறுவது என்பது சிரமமான காரியமே. ஆனால் அண்ணல் பெருமான் அவர்களின் நற்குணதிற்கு அவரின் மனைவி சான்று பகர்ந்துள்ளார்கள்.
அண்ணலாரின் உயர்ந்த குணத்தை பார்த்த செல்வ சீமாட்டியான கதீஜா (ரலி) அவர்கள் ஒரு மிகவும் புத்திசாலியான, அடக்கமான, புரிந்துனர்வுள்ள, விவேகமுள்ள கண்ணியமான மற்றும் கௌரவமான ஒரு பெண். முஹம்மது (ஸல்) அவர்களை மணந்து கொள்ள விருப்பம் தெரிவிக்கிறார்கள். அன்ணலாரும் அந்த விருப்பத்தை ஏற்று கொண்டார்கள்.
கதீஜா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு நபித்துவம் கிடைப்பதற்கு 15 வருடங்கள் முன்பிலிருந்தே அவர்களின் மணைவியாக இருந்துள்ளார்கள். திருமணம் நடைபெறும் போது நபி (ஸல்) அவர்களின் வயது 25தாக இருந்தது.
கண்ணியம் நிறைந்த அப்பெண்மணி நபி (ஸல்) அவர்களின் அனைத்து சுக துக்கத்தில் பங்கு வகித்தவள். அதில் ஒரு சிறந்த தோழியாக திகழந்தவள். அவர்கள் தன் கணவரின் தனிமையான தருணங்களையும் தனிமையில்லாத குலத்துடன் மற்றும் குடும்பத்துடன் இருக்கும் தருணங்களையும் நேரங்களையும் நன்றாக அறிந்து அடையாளம் கொண்டு வைத்திருந்தாள். ஹிராஹ் குகையில் நபி (ஸல்) அவர்களின் தலை மீது நபிதுவத்தின் கிரிடம் சூட்டப்பட்ட நிகழ்வு ஒரு சாதாரண நிகழ்வும் சாதாரண விஷயமுமில்லை.
ஹிரா குகையில் அவர்கள் தனித்திருந்தார்கள். தங்களின் குடும்பத்தாரிடம் திரும்பி வருவதற்கு முன் பல இரவுகள் (அங்கே தங்கியிருந்து) வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தார்கள். அந்த நாள்களுக்கான உணவைத் தம்மோடு கொண்டு செல்வார்கள். (அது முடிந்ததும்) மீண்டும் (தங்களின் துணைவியார்) கதீஜா (ரலி) அவர்களிடம் திரும்புவார்கள். அதே போன்று பல நாள்களுக்குரிய உணவைக் கொண்டு செல்வார்கள். இந்த நிலை ஹிரா குகையில் அவர்களுக்கு சத்தியம் வரும் வரை நீடித்தது.
(ஒரு நாள்) வணக்கத்தில் மூழ்கியிருக்கும் போது, வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் அவர்களிடம் வந்து, “ஓதும்” என்றார். அதற்கவர்கள் நான் مَا أَنَا بِقَارِئٍ “ஓதத் தெரிந்தவனில்லையே!” என்றார்கள். நபி (ஸல்) அவர்கள் இந்நிலையைப் பின் வருமாறு விளக்கினார்கள். “அவர் என்னைப் பிடித்து நான் சிரமப் படும் அளவிற்கு இறுக்கிகட்டியணைத்தார்.” பிறகு என்னை விட்டு விட்டு மீண்டும் “ஓதும்” என்றார். (அப்போதும்) “நான் ஓதத் தெரிந்தவனில்லையே!” என்றேன். இரண்டாவது முறையும்فَأَخَذَنِي فَغَطَّنِي حَتَّى بَلَغَ مِنِّي الْجَهْدَ “அவர் என்னைப் பிடித்து நான் சிரமப்படும் அளவிற்கு இறுக்கி கட்டி அணைத்து என்னை விட்டுவிட்டு” மீண்டும் “ஓதும்” என்றார். (அப்போதும்) நான் “ஓதத் தெரிந்தவனில்லையே!” என்றேன் . அவர் என்னைப் பிடித்து மூன்றாவது முறையும் “நான் சிரமப்படும் அளவிற்கு இறுக்கி கட்டி அணைத்து விட்டுவிட்டு,”
اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ (1) خَلَقَ الْإِنْسَانَ مِنْ عَلَقٍ (2) اقْرَأْ وَرَبُّكَ الْأَكْرَمُ (3) الَّذِي عَلَّمَ بِالْقَلَمِ (4) عَلَّمَ الْإِنْسَانَ مَا لَمْ يَعْلَمْ (5) [العلق : 1 – 5[
“படைத்த உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு ஓதுவீராக. 'அலக்' என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான். ஓதுவீராக: உம் இறைவன் மாபெரும் கொடையாளி. அவனே எழுது கோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான். மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்”. (96:1-5) என்றார்.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: فَرَجَعَ بِهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَرْجُفُ فُؤَادُهُ
வஹீயின் வசனங்கள் படித்துகொண்டு வீட்டிற்கு நபி (ஸல்) அவர்கள் செல்லும் போது, நபியின் தோல்புஜங்கள் நடுங்கிகொண்டிருந்த நிலையில் இதயம் படபடத்தவர்களாக, சுக துக்கத்தின் தோழி கதீஜா (ரலி) அவர்கள் வழக்கம் போல் முகத்தில் புன்னகை, செயலில் அரவணைப்பு, அவரின் வருகையை காத்திருக்கும் மகிழ்சியுடன் நபி (ஸல்) அவர்களை வரவேத்தார்கள். அந்த வசனங்களுடன் (தம் துணைவியார்) குவைலிதின் மகள் கதீஜா (ரலி) அவர்களிடம் “நடந்த செய்தியைத் தெரிவித்துவிட்டுத் لَقَدْ خَشِيتُ عَلَى نَفْسِي தமக்கு ஏதும் நேர்ந்து விடுமோ என தாம் உறுதியாக அஞ்சுவதாகவும்” கூறினார்கள்.
அப்போது கதீஜா (ரலி) அவர்கள் அவ்வாறு கூறாதீர்கள்:فَقَالَتْ خَدِيجَةُ كَلَّا وَاللَّهِ مَا يُخْزِيكَ اللَّهُ أَبَدًا
அல்லாஹ்வின் மீது ஆணையாக உங்களை ஒருபோதும் அல்லாஹ் இழிவுபடுத்தமாட்டான். (ஏனெனில்) தாங்கள் உறவினர்களுடன் இணங்க இருக்கிறீர்கள் (சிரமப்படுவோரின்) சுமைகளைத் தாங்கள் சுமந்து கொள்கிறீர்கள் வறியவர்களுக்காக உழைக்கிறீர்கள் விருந்தினர்களை உபசரிக்கிறீர்கள் உண்மையான சோதனைகளில் (ஆட்பட்டோருக்கு) உதவி புரிகிறீர்கள் என்றார்கள். பின்னர் நபி (ஸல்) அவர்களைத் தம் தந்தையின் உடன் பிறந்தவரான நவ்ஃபல் என்பவரின் மகன் வராகவிடம் அழைத்துச் சென்றார்கள்.
வஹீயின் வருகை, வாணவரின் ஒருமுறை அல்ல மூன்று முறை கட்டி அணைத்தது மேலும் அதன் நபி (ஸல்) அவர்களுக்கு ஏற்பட்ட வழி என்பது ஒரு மிக அசாதாரனமான செயல், நிலை, சம்பவமாக இருந்திருகும். நபி (ஸல்) அவர்களுக்கு இதனால் தனித்த பதற்றம் அச்சம் ஏற்பட்டது.
வஹீயின் வசனங்கள் ஓதி கொண்டே வீட்டிற்கு வரும் போதே நபி (ஸல்) அவர்களின் தோல் புஜங்கள் நடுங்கி கொண்டிருந்தன வீட்டை அடைந்தவுடன் சுக துக்க தோழி அன்போடு அவர்களை வரவேர்த்தார். இந்த நிலையை பார்த்து கவளை கொள்ளாமல் பதற்றம் அடையாமல் ஏசாமல் கோபம் கொள்ளாமல் வரவேற்பது என்பது மிக கடினமான ஒன்று. அந்நிலையில் புரிந்துணர்வு என்பது அதை விட மிக மிக முக்கியமான ஒன்று.
அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னை போர்த்துங்கள். என்னை போர்த்துங்கள் என்னை போர்த்துங்கள் என கூறிகொண்டே இருந்தர்கள். அதாவது என்னை ஒரு போர்வை கொண்டு போர்த்துவிடுங்கள். எனக்கு நடுக்கம் இருக்கிறது நான் நடுங்குகிறேன் என்னை போர்வை கொண்டு போத்துங்கள். இந்த வார்த்தகளில் இருக்கும் அர்த்தத்தை புரிந்த கதீஜா (ரலி) அம்மையார் போர்வையை போர்த்திவிட்டார்கள். அப்போதே என்ன நடந்தது? உங்களுக்கு என்ன ஆகிவிட்டது? என்று கேள்விகளை அடுக்கு அடுக்காக கேக்காமல், பொறுமையாக இருந்து அருகில் அமர்ந்து தட்டி கொடுத்து حَتَّى ذَهَبَ عَنْهُ الرَّوْعُஅச்சம் நடுக்கம் போன பிறகு கதீஜா (ரலி) அவர்கள் என்ன நடந்தது? என்று கேட்டார்கள் அதற்கு நபி (ஸல்) அவர்கள் முழுமையாக கூறிவிட்டு உன்மையில் நான் என் உயிருக்கு ஏதும் நேர்ந்து விடுமோ என தாம் உறுதியாக அஞ்சுகிறேன் என்றார்கள்.
இப்போது கதீஜா (ரலி) அம்மையாரின் புத்திசாலி தன்மையும் ஞானமும் புரிந்துனர்வும் பாருங்கள் அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு மிக பெரிய அழகிய வார்த்தைகளை கொண்டு ஆறுதல் தருகின்றார்கள். ஒருபோதும் இல்லை அல்லாஹ் மீது சத்தியமாக அல்லாஹ் உங்களை எப்பொளுதும் இழிவு படுத்தமாட்டான். ஒருபோதும் அல்லாஹ் உங்களை நிராசை அடையவிடமாட்டான். ஏனேனில் உங்களைப் போன்ற ஒரு ஆளுமைவுள்ள நபரை அல்லாஹ் வீணாக்க மாட்டான். பிறகு நபி (ஸல்) அவர்கள் உயரிய குணங்களை பட்டியலிட்டு நபி (ஸல்) அவர்களின் உயரிய குணங்களுக்கு தன் சாட்சியை அழித்தார்கள்.
தாங்கள் உறவினர்களை இணைக்கிறீர்கள். إِنَّكَ لَتَصِلُ الرَّحِمَ எப்போதும் உண்மை பேசுகிறீர்கள். (சிரமப்படுவோரின்) சுமைகளைத் சுமக்கிறீர்கள். وَتَحْمِلُ الْكَلَّ ஏழைகளுக்காக இல்லாதவர்களுக்காக உழைக்கிறீர்கள். وَتُعِينُ عَلَى نَوَائِبِ الْحَقِّவிருந்தினர்களை உபசரிக்கிறீர்கள். وَتَقْرِي الضَّيْفَ பாதிக்கபட்டோருக்கு உதவி புரிகிறீர்கள். وَتَكْسِبُ الْمَعْدُومَ
வாசகர்களே மேல் குறிப்பிட்ட ஒவ்வோர் குணத்தையும் நன்றாக சிந்தியுங்கள். அவை அனைத்தும் மிக சிறந்த உயரிய நன்நடத்தைகளாகும். அண்ணலாரின் வாழ்வில் கதீஜா (ரலி) யின் பங்கு அளப்பரியது. கதீஜா (ரலி) மூலமாகவே அண்ணலாருக்கு குழந்தை பாக்கியம் இருந்தது. அன்பான மனைவிகள், ஆரத்தலுவ குழந்தைகள் என எல்லாம் பிற்காலத்தில் இருந்தாலும் அண்ணலாரின் மனம் கதீஜாவை தேடி கொண்டே இருந்தது. எந்த அளவிற்கு ஒரு சிறந்த மனைவியாக கதீஜா (ரலி) நடந்துள்ளர்கள் என்பதை சிந்தித்து பாருங்கள். அந்த ஆபத்தான மலைக்கு தினமும் சென்று அல்லாஹ்வின் தூதருக்கு உணவு கொடுத்து விட்டு வருவார்கள். கணவனின் செயல்கள் வித்யாசமானதாக இருந்தும் அதற்கு ஆதரவு கொடுத்தார்கள். அவர்களுக்கு பக்க பலமாக இருந்தார்கள்.
இவ்வாறிருக்கையில் ஒருநாள் இனம் புரியாத உருவம் ஒன்று கைகளினால் தன்னை இறுக அணைத்து அழுத்திப் பிடிப்பதை உணர்ந்தார்கள். பின் தன்னுடைய பிடியைத் தளர்த்திய அந்த உருவம், எங்கே ஓதுவீராக என்று கூறியது. அதற்கு, நான் படிப்பறியாதவன் – எனக்கு ஓதத் தெரியாது என்று பதில் கூறினார்கள். இருந்தும் வந்த அந்த உருவம் மீண்டும் இவரைக் கட்டிப் பிடித்து இப்பொழுது ஓதுவீராக! என்று கூறியதும், மீண்டும் எனக்கு ஓதத் தெரியாதே! என்றார்கள். இவ்வாறு மூன்றாவது முறை நிகழ்ந்த பின், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் திருமறைக் குர்ஆனின் ஆரம்ப வசனங்களான இக்ரஃ பிஸ்மி ரப்பிகல்லதி கலக் (96:1-5) என்ற வசனத்தை ஓத ஆரம்பித்தார்கள். இதை எல்லாம் கேட்டு தன் கணவர் கூறியது உண்மை அதில் எந்த விதமான பொய்யில்லை என்று உறுதியாக நம்பிக்கை கொண்டு அவருக்கு உடனே ஆறுதல் தருவது அனைவரினால் சாத்தியமான ஒன்று அல்ல.
பின்பு அந்த உருவம் மறைந்து விட்டது. எதிர்பாராத இந்த நிகழ்ச்சியின் காரணமாக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பயந்து நடுநடுங்கியவர்களாக, வியர்த்து வழிகின்ற நிலையில், தன்னுடைய வீட்டை அடைந்து தன்னுடைய துணைவியார் கதீஜா (ரலி) அவர்களை அழைத்து زَمِّلُونِي زَمِّلُونِيஎன்னைப் போர்த்துங்கள், என்னைப் போர்த்துங்கள் என்று கூறிகின்றார்கள். சற்று நேரம் அவர்கள் இளைப்பாறியதன் பின்பு சகஜ நிலைக்கு வருகின்றார்கள். அதன் பின்பு என்னுடைய உயிருக்கு ஆபத்து வந்து விடுமோ என நான் அஞ்சுகின்றேன் என்று கூறியவாறு, தனக்கு நேர்ந்தவைகளை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது துணைவியார் கதீஜா (ரலி) அவர்களிடம் விவரிக்கின்றார்கள். இப்போது சிந்தியுங்கள் உயிருக்கே பயம் இருக்கும் நபருக்கு ஆறுதல் தருவது எளிய காரியமில்லை. அவ்வாறு செய்வது ஒரு மாபெரும் ஆளுமையை தான் காட்டுகிறது.
நீங்கள் ஏழைகளுக்கு உதவுகின்றீர்கள், பிறர் மீது அன்பும் கருணையும் உடையவர்களாக இருக்கின்றீர்கள் விருந்தினரை கண்ணியமான முறையில் நடத்துகிறீர்கள்.., இந்த நிலையில் எந்த வித தீங்குகளும் உங்களை அணுகாமல் இறைவன் உங்களைப் பாதுகாப்பான், நீங்கள் பயப்பட வேண்டாம் என ஆறுதல் கூறுகின்றார்கள். ஒரு கணவரின் உயரிய குணத்தை யார் தான் ரசித்து அனுபவபட்டு அதை மனதில் நினைவு படுத்தி வைப்பது என்பதே ஒரு மிக பெரிய விஷயமாகும். அதை மனதில் பதித்து தக்க சமயத்தில் அதை அவருக்கே எடுத்து கூறி உத்வேகம் ஆர்வம் உணர்வு ஊட்டுவது என்பது அதைவிட பெரிய காரியம். மேலும் அதற்கு ஒரு மிக அழகிய திறமையும் தேவை.
கதீஜா (ரலி) அவர்களின் இந்த விவேகமான ஆறுதலான வார்த்தைகள் இறைத்தூதர் (ஸல்) அவர்களது மனதிற்கு தெம்பையும் தைரியத்தையும் வரவழைத்துக் கொடுத்ததோடு, மனதளவில் அவர்கள் மிகப் பெரிய தாக்கத்தை அவர்களுக்கு உருவாக்கிக் கொடுத்தது.
இதில் அண்ணலாரின் குணநலன்களை பாருங்கள். அவர்கள் மனைவி அவர்களுக்கு கொடுக்கும் சான்றினை சற்று சிந்தித்து பாருங்கள். அழகுக்கு அழகு சேர்ப்பதை போல இஸ்லாம் அவர்களின் குணத்திற்கு மேலும் மெருகூட்டியது. அதனாலேயே அகிலம் போற்றும் அழகிய முன்மாதிரி யாக இன்று நம் மனதில் நீங்கா இடத்தில் இருக்கிறார்கள்.
(நூல்: புகாரி 03, முஸ்லிம் 160.)
அண்ணாலாரின் விரோதிகள் பகமை கொண்டவர்கள் கூட நபி (ஸல்) அவர்கள் எப்போது எச்சமயமும் பொய்யர் அல்லது அமாநிதத்தை பேனாதவர் என்று கூறியதில்லை என்பதை கூட நினைவில் கொள்க.
மக்கா மா நகரத்தில் மக்கள் அனைவரும் நபி (ஸல்) அவர்களை அவரின் பெயரை விட அவரின் தன்மைகளை அதிஅதிகமாக அறிந்திருந்தார்கள். அவைகளை கொண்டே அடையாளம் கொண்டிருந்தார்கள். அவரை அவர்கள் உண்மையாளர் அமானிதமுடையவர் போன்ற துணைப்பெயர்களை கொண்டு அறிந்து அழைத்து அறிமுகம் அடைந்திருந்தார்கள். அவர்கள் உண்மையாளர் வந்துவிட்டார், அமானிதம் பேன்பவர் வந்துவிட்டார், என்று தான் அவரை அழைத்தார்கள். இதன் காரணத்தால் தான் நிராகரிப்பாளர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு நபித்துவம் வழங்கபட்ட பிறகும் நேரடியாக பொய்யர் என்று கூறவில்லை அவர் பொய்யர் என்று கூறாமல் அவர் கூறிய அந்த மார்க்கம் தான் பொய் என்றனர். அல்குர்ஆன் இதை இவ்வாறு சாட்சி அழிக்கிறது.
قَدْ نَعْلَمُ إِنَّهُ لَيَحْزُنُكَ الَّذِي يَقُولُونَ فَإِنَّهُمْ لَا يُكَذِّبُونَكَ وَلَكِنَّ الظَّالِمِينَ بِآيَاتِ اللَّهِ يَجْحَدُونَ [الأنعام: 33]
(நபியே!) அவர்கள் (உம்மைப் பொய்யரெனக்) கூறுவது நிச்சயமாக உம்மைக் கவலையில் ஆழ்த்துகிறது என்பதை நாம் அறிவோம்; அவர்கள் உம்மைப் பொய்யாக்கவில்லை ஆனால் இந்த அநியாயக்காரர்கள் அல்லாஹ்வின் வசனங்களையல்லலவா மறுத்துக் கொண்டிருக்கிறார்கள். [6:33]
தொடரும்...