ஆய்வுகள்

August 17, 2023

பொது சிவில் சட்டம் எனும் பூச்சாண்டி!

 பொது சிவில் சட்டம்

எனும் பூச்சாண்டி

- ரஹ்மத்துல்லாஹ் ஃபிர்தவ்ஸி


" மீண்டும் பூச்சாண்டி கிளம்பியிருக்கிறது! " இந்த கட்டுரையை இந்த தலைப்பு போட்டு தான் ஆரம்பம் செய்ய வேண்டி உள்ளது பொதுசிவில் சட்டம் தேவையா தேவையில்லையா என்ற கருத்துகளை பதிவு செய்ய மத்திய அரசு கடந்த மாதம் 14ம் தேதி வரையும் அடுத்து 28 தேதி வரையும் நீட்டிப்பு செய்தது இந்த கட்டுரையை படிக்கும் போது நீட்டிப்பு செய்திருக்கிறதா அல்லது முடித்து வைத்திருக்கிறதா என்ற செய்தியை நாம் கண்டிருப்போம்.

இதில் மத்திய அரசு எதிர்பார்த்த அளவிற்கு மக்கள் வாக்களிக்க வில்லை அரசு பெரும்பான்மை மக்கள் வேண்டும் என சொல்வார்கள் என நினைத்தது, ஆனால் அதில் தோல்வி தான் மிஞ்சியது வெறும் 50 லட்சம் மக்கள் மட்டுமே இந்த வாக்கெடுப்பில் பங்கெடுத்து இருக்கிறார்கள்.

அதில் பெரும்பாலானவை வேண்டாம் என்பதே. எனவே தான் வாக்கெடுப்பு காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது 145 கோடி மக்கள் வாழும் இந்த நாட்டில் 144.5 கோடி மக்கள் வாக்கெடுப்பில் பங்கெடுக்க வில்லையென்றால் ஒட்டு மொத்த இந்தியாவும் இந்த பொது சிவில் சட்டத்தை ஆதரிக்க வில்லை என்பது திட்ட வட்டமானாதால் மத்திய அரசு என்ன செய்வது என தெரியாமல் நிற்கிறது.


ஏன் தீடீரென இதை அரசு கையில் எடுத்திருக்கிறது என தெரிய வேண்டிய அவசியமும் உள்ளது எப்போதும் பாஜக அரசு தன்னை தக்க வைத்துக் கொள்ளவும் ஆட்சி அதிகாரத்தில் அமரவும் ஏதாவது யுக்தியை கையாளும் ஆனால் இப்பொழுது அவர்களின் கைவசம் எதுவும் இல்லை.

இருப்பது இரண்டே இரண்டு தான் ஒன்று பொதுசிவில் சட்டம் மற்றொன்று இந்துராக்ஷ்ரம் இந்த இரண்டை வைத்து தான் அரசியல் செய்ய வேண்டும் அதனால் தான இப்போதிக்கு இதை வைத்து அரசியல் செய்து ஆட்சியில் ஏற்பட்ட தவறுகளையெல்லாம் மறைத்து மூன்றாம் முறையாக அரியணை ஏறலாம் என்பது தான் நோக்கம், இந்த முறை எதிர்பார்த்த பலன் கிடைக்க வில்லை.


இந்த பொதுசிவில் சட்டம் கொண்டு வருவதாக சொல்கிறார்களே இவர்கள் தான் இதை முதன் முதலில் எதிர்த்தவர்கள் என்பதை உலகிற்கு அடையாளம் காட்ட வேண்டும்.


இந்து மகாசபை எதிர்ப்பு- அம்பேத்கர் ராஜினாமா:

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான நேரு, நாடு முழுவதும் இந்துக்களுக்கு ஒரு பொதுவான சிவில் சட்டத்தைக் கொண்டுவர இந்து தனிநபர் சட்டங்களை தொகுக்க அம்பேத்கர் தலைமையில் ஒரு குழு அமைத்தார். பெண்களுக்கு சம உரிமை, சொத் துரிமை, விவாகரத்து உரிமை வழங்க வேண்டுமென்பதில் அம்பேத்கருடன் நேருவும் ஒத்த கருத்து கொண்டிருந்தார். அத்தகைய கருத்துகளையொட்டி அம்பேத்கர் முயன்று உருவாக்கிய மசோதா இந்து பழமைவாதிகளிடமும், இந்து மகா சபையினரிடமும் (இன்றைய பிஜேபியின் முன்னோடி) கடுமையான கண்டனத்தை சந்தித்தது. அன்றைய குடியரசுத் தலைவராக இருந்த இராஜேந்திர பிரசாத் இந்த மசோதா இந்து பாரம்பரியத்துக்கு எதிரானது என்றும், ஒவ்வொரு இந்து குடும்பத்தையும் பாதிக்கும் என்று கூறியதோடு, மசோதா நிறைவேறினாலும் சட்ட அங்கீகாரம் பெற தன்னுடைய கையெழுத்து கிடைக்காது என்பதையும் உணர்த்திவிட்டார். பெண்களைத் தவிர பெரும்பாலான காங்கிரஸ் உறுப்பினர்களும், எதிர்ப்பாக இருந்தனர். எனவே எவ்வித விளக்கமுமின்றி மசோதா கைவிடப் பட்டது. இதை எதிர்த்து சட்ட அமைச்சராக இருந்த அம்பேத்கர், தன் பதவியை ராஜினாமா செய்தார்.


முதன் முதலில் இச்சட்டம் வேண்டாம் என்றவர்களே இவர்கள் தான் ஏனெனில் இது ஒட்டு மொத்த இந்தியாவிற்கும் எதிரானது இந்த சட்டத்தால் எந்த மாற்றத்தையும் கொண்டு வர முடியாது என தெரிந்து தான் பல மாநிலங்களுக்கும் விளக்களிக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் விளக்களித்தால் எதற்கு இந்த சட்டம் எல்லோருக்கும் விளக்களித்து விட்டு இறுதியில் முஸ்லிம்களுக்கு மட்டும் பொதுசிவில் சட்டம் கொண்டு வருவார்கள் இது தான் இவர்களின் திட்டமும் நோக்கமும்.


பொது சிவில் சட்டம் என்றால் என்ன?


இந்தியாவில் இரண்டு சட்டங்கள் உள்ளன:

சிவில் ,கிரிமினல்.


கிரிமினல் சட்டம் என்பது எல்லாருக்கும் ஒன்று தான்.


சிவில் சட்டத்தை பொறுத்தவரை அந்தந்த மதத்திற்கேற்றவாறு மாறுபடும்.


சிவில் சட்டம் என்றால் என்ன?


சட்டங்கள் இரண்டு வகைப்படும். 1) சிவில் 2) கிரிமினல்


ஒருவருக்கு கடன் கொடுத்து அந்தக் கடனை திருப்பிக் கேட்கும் போது கொடுக்காமல் அவர் மீது வழக்குத் தொடுத்தால் அது சிவில். கடனைத் திருப்பிக் கொடுக்காதவர் மீது ஆத்திரம் கொண்டு அவரைப் போட்டுத்தள்ளிவிட்டால் அதே வழக்கு கிரிமினல் பிரிவில் பதிவு செய்யப்பட்டும்.


இந்திய தண்டனைச் சட்டத்தில் சிவில் மற்றும் கிரிமினல் விவகாரங்களில் இஸ்லாமியர்களின் நிலை என்ன?


ஒரு இஸ்லாமியர் லைசன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுகின்றார் அல்லது சிக்னலை மீறி விட்டார் என்று வைத்துக் கொள்வோம். அவருக்கு தனி சிவில் சட்டம் கிடையாது. எல்லோருக்கும் போலவே மோட்டார் வாகனச் சட்டம் 1986 பிரிவு 18ன் கீழ் அபராதம் அல்லது தண்டனை அல்லது இரண்டும் கிடைக்கும்.


ஒரு முஸ்லிம் மற்றொரு இந்துவை ஏமாற்றி விட்டார் என்று வைத்துக் கொள்வோம். அவர் இஸ்லாமிய தனிச்சட்டத்தின் படி தப்பிக்க இயலாது. அவருக்கு இந்திய தண்டனைச் சட்டம் இபிகோ 420ன் படி தண்டிக்கப்படுவார்.



ஒரு இஸ்லாமியர் திருடிவிட்டார் என்று வைத்துக் கொள்வோம். அவரை தனிசிவில் சட்ட சலுகை பிரகாரம் விட்டு விட இயலாது (ஷரீஆ சட்டத்தின் படி கைகளை வெட்ட வேண்டும் என்பது வேறு விடயம்) அவர் இபிகோ 378 -382 பிரிவுகளுக்குள் தண்டிக்கப் படுவார்.


இதெல்லாம் சிவில் சட்டத்தில் வரும். ஒருவேளை ஒரு முஸ்லிம் ஒருவரைக் கொலை செய்து விட்டார் என்றால் அதற்கு என்ன தண்டனை? அனைவருக்கும் போலவே இஸ்லாமியருக்கும் இபிகோ 302 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும். ஆக இப்படியாக அனைத்திலும் ஒன்றி வரும் இந்திய குற்றவியல் தண்டனைச் சட்டம் சிலவற்றில் சில பிரிவினருக்கு சில சலுகைகளை வழங்கியுள்ளது. அதுதான் தனி சிவில் சட்டம்.


தனி சிவில் சட்டம் என்றால் என்ன?


இந்திய தண்டனைச் சட்டம் (இபிகோ) ஜாதி மத அடிப்படையில் சில மதத்தவருக்கு சில சலுகைகளை வழங்கியுள்ளது. அதன்படி சீக்கியர்கள் தங்களுக்கு பாதுகாப்பிற்காக எந்நேரமும் கத்தி வைத்திருக்கலாம். காவல்துறை மற்றும் ராணுவத்தில் உள்ளவர்கள் தினசரி சவரம் செய்ய வேண்டும். அரசு வழங்கும் தொப்பியை மட்டுமே அணிய வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. ஆனால் போலீஸ் மற்றும் ராணுவத்தில் இருக்கும் சீக்கியர்கள் தாடி வைத்துக் கொள்ளலாம் அதுபோல 


அவர்களின் தலையில் டர்பன் தொப்பி வைத்துக் கொள்ள தனி சிவில் சட்டம் அனுமதிக்கிறது.


இந்துக்களுக்கும் சிலவகையான தனிசிவில் சட்டங்கள் உள்ளன. இந்துக்கள் கூட்டுக் குடும்பமாக இருந்தால் அவர்களுக்கு வரியில் சலுகைகள் உண்டு. அதுமட்டுமின்றி இந்துக்களுக்கு குழந்தைகளைத் தத்தெடுக்கவும் ஜீவனாம்சத்திற்கும் தனி சட்டங்கள் உண்டு இதை இந்து தத்து மற்றும் ஜீவனாம்சம் சட்டம்-1956 உறுதிசெய்கின்றது.


அதுபோல தலித்துக்களுக்கு ஒரு தனி சிவில் சட்டம் உண்டு. PCR (The Protection of civil Rights) என்று சொல்லக்கூடிய தனிச்சட்டம் தலித்துகளுக்கு மட்டும்தான் பொருந்தும். தலித்துகளை அடித்து உதைத்தால், அவர்களின் சாதிப் பெயரைச் சொல்லி யாரேனும் திட்டினால் கூட அவர்கள் மீது PCR Act 1955 ன் படி குற்றம் சாட்டப்பட்டவர் மீது ஜாமீனில் வர முடியாத பிரிவின் கீழ் வழக்குத் தொடுக்கலாம்.


இந்தியாவில் நிர்வாணமாகத் திரிந்தால் அவர்கள் மீது பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் (Public Nuisance) பிரிவில் வழக்குப் போடலாம். ஆனால் இந்துச் சாமியார்களுக்கும் அகோரிகளுக்கும் இந்தச் சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகின்றது. ஒரு முஸ்லிம் சாமியார், கிருத்துவ பாதிரியார் பொது வெளியில் நிர்வாணமாக இருந்தால் பிடித்துக் கொண்டு போய் லாடம் கட்டலாம். ஆனால் இந்து சாமியாரை ஒன்றும் செய்ய முடியாது.



முஸ்லிம்கள் தங்கள் மத வழக்கப்படி ஜமாஅத்தின் மூலம் திருமணம் முடித்துக் கொள்ளலாம் அது செல்லுபடியாகும். தலாக், குலா போன்றவைகளை ஜமாஅத்தினை வைத்து தீர்த்துக் கொள்ளலாம். ஒரு முஸ்லிம் 4 பெண்களைத் திருமணம் செய்து கொள்ள தனிசிவில் சட்டம் அனுமதிக்கின்றது. சொத்துரிமையை மதச் சட்டத்தின் படி பிரிவினை செய்து கொள்ளலாம்.

ஆக இவ்வளவு பிரச்சினைகளை இந்திய சட்டத்தின் படி அனுகும் முஸ்லிம்கள் நான்கு விடங்களில் மட்டும் தங்கள் மதச் சட்டத்தின் படி நடந்து கொள்ள அனுமதி உண்டு.


தனி சிவில் சட்டங்களால் அரசாங்கத்திற்கு லாபமா? நஷ்டமா?


தனி சிவில் சட்டங்களால் அரசுக்கு முழுமையான லாபம்தான்.


எப்படியென்றால் விவாரகரத்து விசயத்தில் அனைத்து சமுதாய மக்களும் நீதிமன்ற வாசலில் வரிசையில் நிற்கும் போது இஸ்லாமிய சமூகம் மட்டும் இந்தப் பிரச்சினைகளை தங்களுக்குள்ளேயே பேசி தீர்த்துக் கொள்வதால் அந்த நீண்ட வரிசை காத்திருப்போர் பட்டியலில் இஸ்லாமியர்கள் யாரும் சென்று நிற்பதில்லை.


அதுபோல சொத்துத் தகறாறுகள் வரும் போது இஸ்லாமிய ஜமாஅத்துகள் தங்களுக்குள் பேசி தீர்த்துக் கொள்கின்றார்கள்.. கோர்ட்டுகளில் உள்ள நீண்ட வரிசைகளில் இஸ்லாமியர்கள் நிற்காமல் தங்களது வழக்குகளை விரைந்து முடித்துக் கொள்கின்றார்கள்.


அரசின் நோக்கம் என்ன?


மத்தியில் ஆளக்கூடிய பாரதிய ஜனதா அரசு இஸ்லாமியர்களைப் பழிவாங்க வேண்டும் என்ற ஒரே நோக்கம் தவிர வேறு எந்த நோக்கமும் இல்லை. இஸ்லாமிய சமூகத்தில் லட்சக்கணக்கான விவாகரத்துகள் சுமூகமாக நடந்திருந்தும் இந்த அராஜக அரசால் ஷாபானு வழக்கை மட்டும்தான் காட்ட முடிகின்றது. அப்படியே காட்டினாலும் இது அவர்களுக்கு தேவையில்லாதது. ஆடு நனைகின்றதே என ஓநாய் அழுத கதையாக, இஸ்லாமிய சமூகத்தை கருவறுக்கத் துடிக்கும் பாஜக அரசுக்கு இஸ்லாமிய பெண்கள் மீது என்ன கரிசனம்?


இந்த நாட்டின் பிரதமர் மோடி குஜராத்தின் முதல்வராக இருந்த போது நடத்தப்பட்ட கலவரத்தில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர், தீவைத்து எரிக்கப்பட்டனர். அதில் ஆயிரக்கணக்கானவர்கள் பெண்கள். அப்போது இஸ்லாமிய பெண்களின் நலன் குறித்து அக்கறை கொள்ளாதவர்களுக்கு இப்போது என்ன அக்கறை வந்து விட்டது?


இதில் துவேசம் மட்டும்தான் மிஞ்சியிருக்கிறது. 


இஸ்லாமியர்கள் சிவில் சட்டத்தின் மீது கைவைக்கத் துணிந்துள்ள அரசுக்கு  சீக்கியர்களின் தனிசிவில் சட்டத்தின் மீது கைவைக்க இயலுமா? சீக்கியர்கள் கொந்தளித்து விடுவார்கள் ஊருக்கு இளைத்தவன் முஸ்லிம்கள் என இவர்களாக நினைத்துக் கொண்டு தொடர்ச்சியாக முஸ்லிம்களின் ஷரீஆ சட்டங்களில் கை வைக்கும் வேலையை இந்த அரசு  செய்து கொண்டிருக்கின்றது.


கொட்டக் கொட்ட தேனி குழவியாகி விடும் என்பதைப் போல முஸ்லிம்களிடமே மோதி மோதி முஸ்லிம்களை மேலும் மார்க்கப் பற்றாளர்களாக கொள்கையில் உறுதியாய் நிற்கக் கூடியவர்களாக மாற்றும் வேலையை அரசு செய்து கொண்டிருக்கிறது என்பதைத்தான்  சொல்ல வேண்டியிருக்கிறது.


இவர்களால் பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வரவே இயலாது. அப்படியே மீறி கொண்டு வந்தாலும் அது பெயரளவிற்குத்தான் இருக்குமே தவிர அதன் மூலம் இஸ்லாமிய சமூகத்திற்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது


اَلَّذِيْنَ قَالَ لَهُمُ النَّاسُ اِنَّ النَّاسَ قَدْ جَمَعُوْا لَـكُمْ فَاخْشَوْهُمْ فَزَادَهُمْ اِيْمَانًا   وَّقَالُوْا حَسْبُنَا اللّٰهُ وَنِعْمَ الْوَكِيْلُ‏


அவர்கள் எத்தகையோரென்றால்,(ஒருசில) மனிதர்கள் அவர்களிடம் (வந்து) உங்களுக்கு விரோதமாக நிச்சயமாக மனிதர்கள் ஒன்று சேர்ந்திருக்கின்றனர்; ஆதலால், அவர்களுக்குப் பயந்து கொள்ளுங்கள்" என்று கூறினர். அப்போது இ(க்)கூற்றானது அவர்களுக்கு(ப் பயம் ஏற்படுத்துவதற்கு பதிலாக) விசுவாசத்தை (-ஈமானை) அதிகப்படுத்தியது. மேலும், "அல்லாஹ்வே எங்களுக்குப் போதுமானவன், பாதுகாவலரில் அவன் மிக்க நல்லவன்” என்றும் அவர்கள் கூறினார்கள்.

(அல்குர்ஆன் : 3:173)

***

Admin
453 0

Leave a comment

Share

Share on Facebook

Article

Video

Newsletter

We are committed to helping you increase your taqwa. Our content is designed to inspire and motivate you to live a life that is pleasing to Allah (SWT). From practical tips to spiritual reflections, we aim to support your journey of faith.

Get In Touch

Pudupettai, Chennai

+91 98408 28225

info@ahlulislam.net

Follow Us
கேள்வி & பதில்

© ahlulislam.net. All Rights Reserved. Design by zeentech solutions