மதங்கள்

December 06, 2014

நபி சுலைமான் தான் ஸ்ரீ ராமர்…?!

டிசம்பர் 6 ! 1992 ம் வருடம் இதே நாளில் ராமர் பிறந்த இடம் என்று பொய் கூறி  பாபரி மஸ்ஜிதை இடித்தார்கள் இந்துத்துவ தீவிரவாதிகள்!

தீவிரவாதிகளின் பித்தலாட்டத்தை நாம் எதிர்க்கும் அதே வேளையில் பொதுவாக நல்ல இந்து மக்களும் இறைவனின் அவதாரமாக நம்பியிருக்கும் இராமன் குறித்த சம்பவங்களை கவனிக்கும் போது திருக்குர்ஆனிலும் பைபிளிலும் புகழ்ந்து பேசப்படும் இறைத்தூதர் சுலைமான் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் தான் இவர்களால் இராமன் என்று கூறப்படுகிறார்கள் என்று சொல்ல அதிக வாய்ப்புள்ளது.

முதலில் அனைவரும் ஒன்றை மனதில் பதிய வைத்துக்கொள்ள வேண்டும். அதாவது, இறைவனின் அவதாரம் என்று ஒன்றும் இல்லை, இவ்வாறு நம்புவது மிகத் தவறான நம்பிக்கையாகும். ஆனால் இறைவழியில் மக்களை வழிநடத்திய நல்லவர்களையும், இறைத்தூதர்களையும் அவர்களுக்குப் பின் வந்த மக்கள் இறைவனின் அந்தஸ்திற்கு உயர்த்தி, வணங்கியிருக்கிறார்கள். இதனை திருக்குர்ஆன் பல இடங்களில் தெளிவாக எடுத்துச் சொல்லி கண்டிக்கிறது, இதற்கு ஒரு பிரபலமான உதாரணம் நபி ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) (இயேசு) ஆவார்கள்.

ஆக இந்த வகையில் இறைவழியில் மக்களை வழிநடத்தியவராக வாழ்ந்த இராமனை பின்னால் வந்தவர்கள் இறைவனின் அவதாரம் என்று கற்பனை செய்திருக்க முகாந்திரம் உள்ளது.

இதனை நினைவில் நிறுத்திக் கொண்டு நபி சுலைமான் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுடன் ராமன் குறித்து சொல்லப்படுபவை எப்படியெல்லாம் ஒத்துப்போகிறது என்பதை பார்ப்போம்.

ஒற்றுமை 1: பெயர் மற்றும் தந்தை பெயர் ஒற்றுமை.

சுலைமான் = ராமன்

தந்தை தாவூத் = சரன்

இருவர் பெயரும் இருவரின் தந்தைப் பெயரும் ஒன்றுபோல் இருக்கின்றன. இதை மட்டும் வைத்து இருவரும் ஒரே ஆள் என்று கூற முடியாது, ஆனாலும் தொடர்ந்து வரும் விஷயங்களை கவனித்தால் இருவரும் ஒருவர்தான் என்று கூறுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது, வாருங்கள்!

ஒற்றுமை 2: தந்தைக்கு அதிகமான மனைவியர்

தாவூதுக்கு 100 மனைவியினர் = தசரதனுக்கு அறுபதாயிரம் மனைவியர்  – அவர்களில் மூவர் முக்கியமானவர்கள்.

நபி தாவூத் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுக்கு 100 மனைவியர் இருந்தனர் என்பது பற்றிய தகவல்: 

திருக்குர்ஆனின் 38 வது அத்தியாயத்தின் 21-25 வசனங்களில், நபி தாவூதிடம் இரண்டுபேர் திடீரென சுவரேறிக் குதித்து வந்து வழக்காடியதாக கூறப்பட்டுள்ளது. அதில் வாதியாக வந்தவர் தன் எதிராளியிடம்  தொண்ணூற்றொன்பது ஆடுகள் இருந்ததும், தன்னிடமுள்ள ஒரே ஒரு ஆட்டை பறிக்க முயல்வதாக குற்றம் சாட்டுகிறார். உடனே நபி தாவூத் (அலைஹிஸ்ஸலாம்) குற்றம் சாட்டப்பட்டவரை கண்டிக்கிறார்கள். அடுத்து இதன் மூலம் அல்லாஹ் தன்னை சோதிப்பதாக எண்ணி, தனது தவறுக்காக இறைவனிடம் மன்னிப்புக் கேட்கிறார்கள்.  இவ்வாறு இந்த வசனங்களின் கருத்து முடிகின்றது.

இந்த திருமறை வசனங்களில் கூறப்படும் ஆடுகளின் எண்ணிக்கை, நபி தாவூத்(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் மனிவியரின் எண்ணிக்கை என்று நேரடியாக குறிப்பிடப்படவில்லை, ஆனால் நபி தாவூதின் இனத்தாரான இஸ்ரவேலர்களின் சரித்திரப் பதிவுபடி, ஆடுகளின் எண்ணிக்கை, தாவூத்  அவர்களுக்கு மனைவியர் அதிகம் என்பதை குறிக்க பயன்படுத்தப்பட்டுள்ளது என்று சொல்லலாம்.

அந்த இஸ்ரவேலரின் சரித்திரப் பதிவை சில குர்ஆன் விரிவுரையாளர்கள் எடுத்து எழுதியிருக்கிறார்கள், அதன் சாராம்சம்:

நபி தாவூத் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் தன் அரண்மனையில் இருந்து வெளியே ஒரு பெண்ணைப் பார்த்தார்கள், அவளது அழகால் ஈர்க்கப்பட்ட அவர்கள் அவளுடைய கணவன் போருக்குச் சென்றிருப்பதை அறிந்து அவரை போரில் முன்வரிசையில் நிறுத்தும் படி தளபதிக்கு செய்தி அனுப்பினார்கள். அதன்படி அப்பெண்ணின் கணவர் முன்வரிசையில் நிறுத்தப்பட்டார். எதிரிகளால் கொல்லப்பட்டார். பின்பு அப்பெண்ணை நபி தாவூத் அவர்கள் மணந்து கொண்டார்கள். நபி தாவூதின் இந்த தவறை சுட்டிக் காட்டுவதற்காகவே இரண்டு வானவர்களை வழக்காடுபவர்கள் போன்று அல்லாஹ் அனுப்பி வைத்தான்.  [ பார்க்க: தஃப்ஸீருல் குர்துபீ  திருகுர்ஆனின் 38 ஆவது அத்தியாயத்தின் 21-25 வசனங்களின் விளக்கம் ]

இஸ்ரவேலரின் சரித்திரப் பதிவில் உள்ள இந்த சம்பவம் ஒரு நபிக்குத் தகுதி இல்லாத செயலை செய்ததாகக் கூறுகிறது. அதனால் இந்த சம்பவத்தை ஏற்கக் கூடாதென சில விரிவுரையாளர்களும் , மார்க்க அறிஞர்கள் பலரும் கூறுகின்றனர். [ பார்க்க: தஃப்ஸீர் இப்னு கஸீர் திருக்குர்ஆன் 38 ஆவது அத்தியாயத்தின் 21-25 வசனங்களின் விளக்கம் ]

நபி தாவூத் தொடர்பான இந்த சம்பவத்தை அப்படியே ஏற்கக் கூடாது என்பது சரிதான். ஆனால் தாவூத் அவர்கள் இத்தகைய சதி எதுவும் செய்யாமல் இந்நிகழ்ச்சி நடந்துள்ளது என்று கூறும் சரித்திரப் பதிவுகளும் உள்ளது.

இமாம் ஷவ்கானி அவர்கள் தமது ஃபத்ஹுல் கதீர் எனும் திருகுர்ஆன் விரிவுரையில், இந்த (திருகுர்ஆனின்  38 ஆவது அத்தியாயத்தின் 21-25)  வசனங்கள் தொடர்பாக கூறப்படும் பல கூற்றுகளை பதிவு செய்துள்ளார்கள். அவற்றில் ஓன்று: ஊரியா அப்பெண்ணை திருமணம் செய்ய பெண்பேசி வைத்திருந்தார். அதை அறியாமல் தாவூத் அவர்களும் அப்பெண்ணை பெண்பேசிவிட்டார்கள். தாவூத் அரசராக இருந்ததால் அப்பெண்ணின் குடும்பத்தவர் நபி தாவூதுக்கு அவளை திருமணம் செய்து வைத்தனர்.

ஆக எப்படிப் பார்த்தாலும் நபி தாவூத் அவர்களுக்கு அதிகமான மனைவியர் இருந்துள்ளனர் என்பது பிரபலம். தவ்ராத்தில் (பைபிளின் பழைய ஏற்பாட்டில் ) நபி தாவூதுக்கு ஒன்பது மனைவிகள் இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது. அத்துடன் அக்கால முறைப்படி அவர்களுக்கு அதிகமான அடிமைப் பெண்கள் இருந்திருப்பார்கள். இந்த விதத்தில் பார்த்தால் நபி சுலைமானின் தந்தையான நபி தாவூதுக்கும் அதிக எண்ணிக்கையில் மனைவியரும் அடிமைப் பெண்களும் இருந்திருப்பது இயல்பானதே!

இங்கு ஒன்றை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த மனைவியர், அடிமைப் பெண்கள் எண்ணிக்கையெல்லாம் மிகச் சரியாக இருந்திருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால் அதிகமான எண்ணிக்கையில் மனைவியரும் அடிமைப் பெண்களும் இருந்தனர் என்பது நிச்சயம்.

ஆகவே நாம் இதுவரை பார்த்தபடி நபி சுலைமானின் தந்தையான நபி தாவூதுக்கும் அதிக எண்ணிக்கையில் மனைவியர்கள் இருந்துள்ளனர்.

ஒற்றுமை 3: நபி சுலைமானின் தாயார் கேட்ட வரம் /  ராமனின் சித்தி கைகேயி கேட்ட வரம்

நபி சுலைமானின் தந்தையான நபி தாவூத் அவர்கள் விரும்பிய அப்பெண்ணை திருமணம் செய்துகொள்ள பெண்பேசிய போது, அப்பெண் (உணகளுக்கு பல மனைவியர் இருந்தாலும் ) எனக்குப் பிறக்கும் பிள்ளையைத் தான் உங்களுக்குப் பின் அரசராக்க வேண்டும் என்று நிபந்தனை வைத்துக் கோரியதாக இஸ்ரவேலர் சரித்திரத்தில் கூறப்பட்டுள்ளது. அது திருக்குர்ஆன் விளக்க உரைகளிலும் எடுத்து எழுதப்பட்டுள்ளது. [ பார்க்க: தஃப்ஸீருல் குர்துபீ  திருகுர்ஆனின் 38 ஆவது அத்தியாயத்தின் 21-25 வசனங்களின் விளக்கம் ]

இதேபோல் ராமாயணத்தில்,  ராமனின் சித்தி கைகேயி, முறைப்படி ஆட்சிக்கு வரவேண்டிய ராமனுக்கு  பட்டாபிஷேகம் செய்யாமல் தனது மகன் பரதனை அரசனாக்க வேண்டும் என்று தசரதனிடம் வரம் கேட்டு சாதித்துக் கொண்டாள் என்று கூறப்பட்டுள்ளது.

இங்கு வரம் கேட்டது யார்? என்பதில் வித்தியாசம் இருக்கிறது. ஆனாலும், சுலைமான், ராமன் ஆகிய இருவரின் அரசாட்சி விஷயத்தில் அன்னை, சித்தி ஆகியோர் கேட்ட வரம் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது என்பதை கவனிக்கவும். ராமாயணத்தில் மாற்றத்துடன் கூறப்பட்டுள்ளது.

ஒற்றுமை 4: நபி சுலைமான், ஒரு ஷைத்தானின் சதியால் ஆட்சியை இழந்து மக்களால் புறக்கணிக்கப்பட்டு கடற்கரை ஓரம் சுற்றித்திரிந்தது / ராமன் ஆட்சியைப் பெற வேண்டிய நாளில் தன் சித்தியின் சதியால் அது பறிக்கப்பட்டு வனாந்தரத்துக்கு அனுப்பப்பட்டு வனவாசம் செய்தது.

நபி சுலைமான் ஆட்சியை இழந்து பின்பு மீட்டுக் கொண்டது தொடர்பான சம்பவத்தின் சாராம்சம்:

நபி சுலைமான் ஒரு மோதிரம் அணிந்திருப்பார். அவர் மலஜலம் கழிப்பதற்கும், குளிப்பதற்கும் போகும் போது அந்த மோதிரத்தை தமது ஒரு மனைவியிடம் கழற்றி கொடுத்துவிட்டுச் செல்வார். அவ்வாறு ஒருமுறை அவர் அதனை கழற்றி கொடுத்துவிட்டுச் சென்றதும் ஒரு ஷைத்தான் நபி சுலைமான் தோற்றமெடுத்தது வந்து அந்த மோதிரத்தை வாங்கி அணிந்துகொண்டு நபி சுலைமானைப் போல் அதிகாரம் செய்ய ஆரம்பித்தான். நபி சுலைமான் அவர்களை யாரும் நபி சுலைமான் என்று ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே நபி சுலைமான் வெளியேறிச் சென்று கடற்கரை ஓரத்தில் சுற்றித் திரிந்து கொண்டிருந்தார். காலப்போக்கில் நபி சுலைமானின் தோற்றத்தில் அதிகாரம் செய்துகொண்டிருந்த ஷைத்தானைக் குறித்து மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதை அறிந்த அந்த ஷைத்தான் தப்பி ஓடி, தான் அணிந்திருந்த அந்த மோதிரத்தை கடலில் வீசிவிட்டுச் சென்றான். பிறகு நபி சுலைமானுக்கு சாப்பிடக் கொடுக்கப்பட்ட மீனை அவர்கள் அறுத்தபோது அவரது மோதிரம் அதன் வயிற்றினுள் இருந்ததைக் கண்டார்கள். அதை எடுத்து அவர் அணிந்துகொண்டதும் அவருடைய ஆட்சி அதிகாரமெல்லாம் அவர்களுக்குத் திரும்பக் கிடைத்தது. [பார்க்க: தஃப்ஸீர் இப்னு கஸீர் திருக்குர்ஆன் 38 ஆவது அத்தியாயத்தின் வசனம் 34 இன் விளக்கப்பகுதி இது இஸ்ரவேலர்களால் சொல்லப்படும் சம்பவம், இதில் நம்ப இயலாத சில விஷயங்கள் இருப்பதையும் இமாம் இப்னு கஸீர் அவர்கள் அங்கு சுட்டிக்காட்டியுள்ளார்கள்.]

ராமன்: ராமனுக்கு பதவி கொடுக்கப்பட இருந்த நாளிலேயே சதியால் பதவி கொடுக்கப்படாமல் போனதுடன் காட்டுக்குச் சென்று வசிக்க வேண்டுமென்று நிர்பந்திக்கப்பட்டார். அவ்வாறே நடந்தது. பிறகு பல ஆண்டுகளுக்குப் பிறகு ராமர் ஆட்சிக்கு வந்தார்.

பதவியை சதி மூலம் இழந்து காடு, கடற்க்கரை என்று குறிப்பிட்ட காலம் சுற்றிய பின் மீண்டும் ஆட்சி அதிகாரத்தை திரும்பப் பெற்றதில் நபி சுலைமான், ராமன் ஆகியோர்க்கிடையில் ஒற்றுமை உள்ளது.

ஒற்றுமை 5: மிருகங்கள், பறவைகள் மொழியைப் புரிதல், அவற்றுடன் பேசுதல்.

நபி சுலைமான் அவர்கள் பறவைகள் மற்றும் பிற உயிரினங்களின் பேச்சுக்களை புரிந்து கொள்ளும் ஆற்றலும் அவற்றுடன் உரையாடும் ஆற்றலும் இறைவனால் வழங்கப்பட்டிருந்தார்கள். அதுபற்றிய விவரங்கள் திருகுர்ஆனில் 27ஆவது அத்தியாயத்தில் 15 முதல் 28அவது வசனம் வரை கூறப்பட்டுள்ளது.

ராமன்: ராவணனுக்கு எதிராக ராமன் நடத்திய போரில் ராமனின் படையினராக வானரங்கள் (குரங்குகள்) தான் இருந்துள்ளன. அவற்றில் ஒன்றாகிய அனுமான் ராமனுடன் பல காலம் இருந்து ராமனுக்கு உதவி செய்ததும் ராவணன் மூலம் கவர்ந்து செல்லப்பட்ட சீதையை அசோக வனத்தில் முதலாவதாக சந்தித்து ராமனின் செய்தியை கொண்டு சென்றதும் அனுமான்தான் என்பது ராமாயணத்தின் பிரபல செய்தியாகும். மற்ற உயிரினங்களின் பேச்சை ராமனால் புரிந்து கொள்ள முடியும் என்றும் இதன் மூலம் புரிய வருவதாகும்.

ஒற்றுமை 6: காற்று வசப்படுத்திக் கொடுக்கப்பட்டது.

நபி சுலைமானுக்கு, அல்லாஹ் (இறைவன்) காற்றை வசப்படுத்திக் கொடுத்திருந்தான். அப்படி அது அவர்களுக்கு வசப்படுத்திக் கொடுக்கப்பட்டிருந்தால் அவர்கள், தன்னையும் தான் விரும்பக் கூடிய பொருள்களையும், நபர்களையும் சுமந்து சென்று குறிப்பிட்ட இடத்தில் இறக்கி விட வேண்டுமென்று அதற்கு உத்தரவிட்டால் அவ்வாறே செய்யும். இது குறித்து ஏக இறைவன் தனது இறுதி வேதமான திருக்குர்ஆனில் கூறுவது:

சுலைமானுக்கு காற்றை (நாம் வசப்படுத்தி தந்தோம்) அதனுடைய காலைப் பயணம் ஒரு மாத (தூர)மும், அதனுடைய மாலைப் பயணம் ஒரு மாத (தூர)மும் ஆக இருந்தது. (அத்தியாயம் 34, வசனம் 12)

ராமன்: ராமருக்கு உதவியாக இருந்த வானரம் அனுமான் கடலைத் தாண்டி பறந்து சென்றதாகவும் ராவணன் மீது போர் தொடுப்பதற்கு மலைகளைப் பெயர்த்து தூக்கிக் கொண்டு பறந்து வந்ததாகவும் தான் ராமாயணக் கதையில் சொல்லப்படுகிறது.

இதுவெல்லாம் ராமனுக்காக நடந்தது. பொதுவாக குரங்குகளுக்கு இப்படி பறக்கும் சக்தி இல்லை. ராமனுக்கு உதவ வந்ததினாலேயே இந்த கூடுதல் சக்தி அவற்றுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அப்படியானால் அல்லாஹ் (இறைவன்), ராமனுக்கு காற்றை வசப்படுத்தி கொடுத்திருந்ததினால் இப்படி வானரங்கள் எல்லாம் வெகு தூரத்துக்கு காற்றின் மூலம் செலுத்தப்பட்டிருக்கின்றன என்பதைப் புரிகிறோம்.

இந்தக் கருத்தை உறுதிப் படுத்த ராமாயணக் கதையிலிருந்து இன்னொரு செய்தியைத் தர முடியும். அதாவது ராமபானம் என்பது போரில் ராமனிடம் உள்ள அம்புகளெல்லாம் தீர்ந்து இறுதியாக இருக்கும் ஒரே ஒரு அம்பை அவர் எய்வதாகும். அவ்வாறு இறுதியாக அவர் விடும் அம்பு எதிரியை தாக்கிவிட்டு அவரிடமே திரும்பி வந்து விடும். எய்த அம்பு இவ்வாறு திரும்பி வருவதென்றால் காற்றின் மூலம் நடந்தது என்று சொல்வது தான் பொருத்தமானது.

ஒற்றுமை 7: அரக்கரை அடக்குவது

அரக்கரை அடக்கி வைத்திருந்தது நபி சுலைமானின் சிறப்பான ஆற்றல்களில் ஒன்றாகும். இந்த ஆற்றலை அல்லாஹ் அவருக்கு வழங்கியிருந்தான். இது குறித்து இறுதி வேதமான திருகுர்ஆனில் கூறப்பட்டிருப்பதாவது:

ஷைத்தான்களிலிருந்து கட்டடம் கட்டுவோன், (முத்து போன்ற சாதனங்களை எடுத்து வர கடலில் ) மூழ்குவோன் ஆகிய ஒவ்வொருவரையும் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டிருந்த மற்றவர்களையும் அவருக்கு நாம் வசப்படுத்தி கொடுத்தோம். (அத்தியாயம் 38 வசனம் 37,38)

இந்த வசனங்களில் ஷைத்தான்கள் என்று குறிப்பிடப்படுபவர்கள் ஜின் எனப்படும் அரக்கர்கள் ஆவர். அவர்களில் அட்டூழியம் செய்பவர்களை தண்டிப்பதற்காகத் தான் அப்படிப்பட்டவர்கள் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டிருந்திருக்கிறார்கள்!

ராமன்: ராமாயணக் கதையின் முக்கிய அம்சமே ராவணன் என்ற கொடூர அரக்கனை வீழ்த்தியது தான். வேறு சில அரக்கர்களையும் வீழ்த்தியதாக ராமாயணக் கதை கூறுகிறது.

இதுவரை ராமன் குறித்து சொல்லப்படும் செய்திகள் இறைத்தூதர் சுலைமான் அவர்களைக் குறித்த சரித்திர செய்த்களோடு ஒத்துப்போவதை பார்த்தோம். இன்னும் சற்று ஆழமாக ஆராய்ந்தால் இருவருக்குமிடையில் அதிகமான ஒற்றுமைகள் இருப்பதை அறிந்து கொள்ளலாம்.

இந்த ஆய்வின் மூலம் நாம் சொல்வது என்னவெனில், எல்லா நபிமார்களையும் போல, இறைவன் ஒருவனை மட்டுமே வணங்க வேண்டும் என்ற போதனையைச் செய்த ஒரு நபிதான் சுலைமான் அவர்கள். ஃபலஸ்தீனில் இருந்துகொண்டு உலகின் பலப் பகுதிகளையும் பெரும் பலத்துடன் ஆட்சி செய்தார்கள். அவர்களின் வரலாறுதான் இந்தியாவில் உள்ளவர்களின் நம்பிக்கைகளுக்கும் சூழல்களுக்கும் தக்கவாறு மாறுதல் செய்யப்பட்டும் கூட்டிக் குறைத்தும் ராமாயணக் கதையாகச் சொல்லப்படுகிறது!

இவ்வாறு நாம் கூறும்போது சில ஐயங்கள் எழும். அந்த ஐயங்களையும் அதன் தெளிவுகளையும் பார்ப்போம்:

ஐயங்கள்:

1.       நபி சுலைமான் இறைத்தூதர். ஆனால், ராமன் கடவுளின் அவதாரம் என்று சொல்லப்படுபவர்.

2.       நபி சுலைமான் சில ஆயிரம் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்தவர் என்பது வரலாறு. ஆனால் ராமன் பல லட்சம் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்ததாக அவரை நம்புபவர்களால் சொல்லப்படுகிறது.

3.       நபி சுலைமான் இஸ்ரவேலர் இனத்தைச் சார்ந்தவர் ஆனால் ராமர் அந்த இனத்தோடு சம்பந்தமே இல்லாதவர் ராமாயணக் கதையின் படி!

தெளிவுகள்:

1.       நபி-இறைத்தூதர் குறித்து நம்பிக்கை உலகத்தில் உள்ள எல்லா மதத்திலும் உள்ள நம்பிக்கையாகும். இறைவனிடத்திலிருந்து வேதத்தைப் பெற்று அல்லது இறை அறிவிப்பைப் பெற்று அதை மக்களுக்கு எத்தி வைப்பவர் தான் இறைத்தூதர். இப்படிப்பட்டவர்கள் எல்லா மதத்திலும் இருக்கிறார்கள். ஆனால் இறைவனே மனிதனாக அவதாரமெடுத்து வருவது குறித்த நம்பிக்கை எல்லா மதத்திலும் கிடையாது. அது மனிதர்களாக உருவாக்கிக் கொண்ட நம்பிக்கையாகும். இது தவறான நம்பிக்கையாகும். இந்த நம்பிக்கை தவறான நம்பிக்கை என்பதற்கு பெரிய அடையாளம், கடவுள் பத்து அவதாரம் எடுப்பதாக இந்துக்கள் நம்புகிறார்கள். அந்த பத்து அவதாரமும் இந்தியாவில் வருகை புரிவதாகத் தான் சொல்கிறார்கள். அப்படியானால் மற்ற தேசங்களிலுள்ள மக்களெல்லாம் கடவுளுக்கு சம்பந்தமில்லாதவர்களா?இதுமட்டுமின்றி இவர்கள் இந்த அவதார நம்பிக்கைக்கு நிகராக கிருத்துவர்களும் இயேசு குறித்து நம்புகிறார்கள். ஆனால் அதை இந்த இந்துக்கள் ஏற்க மறுக்கிறார்கள். இதற்கு காரணம் இவர்களின் உள்மனதிலும் கடவுள் மனிதனாக வர முடியாது என்ற நம்பிக்கை இருப்பதால் தான்! ஆக, கடவுளின் அவதாரம் என்று ஒன்றும் இல்லை. இறைத்தூதர்களோ அல்லது இறைவழியில் மக்களை வழிநடத்திய நல்லவர்களோ தான் மிகைப்படுத்தப்பட்டு கடவுளின் அவதாரம் என்று கூறப்படுகிறார்கள். அல்லது கற்பனை கதாப்பாத்திரங்களாகவும் இருக்கலாம்.

2.       ராமன் பலலட்சம் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்ததாகச் சொல்லப்படுவது மிகைப் படுத்தப்பட்டது என்பது தெளிவு. பலலட்சம் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்தவர்களின் வாழ்க்கை வரலாறு எதுவும் அத்தனை லட்சம் வருடங்களுக்கு முன் யாரும் வாழ்ந்திருந்தால் பதிவு செய்யப்படவில்லை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வால்மிகி என்பவர் ராமனின் வாழ்க்கையைக் குறித்து பதிகிறார் என்றால் அதிகபட்சமாக சில ஆயிரம் வருடங்களாக அவருடைய வாழ்க்கை வரலாறு வாய்வழியாக சொல்லப்பட்டு வந்திருக்க முடியும், அவ்வளவுதான்!

3.       ஒருவர் ஒரு சமூகத்தின் வழிகாட்டியாக இருப்பதற்கு அவர் அந்த சமூகத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை.அவர் இன்னொரு சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் கூட அந்த சமுதாயத்தின் மீது அதிகாரம் செலுத்தி வழிநடத்துபவராக இருந்துவிட்டால் அவர் குறித்த வரலாற்றை அந்த சமூகம் பதிவு செய்து கொள்ளும்.
நபி சுலைமானைப் பொறுத்த வரை அவர்களுக்கு காற்றை இறைவன் வசப்படுத்திக் கொடுத்திருந்ததால் அவர்களின் தலைநகராகிய பைத்துல் முகத்தஸில் இருந்து வெகுதூரமான பிரதேசங்களுக்கும் சென்றிருக்கிரார்கள்.
நபி சுலைமான் அவர்கள் காபூல் வரை வந்திருப்பதாக அவர்களின் வரலாற்றில் கூறப்பட்டுள்ளது. [பார்க்க: கஸஸுல் அன்பியா (ஆசிரியர்: இமாம் இப்னு கஸீர்) பாகம்:2, பக்கம்:3,4 பதிப்பு: அஷ்ஷாமிலா மென்பொருள்]
காபூல், ஆப்கானிஸ்தானில் உள்ளது. ஆப்கானிஸ்தான், ஈரான் உள்ளிட்ட பகுதிகள் தான் ஆரியர்களின் பூர்வீகப் பகுதி (அவர்கள் இந்தியா மீது போர் தொடுப்பதற்கு முன்பு) என்பது வரலாறு. ஆக, காபூல் (ஆப்கானிஸ்தான்) மீது அதிகாரம் பெற்ற நபி சுலைமான் அவர்கள் அங்கிருந்த ஆரியர்களை ஓரிறைக் கொள்கையின் அடிப்படையில் வழிகாட்டியிருக்கிறார்கள். நபி சுலைமானுக்குப் பின் இந்தியா மீது போர் தொடுத்து இந்தியாவில் குடியேறி இந்தியர்களாக மாறிக் கொண்ட ஆரியர்கள் தங்களின் பழைய வழிகாட்டியும், நாயகருமான சுலைமானின் வரலாற்றை, இந்தியச் சூழலுக்குத் தகுந்தவாறு மாற்றியும் கூடுதல் குறைவு செய்தும் கூறியிருக்கிறார்கள். அத்துடன் தங்களிடம் நபி சுலைமானுக்குப் பின்னர் நுழைந்துவிட்ட பல தெய்வ நம்பிக்கைக்கு தகுந்தவாறும் அந்த வரலாற்றை அமைத்துக் கொண்டார்கள். (நபி சுலைமான், ஆரியர் தொடர்புக்கு வேறு விதமான காரணமும் இருக்கலாம்.)

முடிவுரை:

இதுவரை நாம் பார்த்ததிலிருந்து மக்களுக்கு ஓரிறைக் கொள்கையை போதித்து இறைவழியில் வழிநடத்திய நபி சுலைமான் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களைத் தான் இந்துக்கள் ராமன் என்று குறிப்பிடுகிறார்கள் என்பது புலனாகிறது. நபி சுலைமானை தெய்வமாக இவர்கள் சித்தரிப்பது ஒன்றும் ஆச்சரியப்படத்தக்க விஷயமல்ல. முற்காலத்தில் இறைத்தூதர்களாகவும், நன்மக்களாகவும் வாழ்ந்தவர்களை தான் மக்கள் தெய்வங்களாக கற்பனை செய்து அல்லாஹுவிற்கு இணை கற்பித்தார்கள்.

நபி இப்ராஹீம், இஸ்மாயில் ஆகியோரை கஅபாவின் சுவற்றில் சித்திரமாக தீட்டி வழிபாடு செய்துவந்த நபி (ஸல்) அவர்களுக்கு முன்பு வாழ்ந்த அரபு மதத்தவரையும், இன்றைக்கும் ஈசா அவர்களை இயேசு என்ற பெயரில் இறைவனின் அந்தஸ்தில் வைத்து வணங்கி வரும் கிறிஸ்துவரையும் இதற்கு உதாரணங்களாகச் சொல்லலாம்.

ஆகவே ராமன் என்ற சுலைமான் நபியை நேசிப்பவர்கள், அவர் போதித்த ஓரிறைக் கொள்கையை ஏற்று, அவர் உட்பட, இறைவனைத் தவிர்த்து எவரையும் வணங்கக் கூடாது என்ற சத்திய வழிக்கு வர வேண்டும். எல்லாம் வல்ல இறைவன் நல்வழி காட்டுவானாக!

குறிப்பு: இந்த ஆய்வுக் கட்டுரையில் நபி சுலைமான் அவர்கள் தான் இந்துக்களால் ராமன் என்று குறிப்பிடப்படுகிறார்கள் என்று சில வரலாற்றுப் பதிவுகளின் அடிப்படையில் கூறியுள்ளோம். பழங்கால வரலாற்றுச் செய்திகளை அணுகும் விதத்திலேயே இதையும் அணுக வேண்டும்.

எல்லாப் புகழும் அல்லாஹ் (இறைவன்) ஒருவனுக்கே!

 

Admin
1772 0

Leave a comment

Share

Share on Facebook

Article

Video

Newsletter

We are committed to helping you increase your taqwa. Our content is designed to inspire and motivate you to live a life that is pleasing to Allah (SWT). From practical tips to spiritual reflections, we aim to support your journey of faith.

Get In Touch

Pudupettai, Chennai

+91 98408 28225

info@ahlulislam.net

Follow Us
கேள்வி & பதில்

© ahlulislam.net. All Rights Reserved. Design by zeentech solutions