மதங்கள்
November 24, 2013
அழைப்பு கடிதம் (இந்துவுக்கு)
அருளாளனும் அன்பாளனுமாகிய இறைவனின் திருபெயரால்..
பிற மத சகோதரர்களுக்கு இஸ்லாத்தை அறிமுகப்படுத்தி எழுதுவதற்கான மாதிரி கடிதம்.
இறையருள் நிறைக!
நாம் மத நம்பிக்கை உடையவர்கள். நம்முடைய நம்பிக்கைகளில் பல வற்றிலே ஒற்றுமை இருப்பதை காண்கிறோம்.கடவுளைப் பற்றி எல்லாம் வல்ல இறைவன் என்று நீங்கள் கூறுகின்றீர்கள்.நாங்களும் அப்படியே கூறுகின்றோம்.
எந்தக் காரியத்தையும் நிறைவேற்றித் தருவது அந்தக் கடவுளின் செயல் என்பதைக் குறிக்க "எல்லாவற்றையும் மேலே இருப்பவன் பார்த்துக் கொள்வான்" என்று நாங்கள் நம்பிக்கையுடன் சொல்கிறோம்,நீங்களும் அப்படியே சொல்கிறீர்கள்.
நன்மை செய்வதற்கு கூலி கொடுப்பதற்காக சொர்கத்தையும் பாவத்திற்கு தண்டனை கொடுப்பதற்காக நரகத்தையும் படைத்திருப்பதாக நீங்களும் நாங்களும் நம்புகிறோம்.
இப்படி பல்வேறு நம்பிக்கைகளில் ஒற்றுமை உடையவர்களாய் இருகின்றோம்.ஆனாலும் வேறு பல நம்பிக்கைகளில் முக்கியமானவற்றை பரிமாரிக் கொள்வதே இந்தக் கடிதத்தின் நோக்கம்.
இறைவனை மட்டுமே வணங்க வேண்டும்!
அனைத்தையும் படைத்தது ரட்சித்துக் கொண்டிருக்கும் எல்லாம் வல்ல இறைவன் ஒருவனை மட்டுமே வணங்க வேண்டும்.உயர்ந்த மனிதராக, சிலையாக இருந்தாலும் பிரம்மாண்ட பொருளாக இருந்தாலும் அவனல்லாத எவரையும் எதனையும் வணங்க கூடாது என்பதே இஸ்லாத்தின் அடிப்படை.
இது குறித்து இறைவன் தன் இறுதி வேதமாகிய திரு குர்ஆனில் கூறுவது :
"மனிதர்களே உங்களையும் உங்களுக்கு முன் சென்றவர்களையும் படைத்த உங்கள் இரட்ச்ககனையே நீங்கள் வணங்குங்கள்.இதனால் (இறை தண்டனையிலிருந்து உங்களை) நீங்கள் தற்காத்துக் கொள்ளலாம.அவனே பூமியை உங்களுக்கு விரிப்பாகவும் வானத்தை முகடாகவும் ஆக்கினான் வானிலிருந்து நீரை இறக்கி அதன் மூலம் கனிகளை உங்களுக்கு உணவாக வெளிபடுத்தினான்.எனவே (இதையெல்லாம்) அறிந்த நிலையில் இறைவனுக்கு நிகரானவர்களை ஏற்படுத்தாதீர்கள்."
(திரு குர் ஆன்:அத்தியாயம் 2 வசனம் 21-22)
எவரையும் அல்லது எதனையும் வணகுவது பலனற்ற செயல் என்பதை திரு குர் ஆன் ஒரு உதாரணத்தின் மூலம் விளக்குவதை பாருங்கள்!
மனிதர்களே! உங்களுக்கு ஓர் உதாரணம் கூறப்படுகிறது .அதனை செவிதாழ்த்திக் கேளுங்கள்! இறைவனை அன்றி எவர்களை நீங்கள் (பிராத்தித்து) அழைக்கின்றீகளோ அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தாலும் ஓர் ஈயைக் கூட அவர்களால் படைக்க முடியாது.ஈ அவர்களிடமிருந்து எதையேனும் பறித்து கொண்டால் அதை அந்த ஈயிடமிருந்து அவர்களால் மீட்க முடியாது.தேடுபவரும் தேடப்படுபவரும் பலவீனப்பட்டவர்கள்.
(திரு குர் ஆன்:அத்தியாயம் 22 வசனம் 73)
வணக்கத்திற்கு உரிமையாளனாக இறைவன் மட்டுமே இருக்கையில் மற்றவர்களுக்கு வணக்கத்தை செலுத்துவது இறைவனால் மன்னிக்கப்படாத பெரும் பாவமாகும்.மோசமான வழிகேடுமாகும் என்பதும் இஸ்லாத்தின் அடிப்படை கொள்கையாகும்.இது பற்றி இறுதி வேதமாகிய திரு குர்ஆனில் இறைவன் கூறுவது
தனக்கு இணைவைக்க படுவதை நிச்சயமாக இறைவன் மன்னிக்க மாட்டான்.அதுவல்லாத பாவத்தை தான் நாடியவருக்கு அவன் மன்னிப்பான்.எவர் இறைவனுக்கு இனைவைக்கின்றாரோ அவர் தூரமான வழி கேட்டில் வழி தவறி சென்றுவிட்டார்.
(திரு குர் ஆன்:அத்தியாயம் 4 வசனம் 116)
இறைத்தூதர்களின் போதனை!
இறைவனை மட்டுமே வணங்க வேண்டும்.வேறு எவரையும் வணங்க கூடாது என்ற கொள்கையை எடுத்துச் சொல்வதற்காகவே ஒவ்வொரு சமுதாயத்திலும் இறைவன் தூதர்களை அனுப்பி வைத்தான் இது பற்றி திருமறைக் குர்ஆனில் கூறபப்டுவது.
என் சமுதாயத்தினரே!இறைவனையே வணங்குங்கள் அவனைத் தவிர்த்து உங்களுக்கு வேறு தெய்வமில்லை என்று ஹூது தீர்க்க தரிசி (தன் சமுதாயத்திடம்) கூறினார்.
(திரு குர் ஆன்:அத்தியாயம் 11 வசனம் 50)
இவ்வாரே இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்கள் அனைவரும் பிரச்சாரம் செய்ததாக திரு குர்ஆனில் பல இடங்களில் கூறப்பட்டுள்ளது.
நபிகள் நாயகம் :
தேவன் ஒருவனையே வணங்க வேண்டுமென மக்களுக்கு அழைப்பு விடுக்கவும் அவனை வணங்கி வழிபடும் முறையை போதிக்கவும் இறைவனால் தேர்தெடுக்கப்பட்ட தூதர்களில் இறுதியானவரும் உலகமக்கள் அனைவருக்கும் பொதுவாகவும் அனுப்பப்பட்டவர் தான் நபிகள் நாயகம் முகம்மது(ஸல்லலாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள்.இது இஸ்லாத்தின் மற்றொரு அடிப்படை நம்பிக்கை.இது பற்றி எல்லாம் வல்ல இறைவன் கூறுவது.
"(நபியே!) கூறுவீராக! மக்களே நான் உங்கள் அனைவருக்குமான இறைவனின் தூதராவேன்.அவனுக்கே வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி உரியது"
(திரு குர் ஆன்:அத்தியாயம் 7 வசனம் 158)
நபிகள் நாயகம் முகம்மது(ஸல்) அவர்கள் இறைவனின் தூதர் என்று நாம் ஏற்பதற்கு தகுதியான எல்லா அம்சங்களையும் தன்னகத்தே கொண்டிருந்தார்கள்.இறை பக்தியில் முன்னோடியாக இருந்தார்கள்.மற்றவர்களை விட அதிகமாக இறைவனை வணங்கி துதிப்பவர்களாகவும் விளங்கினார்கள்.சொல்லும் செயலும் ஒன்றுபட்டவர்களாகவும் நற்குணத்திர்க்கு முன்மாதிரியாகவும் திகழ்ந்தார்கள்.
வசதி வாய்ப்புகள் அதிகமாகக் கிடைத்த போதும் எளிய வாழ்கையை தேர்தெடுத்தார்கள்.தன் காலில் விழுந்து பிறர் தனக்கு மரியாதை செய்வதையும்,தனக்காக பிறர் எழுந்து நிற்பதையும் தடுத்தார்கள்.
இறைவேதம் கொடுக்கப்பட்ட எந்த இறைத்தூதரும் செய்யாத சாதனையை அவர்கள் செய்திருப்பதும் உலகத்தில் அவர்கள் ஏற்படித்தி இருக்கும் தாக்கமும்,அவர்கள் இறைவனின் உதவி பெற்ற நல்லடியார் என்பதற்கு சான்றாக உள்ளது.
இதுவரை இஸ்லாத்தின் அடிப்படையான அம்சங்களில் சிலவற்றை சுருக்கமாக எழுதியுள்ளேன்.கூடுதலான விவரங்களை திருக குர்ஆனின் மொழி பெயர்ப்பை படிப்பது மற்றும் இஸ்லாத்தை அறிந்தவர்களிடம் கேட்பது போன்ற வழிகளில் அறிந்து கொள்ளலாம்!
எல்லாம் வல்ல இறைவன் நம்மை சத்தியத்தின் வழியில் நடத்துவானாக!
-M. அப்துர்ரஹ்மான் மன்பஈ, MA.
,M.phil
We are committed to helping you increase your taqwa. Our content is designed to inspire and motivate you to live a life that is pleasing to Allah (SWT). From practical tips to spiritual reflections, we aim to support your journey of faith.
© ahlulislam.net. All Rights Reserved. Design by zeentech solutions