சத்திய இஸ்லாத்துக்காக சேவை ஆற்றிய மகத்தான இமாம்களில் குறிப்பிடத்தக்கவர் இமாம் அபூஹனீஃபா(ரஹ்) அவர்கள். அன்னாரின் இயற்பெயர் அந்நுஃமான் பின் சாபித் என்பதாகும். ஈராக்கில் உள்ள பிரபலமான கூஃபா நகரத்தில் ஹிஜ்ரீ 80ம் ஆண்டு பிறந்தார்கள்.
இமாம் அவர்கள் தமது சிறுவயதில் அனஸ் பின் மாலிக்(ரலி) அவர்கள் உள்ளிட்ட ஒரு சில நபித்தோழர்களை சந்தித்துள்ளார்கள் என்று கூறப்படுகிறது. அன்னார்தான் நான்கு பெரும் இமாம்களில் மூத்தவர்.
இமாம் அவர்கள் தமது இளவயதில் இஸ்லாமிய கல்விகளில் மார்க்க நம்பிக்கை தொடர்பான கல்வியை கற்பதில் ஈடுபட்டார்கள். பின்னர் மார்க்க சட்டம் தொடர்பான (ஃபிக்ஹ்)கல்வியில் ஈடுபாடு ஏற்பட்டு அக்காலத்தில் சிறந்த மார்க்க சட்ட அறிஞராக இருந்த ஹம்மாத் பின் அபீ சுலைமான் அவர்களிடம் மாணவராக சேர்ந்து கல்வி கற்றார்.
ஹம்மாத் பின் அபீ சுலைமான் அவர்களிடம் இமாம் அவர்கள் ஏறத்தாழ இருபது ஆண்டுகள் கல்வி பயின்று உள்ளார்கள். இடையில் பிற மார்க்க சட்ட அறிஞர்களிடமும், ஹதீஸ்கலை அறிஞர்களிடமும் சென்று மார்க்க கல்வியை கற்று வருவார்கள்.அவர்கள் காலத்தில் வாழ்ந்த தாபியீன்களைச் தேடிச் சென்று சந்தித்து கல்வி பெற்றுள்ளார்கள்.
கேள்வி: நபி(ஸல்) அவர்கள் காலத்தில் கொள்ளை நோய் வந்த போது, இருப்பவர்கள் தங்கள் இடங்களில் இருந்து கொள்ளுங்கள். வெளியே இருப்பவர்கள் நோய் உள்ள இடங்களுக்கு செல்ல வேண்டாம் என்றுதான் சொன்னார்கள். ஆனால் அந்த நேரத்தில் தொழுகைகளில் மாற்றம் செய்யவில்லை. தற்போது கொரானா காலத்தில் தொழுகைகளில் முகமூடி அணிந்து, சொல்கின்ற இடைவெளியில் வரிசையில் நின்று தொழுங்கள் என்ற நடைமுறை ஒத்துக்கொள்ளத் தக்கதா? ஷைத்தான் இடைவெளியில் புகுந்துவிடுவானே? விளக்கம் தரவும்!
அ.காஜா நஜிமுத்தீன்,
8வது தெரு, ஏர்வாடி, நெல்லை
Read More →கேள்வி: அல்குர்ஆனின் 3:26, 27 வசனத்தில், நீர் சொர்க்கத்தில் நுழைவீராக!
என்று அவருக்கு கூறப்பட்டது” என்று உள்ளது.
மறுமை நாளில் மக்களை எழுப்பி
விசாரணை செய்யப்பட்ட பின்னர்தானே சொர்க்கம், நரகம் செல்வது நடைபெறும்!
அவ்வாறிருக்க இந்த வசனத்தில் ஏன் இவ்வாறு கூறப்படுகிறது?
அ.காஜா நஜிமுத்தீன்,
8வது தெரு, ஏர்வாடி, நெல்லை.
Read More →ஹதீஸ் எப்படி புரிவது?
ஹதீஸ் - 4
தொழுகையை முறிக்கும் மூன்று
அப்துல்லாஹ் பின் அஸ்ஸாமித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூதர் அல்கிஃபாரீ (ரலி) அவர்கள், உங்களில் ஒருவர் (திறந்தவெளியில்) தொழ நிற்கும் போது தமக்கு முன்னால் வாகன (ஒட்டக)த்தின் (சேணத்திலுள்ள) சாய்வுக்கட்டை போன்றது இருந்தால் அதுவே அவருக்குத் தடுப்பாக அமைந்துவிடும். சாய்வுக்கட்டை போன்றது இல்லாவிட்டால் கழுதை, பெண் மற்றும் கறுப்புநாய் ஆகியன அவரது தொழுகையை முறித்துவிடும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்றார்கள். உடனே நான், அபூதர் (ரலி) அவர்களே! சிவப்பு நிற நாய், மஞ்சள் நிற நாய் ஆகியவற்றை விட்டுவிட்டுக் கறுப்பு நிற நாயை மட்டுமே குறிப்பிடக் காரணம் என்ன? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், என் சகோதரரின் புதல்வரே! நீங்கள் என்னிடம் கேட்டதைப் போன்றே நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் கறுப்பு நாய் ஷைத்தான் ஆகும் என்று கூறினார்கள் என்றார்கள்.
(முஸ்லிம் 882)
இந்த ஹதீஸின் கருத்தை கீழ்காணும் ஹதீசும் கூறுகிறது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(தடுப்பு இல்லாமல் தொழுகின்றவரின்) தொழுகையைப் பெண் (முறித்துவிடுவாள். மேலும்), கழுதை, நாய் ஆகியவை(யும்) முறித்துவிடும். வாகன (ஒட்டக)த்தின் (சேணத்திலுள்ள) சாய்வுக்கட்டை போன்றது அதிலிருந்து பாதுகாத்துவிடும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம் 883)
Read More →கேம் விபரீதங்கள்
அறிவியல் முன்னேற்றத்தினால் நமக்கு கிடைத்திருக்கும் சாதனங்களால் அதிகமான பலன்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். இதற்காக நாம் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்த வேண்டும்.
அதே நேரத்தில் இவற்றை முறையில்லாமல் பயன்படுத்துவதால் பலரும் தங்களின் இம்மை மறுமை வாழ்வுக்கு கெடுதலை ஏற்படுத்திக் கொள்ளும் நிலையில் இருக்கிறார்கள். அல்லாஹ் காப்பாற்ற வேண்டும்.
நல்லவர்கள்தான். ஆனாலும் தவறு செய்கிறார்கள். தாம் செய்யும் தவறையும் உணர்வதில்லை. இவ்வாறான தவறுகள் குறித்து இந்தத் தொடரில் பார்த்து வருகிறோம்.
இம்மாதத் தொடரில் சில நல்லவர்கள் தமது பிள்ளைகளுக்காக நேரம் ஒதுக்காமலிருக்கும் தவறு குறித்து பார்ப்போம்.
அல்லாஹ் குர்ஆனில்,
முஃமின்களே! உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்; அதன் எரிபொருள் மனிதர்களும், கல்லுமேயாகும்; அதில் கடுமையான பலசாலிகளான மலக்குகள் (காவல்) இருக்கின்றனர்; அல்லாஹ் அவர்களை ஏவிய எதிலும் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள்; தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்து வருவார்கள். (அல்குர்ஆன் 66:6) என்று கூறுகிறான்.
நல்லவர்கள்தான்! ஆனாலும் குறிப்பிடத்தக்க தவறைச் செய்து கொண்டிருக்கிறார்கள். தாம் செய்யும் தவறை தவறென்று உணர்வதில்லை. இப்படியான தவறுகள் குறித்து இந்தத் தொடரில் பார்த்து வருகிறோம். இந்த மாத தொடரில் நம்மில் பலர் மார்க்கச் சட்ட விஷயத்தில் செய்யும் ஒரு தவறைக் குறித்து பார்ப்போம் இன் ஷா அல்லாஹ்.