பதில்
கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய் ரமலானில் நோன்பு நோற்பது சிரமமாக இருப்பின் ரமலான் நோன்பை விட்டு விடலாம். ஆனால் அந்த நோன்பை பின்வரும் காலங்களில் கழா செய்ய வேண்டும், அதேநேரம் ரமலானுக்கு பிறகு கழா செய்வதில் சிரமம் ஏற்பட்டால் அதாவது கர்ப்பிணி பெண் நோன்பை விட்டு அடுத்த ரமலானில் கைக்குழந்தை இருக்கும் பொருட்டு பாலூட்டி கொண்டிருப்பதனால் ஒன்றுக்கு மேற்பட்ட ரமலானை விடும் சூழ்நிலை ஏற்படுகிறது அவர்கள் ஃபித்யா கொடுக்க வேண்டும் அதாவது ஏழைக்கு உணவளித்தல் ஆகும். ஃபித்யா கொடுப்பதினால் அது நோன்புக்கு பரிகாரமாக அமைந்துவிடும்.
- ஷேய்க் அப்துர் ரஹ்மான் மன்பஈ.M.phil
Youtube - Ahlul Islam : கேள்வி 43, ஆடியோவிலிருந்து எடுக்கப்பட்டது.