ஆய்வுகள்

July 04, 2023

வழிகாட்டும் வாழ்வியல் - தொடர் 02

நற்குணமும் நபியும்

வழிகாட்டும் வாழ்வியல்


தொடர்:02


- அஷ்ஷேக் முஹம்மது சுபைர். முஹம்மதி.,பிர்தௌஸி.



நீங்கள் வந்து விடுங்கள்.. 100 ஒட்டகங்களை தருவேன்...

மக்கா வெற்றி என்பது அரபிகள் யாரும் எதிர்பாராத நிகழ்ச்சியாகும். அதற்குப்பின் பலர் இஸ்லாத்தை ஏற்றனர். கர்வமும், முரட்டு குணமும், கொண்ட சில சமூகத்தவர்கள் அடிபணிய மறுத்தனர்.

அவற்றுள் முன்னிலை வகுத்தவர்கள் ஹவாஸின், ஸகீஃப் கோத்திரத்தினர்இவர்களுடன் கைஸ்அய்லான் கோத்திரத்தைச் சார்ந்த நஸ்ர்ஜுஷம்ஸஅது இப்னு பக்ர் ஆகிய குடும்பத்தினரும், ஹிலால் குடும்பத்தைச் சேர்ந்த சிலரும் சேர்ந்து கொண்டனர்.

வெற்றியை ஏற்கமுடியாத அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு எதிராக போரிட முடிவு செய்தார்கள். முஸ்லிம்களின் வெற்றியை ஏற்பது இந்தக் கோத்திரங்களுக்கு மானப் பிரச்சனையாகவும், கண்ணியக் குறைவாகவும் தென்படவே, முஸ்லிம்கள் மீது தாக்குதல் தொடுக்க ஹுனைன் பள்ளதாக்கில், யுத்தத்திற்காக படையின் தளபதி மாலிக் இப்னு அவ்ஃப் அந்நஸ்ரா என்பவனின் தலைமையில் இணைவைப்பாளர்கள் ஒன்று சேர்ந்தனர்.

ஹவாஸின் கோத்திரத்தை சேர்ந்த இவன், அந்த கோத்திரத்திற்கு தலைவரும் படை தளபதியுமாவான். இவன் ஸகீஃப் கோத்திரத்தின்  உதவியுடன் 25 ஆயிரம் போர் வீரர்களுடன் போருக்கு படை திரட்டி ஹுனைன் பள்ளதாக்கில் தயாராக வந்து இறங்கினான்.

அவன் சந்தேகமின்றி ஒரு மாபெரும் வீரரும், தைரியமுள்ள நபருமாவான். படைத்தளபதியான மாலிக் இப்னு அவ்ஃப் நஸ்ரா தன் கூட்டத்தாருக்கு ஒரு கட்டளையிடுகிறான்.

அவன் படைவீரர்கள் அனைவரும், பொருட்கள், செல்வங்களுடனும்மனைவிமக்கள் அனைவருடனும், போர்க்களத்திற்கு வந்து வீரதீரமாகப் போரிட வேண்டும் என்றான். ஒவ்வொரு படை வீரரின் பின்னணியிலும், குடும்பம் இருந்தால் தன் குடும்பத்தையும், பொருளையும் பாதுகாக்க தீவிரமாக போர் புரிவார்கள் என்ற எண்ணம் அவனுக்கு.

அவனின் மதிப்பும், கண்ணியமும் எந்த அளவிற்கு இருந்தது என்றால், அவனின் தீர்ப்பை கேட்டவுடன், அனைத்து சமூகமும், தன் பொருளாதாரம், கால்நடைகள், பெண்கள், பிள்ளைகள், மற்றும் அனைத்தையும் சுமந்தவர்களாக போர் களத்திற்கு வந்துவிட்டார்கள்.

சிலர் இவனின் கருத்திற்கு மாற்றமான கருத்து கூறினர். ஆனாலும் இவன் அதை ஏற்க மறுத்துவிட்டார். அதைக் கேட்கவில்லை. அந்த அளவு இஸ்லாத்தையும் முஹம்மது நபி (ஸல்) அவர்களையும் அழிக்க வேண்டும் என்ற எண்ணம் வேரூன்றி இருந்தது. அதுமட்டுமின்றி இவ்வாறு செய்தால் போர் வீரர்கள் இந்த மைதானத்தில், போர் களத்தில் நிலைத்திருப்பார்கள், இதிலிருந்து விரண்டு ஓடுவது சாத்தியமில்லை. அவ்வாறு ஓடினாலும் யாருக்காக? எங்கே? யாரிடம்? ஓடுவது என்பது ஒரு மாபெரும் கேள்வியாகவே இருந்தது. ஆக அவர்கள் நம்மை விட்டு ஓடுவது சாத்தயமில்லாத ஒன்று என்று கருதினான்.  எனவே இவனின் கட்டளைக்கு பணிந்து அனைவரும் போர்க்களத்திற்கு வந்தவிட்டனர்.

அவனின் போர் அமைப்பு, ஒழுங்கு, வரிசையை பார்த்தால், அது பெரிய வெற்றியாகவே ஆரம்பத்தில் இருந்துள்ளது. இதன் காரணமாகத்தான் ஹுனைன் போரின் ஆரம்பத்தில் முஸ்லிம்களின் கால்கள் விரண்டோடின. படைகள் சிதறின.

முதலில் போர், எதிரிகளுக்கு சாதகமாக அமைந்தாலும், இறுதியில் அல்லாஹ்வின் உதவியாலும், கருணையாலும், நபி (ஸல்) அவர்களின் போர் திறமையாலும், வீரத்தினாலும், தைரியத்தினாலும், ஓடிய முஸ்லிம்கள் ஒன்று திரண்டு போர் புரிந்தனர். இதில் அல்லாஹ் முஸ்லிம்களுக்கு மாபெரும் வெற்றியை தந்தான்.

போரின் இரண்டாம் கட்டத்தில் எதிரிகள் தாங்கள் கொண்டு வந்த உடமைகள் எல்லாம் விட்டுவிட்டு போர் களத்திலிருந்து ஓட்டம் பிடித்தனர். அனைத்தையும் விட்டு விட்டு ஓடிய ஹவாஸின், ஸகீஃபு கூட்டத்தார் தாயீஃப்பில் தஞ்சம் புகுந்தனர்.


போர் தளபதியான மாலிக் என்ன ஆனான்? அவனும் போர் களத்திலிருந்து ஓடிவிட்டான். ஓடியவன். தாயிஃப் நகரில் ஸகீஃப் கோத்திரத்தின் கோட்டையில் அடைக்கலம் புகுந்தான்.


இதே சந்தர்பத்தில் ஹவானின் குடும்பத்தார்கள் இஸ்லாத்தில் இணைய சிந்தித்தார்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து இஸ்லாத்தை ஏற்றனர். நபி (ஸல்) அவர்கள் அவர்களுடய மனைவி, மக்களை திருப்பி தந்துவிட்டார்கள்.


சகோதரர்களே! சற்று சிந்தியுங்கள். போர்களத்தில் தோல்வி அடைந்த ஒரு படையுடைய தளபதியின் நிலை என்னவாக இருக்கும்? அவனின் மனநிலை எவ்வாறு இருக்கும்? அவன் தன் முகத்தை மக்களுக்கு எவ்வாறு காண்பிக்க இயலும்?.


தன் கோத்திரம் மற்றும் குடும்பத்தினர் விட்டும் தூரமாக தனியாக ஸகீஃப் கோத்திரத்தின் கருணையில், தயவில் மற்றும் ஆதரவில் இருக்க வேண்டிய நிலை அவனுக்கு. அவனிடம் பொருளாதாரமும் இல்லை, பணமும் இல்லை, பொருளும் இல்லை. குடும்பத்தாரும் இல்லை, யாரும் இல்லாத ஊரில் தனியாக திரியும் நிலை அவனுக்கு. ஸகீஃப் கோத்திரத்திடம் தன் உயிருக்கான பயமும், கவலையும், அச்சமும், இருந்தது. ஏனெனில் ஹுனைன் போரின் தோல்விக்கான காரணம் நான் தான் என்று கருதி, கொன்று விடுவார்கள் என்று.

மக்கள் முன் வருவதற்கே பெரும் அவமானமாக கருதினான். அந்நேரத்தில் ஹவாஸின் குடும்பத்தை சேர்ந்த பலரும் இஸ்லாத்தில் இணைந்தனர். அவனை பற்றி சிந்திப்போர் எவருமில்லை. அவனின் நிலை என்னவானது என்பது கூட, கேட்கவோ விசாரிக்கவோ எவரும் கிடையாது.

அச்சமயத்தில் தான் நபி (ஸல்) அவர்கள் மாலிக் இப்னு அவ்ஃப் பற்றி சிந்திக்கிறார்கள். அவரைப் பற்றி விசாரிக்கிறார்கள். அவரின் நிலை என்னவானது என்பதை மக்களிடம் வினவினார்கள். மாலிக் இப்னு அவ்ஃப் என்னவானார்? அவர் எங்கே இருக்கிறார்அவரின் நிலை என்ன? என நபி (ஸல்) அவர்கள் விசாரித்தார்கள்.

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

قال حدثني محمد بن إسحاق عن نافع عن عبدالله بن عمر قال

«أَخْبِرُوا مَالِكًا أَنَّهُ إِنْ أَتَانِي مُسْلِمَا رَدَدْتُ إِلَيْهِ أَهْلَهُ وَمَالَهُ، وَأَعْطَيْتُهُ مِائَةً مِنَ الْإِبِلِ»

تاريخ الأمم والرسل والملوك- الطبري - (2 / 174),مكارم الأخلاق لابن أبي الدنيا (ص: 123),  معرفة الصحابة لأبي نعيم (5/ 2473),

صحيح وضعيف تاريخ الطبري (7/ 219),  السيرة النبوية - راغب السرجاني (42/ 8، بترقيم الشاملة آليا),

تهذيب سيرة ابن هشام (ص: 382، بترقيم الشاملة آليا), اللؤلؤ المكنون في سيرة النبي المأمون (4/ 174), السيرة النبوية لابن هشام - الجيل (5/ 166),

تاريخ الخميس في أحوال أنفس النفيس (2/ 113), الاكتفاء بما تضمنه من مغازي رسول الله - صلى الله عليه وسلم - والثلاثة الخلفاء (1/ 537),

دلائل النبوة للبيهقي محققا (5/ 198), الروض الأنف ت الوكيل (7/ 244), المنهج الحركي للسيرة النبوية (3/ 165),

مرويات غزوة حنين وحصار الطائف (2/ 468), موسوعة التخريج (ص: 27365), موسوعة أطراف الحديث (ص: 250653).

அவர் இஸ்லாத்தை ஏற்று என்னிடம் முஸ்லிமாக வந்தால், நான் அவரின் குடும்பத்தையும் உடைமைகளையும், பொருள்களையும், அவரிடமே திருப்பி ஒப்படைத்துவிடுவேன் என அவரிடம் தெரிவித்துவிடுங்கள். அத்தோடு 100 ஒட்டகங்களையும் அவருக்கு நான் வழங்குவேன் என்று அவரிடம் அறிவித்துவிடுங்கள்.

சகோதரர்களேநம் உயிரை எடுக்க தயாராக இருக்கும் ஒரு எதிரியுடன், இவ்வாறு நடந்து கொள்ள நம்மால் முடியுமா? இயலுமா? அல்லது அந்த எதிரியை பற்றி இவ்வாறு சிந்திப்போமா? அவர் மீது நல்ல அபிப்பிராயங்கள் வைக்கத்தான் செய்வோமா? சமீபத்தில் வெற்றி பெற்ற ஒரு படை தளபதி தன் விரோதியை பற்றி நேர்மறை சிந்தனை வைக்க இயலுமா? அல்லது சிந்திக்க தான் செய்வாரா? இது தான் நபி (ஸல்) அவர்களின் குணாதிசயங்கள். தன் எதிரியை கூட தன் மார்போடு இணைத்து தழுவுகிறார்.

இந்த செய்தி மாலிக் இப்னு அவ்ஃப் (ரலிஅவர்களை எட்டியது. அவர் இருக்கும் கஷ்டமான, துன்பமான, சூழ்நிலைக்கு இது அவரின் இதய குரலாக இருந்தது. இதைக் கேள்விப்பட்டவுடனே மாலிக் இப்னு அவ்ஃப் (ரலிஇஸ்லாத்தை ஏற்க விரைந்தார்கள்.

தாயிஃப் நகரத்தைவிட்டு கிளம்ப தயாரானார். இவரை பற்றி நபி (ஸல்) கூறியதை ஸகீஃப் கோத்திரம் கேள்விப்பட்டு இவரை கைது செய்து விடுவார்கள் என அஞ்சினார். எனவே அவர் அவருக்காக ஒரு பல்லாக்கை தயார் செய்ய கூறினார். மேலும் ஒரு குதிரையையும் கொண்டு வர சொன்னார். தாயிஃபில் அவருக்காக குதிரை கொண்டுவரப்பட்டது. இரவு நேரத்தில் குதிரை மீது அமர்ந்து புறப்பட்டார். அவருக்காக ஒரு இடத்தில காத்திருந்த பல்லாக்கு வரை சென்று அதில் ஏறி நபி (ஸல்) அவர்களை ஜிஃரானாவில் சந்தித்தார். இஸ்லாத்தை ஏற்றார்.

அவரை எந்த விதமான குறையும் கூறாமல், எந்த ஒரு கேள்வியும் கேட்காமல், எந்த ஒரு நிபந்தனையும் வைக்காமல், நபி (ஸல்) அவர்கள் தான் வாக்களித்த படி அனைத்தையும் நிறைவேற்றினார்கள். கொடுத்தும் விட்டார்கள். அவர் நினைத்ததை விட மிக நல்ல முறையில் நடந்தும் கொண்டார்கள். பிறகு, அவரையே ஹவாஸின் கோத்திரத்தின் தலைவராக நியமித்தார்கள். மேலும் தாயிஃபை வெல்லும் பொறுப்பும் கொடுத்தார்கள். தாயிஃபை நோக்கி செல்லும் படைக்கு மாலிக் இப்னு அவ்ஃப்யே (ரலி) படைத்தளபதியாக அனுப்பி வைத்தார்கள்.

*****

Admin
436 0

Leave a comment

Share

Share on Facebook

Article

Video

Newsletter

We are committed to helping you increase your taqwa. Our content is designed to inspire and motivate you to live a life that is pleasing to Allah (SWT). From practical tips to spiritual reflections, we aim to support your journey of faith.

Get In Touch

Pudupettai, Chennai

+91 98408 28225

info@ahlulislam.net

Follow Us
கேள்வி & பதில்

© ahlulislam.net. All Rights Reserved. Design by zeentech solutions