கேள்வி & பதில்
November 27, 2021
கேள்வி: கிளி உள்ளிட்ட பறவைகளை கூண்டில் அடைத்து வைத்து வளர்ப்பது ஆகுமானதா? அஸாருத்தீன், வில்லிவாக்கம், சென்னை.
கேள்வி: கிளி உள்ளிட்ட பறவைகளை கூண்டில் அடைத்து வைத்து வளர்ப்பது
ஆகுமானதா?
அஸாருத்தீன்,
வில்லிவாக்கம், சென்னை.
பதில்: கிளி, குருவிகள் உள்ளிட்ட பறவைகளை
கூண்டில் அடைத்தோ, அடைக்காமலோ வளர்ப்பது ஆகுமானதாகும். அடைத்து வைப்பதன் மூலமாக
பறவையின் சுதந்திரத்தை பறித்ததாக ஆகும் என்ற கருத்திலேயே கூண்டில் அடைப்பது பற்றி குறிப்பிட்டிருக்கின்றீர்கள்.
கூண்டுக்குள் அடைத்து வளர்த்தாலும் அவற்றுக்குத் தேவையான உணவு, நீர் உள்ளிட்டவற்றை சரியான
முறையில் கொடுத்து வந்தால் தவறாக ஆகாது.
அனஸ்(ரலி) அறிவித்தார்கள்,
நபி(ஸல்) அவர்கள் மக்களிலேயே
மிகவும் நற்குணமுடையவராக விளங்கினார்கள். எனக்கு 'அபூ உமைர்' என்றழைக்கப்பட்ட ஒரு தம்பி
இருந்தார்கள். அப்போது அவர் பால்குடி மறக்கவைக்கப்பட்ட பருவத்தில் இருந்தார் என்றே
எண்ணுகிறேன். நபி(ஸல்) அவர்கள் (எம் விட்டிற்கு வந்தால்), 'அபூ உமைரே! உன் சின்னக்குருவி
என்ன செய்கிறது?'
என்று கேட்பார்கள். அவன் அப்பறவையுடன்
விளையாடிக் கொண்டிருப்பான். ஸஹீஹ் புகாரி
: 6203
இந்த ஹதீஸின் படி ஒரு சிறுவர்
குருவியை வைத்து விளையாடியதை நபி(ஸல்) அவர்கள் அங்கீகரித்துள்ளார்கள்.
இந்த ஹதீஸில் கூண்டில் வைத்து வளர்த்தார்களா? இல்லையா? என்பது தெளிவாகக் கூறப்படவில்லை.
கூண்டில் வைத்திருக்காவிட்டால்
அது பறந்து சென்றுவிடாமல் இருப்பதற்காக அதன் இறக்கைகளை துண்டித்து வைத்திருக்க வேண்டும்.
அதன் இறக்கைகளை துண்டித்து அதை பறக்கவிடாமல்் தடுப்பதும் அதன் சுதந்திரத்தை பறிப்பதாகத்தான்
ஆகும்.
இதன் மூலம், பறவையின் இறக்கையை அது பறந்துவிடாமல்
இருப்பதற்காக துண்டித்து வைத்திருப்பதும் கூண்டில் அடைத்து வைத்திருப்பதும் ஆகுமானது
என்பது புலனாகிறது. அல்லாஹ் நன்கறிந்தவன்.
We are committed to helping you increase your taqwa. Our content is designed to inspire and motivate you to live a life that is pleasing to Allah (SWT). From practical tips to spiritual reflections, we aim to support your journey of faith.
© ahlulislam.net. All Rights Reserved. Design by zeentech solutions