ஹதீஸ் எப்படி புரிவது?
ஹதீஸ் - 6
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (பத்ருப் போரில் கொல்லப்பட்ட இறை நிராகரிப்பாளர்கள் போடப்பட்டிருந்த) பத்ரின் பாழடைந்த கிணற்றுக்கருகில் நபி(ஸல்) அவர்கள் நின்று, “உங்கள் இறைவன் உங்களுக்கு வாக்களித்ததை உண்மையானதாக பெற்றுக் கொண்டீர்களா?” என்று கேட்டார்கள். அப்போது நபியவர்களிடம், மரணித்தவர்களையா அழைத்து பேசுகிறீர்கள்? என்று கேட்கப்பட்டது. அதற்கவர்கள், “நீங்கள் அவர்களை விட நன்றாக செவியேற்பவர்கள் அல்ல. ஆனாலும் அவர்களால் பதிலளிக்க முடியாது” என்றார்கள்.
(புகாரி 1370).
Read More →மகத்தான வழிகாட்டிகள்-2
இமாம் மாலிக்(ரஹ்)
நமது முஸ்லிம் உம்மத்தில் தோன்றிய மாபெரும் மார்க்க அறிஞர்களில் முக்கியமானவர் இமாம் மாலிக் பின் அனஸ் (ரஹ்) அவர்கள். நான்கு பெரும் இமாம்களில் காலவரிசைப்படி இரண்டாமவர். அன்னார் மதீனா நகரில் ஹிஜ்ரி 93 ஆம் வருடத்தில் பிறந்தார்கள்.
Read More →குற்றம் செய்வோரை வெறுத்து ஒதுக்குவோம் !
தவறு செய்யும் மனிதர்களை திருத்துவதற்காகவும் அவர்கள் தமது தவறுகளை உணர்வதற்காகவும் அவர்களை புறக்கணிப்பதும் வெறுத்து ஒதுக்குவதும் ஒரு நல்ல வழிமுறையாகும். இதற்கு மார்க்க வழிகாட்டல் உள்ளது.
நபி (ஸல்) அவர்கள், தகுந்த காரணமின்றி தபூக் யுத்தத்தில் கலந்து கொள்ளாத மூன்று நபித்தோழர்களுடன் உறவாடுவதை குறிப்பிட்ட காலத்திற்கு தவிர்த்தார்கள் என்ற செய்தி ஹதீஸ் நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள்
கூறியதாவது: உமர்(ரலி) அவர்கள் மரணக் காயமுற்றிருந்தபோது, “சகோதரரே! நண்பரே!” எனக் கூறியவராக ஸுஹைப்(ரலி) சப்தமிட்டு அழத் தொடங்கினார்...
அப்போது உமர்(ரலி) 'உயிருடனிருப்பவர்கள் அழுவதன் காரணமாக மய்யித் வேதனை செய்யப்படுகிறது
என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதை நீர் அறியவில்லையா?' எனக் கேட்டார்.
(புகாரி 1287)
நல்லவர்கள் தான்! என்றாலும், அறியாமையினால் சில தவறுகளை
செய்கிறார்கள். அப்படிப்பட்ட தவறுகளை இந்த தொடரில் பார்த்து வருகிறோம்.
இம்மாத தொடரில் பெண் பிள்ளைகளுக்கு வாரிசு சொத்தில்
உரிமை மறுக்கப்படும் தவறை குறித்து பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்!
பெண் பிள்ளைகளுக்கு பெற்றோரின் சொத்தில் உரிமையே
இல்லை என்று பொத்தாம் பொதுவாக மறுக்கக் கூடியவர்கள் பெரும் பாவிகள், அநியாயக்காரர்கள், இவர்கள் நல்லவர்களில் சேரமாட்டார்கள்.
நாம் இங்கு குறிப்பிடுவது மார்க்கத்தின் கடமைகளையும்
சட்டதிட்டங்களையும் பேணி நடக்கும் சிலர், தமது தவறான புரிதலால் சில காரணங்களைக் கூறி தம்
சகோதரிகளுக்கு தமது குடும்ப சொத்தில் பங்கு கொடுக்காமல் இருந்து விடுகிறார்கள்.
அல்லாஹ்வின் வேதத்தில் கூறப்படும் சட்டத்தின்படி
பெற்றோர் விட்டுச் சென்ற சொத்தில் ஆண் பிள்ளைகளுக்கு கொடுக்கப்படுவதில் பாதி பெண் பிள்ளைகளுக்கு
கொடுக்கப்பட வேண்டும்.
கேள்வி: கிளி உள்ளிட்ட பறவைகளை கூண்டில் அடைத்து வைத்து வளர்ப்பது ஆகுமானதா?
அஸாருத்தீன்,
வில்லிவாக்கம், சென்னை.
பதில்: கிளி, குருவிகள் உள்ளிட்ட பறவைகளை கூண்டில் அடைத்தோ, அடைக்காமலோ வளர்ப்பது ஆகுமானதாகும். அடைத்து வைப்பதன் மூலமாக பறவையின் சுதந்திரத்தை பறித்ததாக ஆகும் என்ற கருத்திலேயே கூண்டில் அடைப்பது பற்றி குறிப்பிட்டிருக்கின்றீர்கள். கூண்டுக்குள் அடைத்து வளர்த்தாலும் அவற்றுக்குத் தேவையான உணவு, நீர் உள்ளிட்டவற்றை சரியான முறையில் கொடுத்து வந்தால் தவறாக ஆகாது.
அனஸ்(ரலி) அறிவித்தார்கள்,
Read More →அரபியில்தான்
குத்பாவா?
வெள்ளிக்கிழமை ஜுமுஆ கடமையில்
முக்கிய அம்சமாக குத்பா எனும் பிரசங்கமும் உள்ளது. தொழுகைக்கு முன்னர் நிகழ்த்தப்படும்
இந்த குத்பா மக்களுக்கு மார்க்க வழிகாட்டுதலை எடுத்துச் சொல்வதற்கு முக்கிய வழியாக
இருக்கிறது.
நபி(ஸல்) அவர்கள் நிகழ்த்திய
குத்பா பற்றி கூறப்படுவதாவது : நபி (ஸல்) அவர்கள் (ஜுமுஆவின்போது) குர¢ஆன் (வசனங்களை) ஓதி, மக்களுக்கு நினைவூட்டி இரு
(குத்பா) உரைகள் நிகழ்த்துவார்கள். அவ்விரு உரைகளுக்கிடையே அமர்வார்கள்.
(முஸ்லிம் 1564 )
நபியவர்கள் குத்பாவில் குர¢ஆன் வசனங்களை சொல்லிக் காட்டியிருக்கிறார்கள், மார்க்க விசயங்களை நினைவூட்டியிருக்கிறார்கள்.
மக்களுக்கு குர¢ஆனின் செய்தியை புரிய வைப்பதற்கும்
அவர்களுக்கு மார்க்க விஷயங்களை நினைவூட்டுவதற்கும் அவர்களுக்குப் புரியும் மொழியிலேயே
குத்பாவில் பேச வேண்டும். இதன்படி நமது இந்தியாவிலும் உலகின் பல பாகங்களிலும் அந்தந்தப்
பகுதி மக்களின் மொழி யிலேயே குத்பா எனும் பிரசங்கம் நடைபெறுகிறது.
அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாஅத்
வழிமுறையை பின்பற்றுவோம்
நபி(ஸல்) அவர்கள் மற்றும் நபித்தோழர்களின் காலத்திற்குப் பின்னர் சத்திய இஸ்லாத்தின் வழியிலிருந்து தடம் புரண்டு வழிகெட்ட கூட்டத்தினர் பலர் உருவானார்கள். அப்போது நேர்வழி நடக்கும் நன்மக்களை அடையாளப் படுத்துவதற்காக பயன்படுத்தப் பட்ட வாசகம்தான் அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாஅத் என்பது.
நபி வழியையும் கூட்டமைப்பையும் உடையவர்கள் என்பது இந்த வாசகத்தின் கருத்து. பிற்காலத்தில் இந்த நல்ல பெயரை தங்களுக்குத் தாங்களே பயன்படுத்திக் கொண்டிருப்பவர்கள் தங்களின் நல்ல முன்னோர் எந்த சிறந்த கொள்கையையும் நடைமுறையையும் குறிப்பதற்காக இந்த பெயரை பயன்படுத்தினார்கள் என்பதை அறியவில்லை.