பிக்ஹுன் னவாஸில்= பிரச்சினையான சந்தர்ப்பத்தில் மார்க்கச் சட்டம்

சட்டங்கள் | by S.H.M. இஸ்மாயில் ஸலபி On Jul 08, 2023 Viewers: 291


பிக்ஹுன் னவாஸில்= பிரச்சினையான சந்தர்ப்பத்தில் மார்க்கச் சட்டம்

பிக்ஹுன் னவாஸில்= பிரச்சினையான சந்தர்ப்பத்தில் மார்க்கச் சட்டம்

-S.H.M. இஸ்மாயில் ஸலபி 

--------------------------------------------


மார்க்கச் சட்டங்களை இயற்றும் போது சில வேளை சந்தர்ப்ப சூழ்நிலைகளைக் கருத்திற் கொண்டு சில முடிவுகள் செய்யப்படலாம். அந்த முடிவுகள் வேறு சூழல்களுக்குப் பொருந்தாமல் கூட இருக்கலாம். இது போன்ற சந்தர்ப்பங்களில் ஃபத்வா கொடுத்தவர் பற்றி எப்படி நடுநிலையாகப் புரிந்து கொள்வது என்ற விளக்கம் அவசியமாகும்.


உதாரணமாக, முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் ஒரு நாட்டில் இனக் கலவர சூழல் இருக்கின்றது என்று வைத்துக் கொள்ளுங்கள். இனவாதிகளால் முஸ்லிம்களின் பொருளாதார மையங்கள் அழிக்கப்படலாம் என்ற ஆபத்தான நிலை உள்ளது. அரச படையினரும் இனவாதிகளுக்குத் துணை நிற்பார்கள். முஸ்லிம்களின் உடைமைகளைப் பாதுகாக்க மாட்டார்கள் என்ற சூழ்நிலை நிலவுகின்றது.


இந்த சந்தர்ப்பத்தில் ஒரு மார்க்க அறிஞர் முஸ்லிம்கள் தமது உடமைகளைக் காப்புறுதி (இன்ஷூரன்ஸ்) செய்து கொள்ளுங்கள் என்று கூறுகின்றார். அப்படி காப்புறுதி செய்தால் முஸ்லிம்களது சொத்துக்கள் அழிக்கப்பட்டால் அதற்கான நஷ்ட ஈட்டை காப்புறுதி நிறுவனங்கள் வழங்க நேரிடும். எனவே, காப்புறுதி நிறுவனங்கள் முஸ்லிம்களது சொத்துக்களைப் பாதுகாக்கும் அழுத்தத்தை அரசுக்கு வழங்கும். இதன் மூலம் முஸ்லிம்கள் எதிரிகளது சூழ்ச்சியை முறியடித்து தமது பொருளாதாரத்தைக் காத்துக் கொள்ளலாம் என்பது இந்த மார்க்க அறிஞரின் எதிர்பார்ப்பு!


இது ஒரு சந்தர்ப்ப சூழ்நிலைக்காக கொடுக்கப்பட்ட ஃபத்வா. இதைச் சாட்டாக வைத்து சாதாரண நிலையிலும் காப்புறுதி செய்யலாம் என்று யாரும் சொல்ல முடியாது.


மேற்குறித்த பத்வாவில் சிலருக்கு உடன்பாடு இருக்கலாம். சிலருக்கு மாற்றுக் கருத்தும் இருக்கலாம். மாற்றுக் கருத்து உடையவர் தனது நிலையையும் மக்கள் மத்தியில் வைக்கலாம். காப்புறுதி செய்வது கூடாது என்றும், அதில் உறுதியாக இருக்க வேண்டும் என்றும் காப்புறுதி செய்வது வட்டியின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்றும் கூட பிரச்சாரம் செய்யலாம். ஆனால், காப்புறுதி செய்வதை இந்த சூழலில் சரிகண்ட அறிஞரை வட்டிக்கு வக்காலத்து வாங்குகின்றார், வட்டிக் கம்பெனிகளுக்கு இலவச விளம்பரம் செய்கின்றார். அல்லாஹ் ஹராமாக்கிய வட்டியை ஹலாலாக்கிவிட்டார், அல்லாஹ்வுடன் போர் செய்யத் துணிந்துவிட்டார், மார்க்கத்தை மாற்றிவிட்டார் என்ற கோணத்தில் நின்று விமர்சிக்கும் விதத்தில் நடந்து கொள்ளக் கூடாது. இது போன்ற ஒரு மனநிலைதான் இன்றைய தஃவாக் களத்தில் இருந்து வருகின்றது.


இந்த சூழலைப் புரிந்து கொள்வதற்காக உஸ்மான்(வ) அவர்கள் எடுத்த ஒரு முடிவு குறித்து விளக்கலாம் என நினைக்கின்றேன்.


ஜும்ஆவுக்கு இரண்டு அதான்:


நபி(ச) அவர்களது காலத்தில் ஜும்ஆவுக்கு ஒரு அதான்தான் சொல்லப்பட்டு வந்தது. இமாம் மிம்பரில் ஏறிய பின்னர் இந்த அதான் சொல்லப்படும். இமாம் மிம்பருக்கு ஏறும் முன்னர் கூறப்படும் அதான், நபியவர்கள் காலத்திலோ அபூபக்கர், உமர்(வ) அவர்களின் காலத்திலோ நடைமுறையில் இருக்கவில்லை. உஸ்மான்(வ) அவர்கள் தனது ஆட்சியின் மத்திம காலத்தில்தான் இமாம் மிம்பருக்கு ஏறுவதற்கு முன்னர் சந்தையில் ஒரு அதான் சொல்லும் வழக்கத்தை ஏற்படுத்தினார்கள்.


மக்கள் அதிகரித்துவிட்டார்கள். அவர்கள் ஜும்ஆவுக்கு தாமதமாகி வருவதைத் தவிர்ப்பதற்காக முன்கூட்டியே ஜும்ஆ நேரம் தொடங்கிவிட்டதை நினைவூட்டி அச்சந்தையில் இருந்து மக்களை அனுப்புவதற்காக இந்த அதான் கூறப்பட்டது.


நபி(ச) அவர்களது காலத்தில் இருந்த ஒரு அதான் என்ற நடைமுறையே சரியானது என்பதால் நாமும் இன்று ஜும்ஆவுக்கு ஒரு அதான் மட்டுமே கூறி வருகின்றோம். இருப்பினும் இரண்டு அதான் எந்த ஆதாரமும் இல்லாத பித்அத்தாக நாம் பார்க்கவில்லை. உஸ்மான்(வ) அவர்கள் செய்த ஒரு இஜ்திஹாதாக மட்டுமே பார்க்கின்றோம். இதைப் புரிந்து கொள்வதற்காக உஸ்மான்(வ) அவர்களது தரப்பு நியாயத்தை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.


அழைப்பாக மட்டுமன்றி அறிவிப்பாகவும் அமைந்த அதான்:


அதான் என்பது தொழுகைக்கான அழைப்புதான். எனினும் பள்ளியை நோக்கி அழைக்கும் அழைப்பாக மட்டும் இல்லாமல் நேரத்தை அறிவிக்கும் அறிவிப்பாகவும் நபி(ச) அவர்கள் அதானைப் பயன்படுத்தியுள்ளார்கள்.


நோன்பு காலத்தில் மக்களில் சிலர் ஸஹருடைய நேரத்தில் உறங்கிக் கொண்டிருப்பார்கள். மற்றும் சிலர் வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருப்பார்கள். இச்சந்தர்ப்பத்தில் நபி(ச) அவர்கள் சுபஹுக்கு முன்னர் மற்றுமொரு அதானை அறிமுகப்படுத்தினார்கள். அதிலும் தொழுகைக்கான அழைப்பு இருக்கும். ஆனால், அதன் நோக்கம் தொழுகைக்காக மக்களை அழைப்பது அல்ல. உறங்கும் மக்களை விழிப்பூட்டுவதும், இபாதத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு ஸஹருடைய நேரம் நெருங்கிவிட்டதை உணர்த்துவதும் இந்த அதானின் நோக்கமாகும்.


இந்த சுன்னாவை அடிப்படையாகக் கொண்டு வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் மக்களுக்கு ஜும்ஆ நேரம் நெருங்கிவிட்டதை உணர்த்துவதற்காக உஸ்மான்(வ) உருவாக்கியது அவரது சுய இஜ்திஹாதாகும். உணவுக்காக மக்களை வீட்டுக்கு அனுப்புவதை விட, ஸஹருடைய நேரம் நெருங்கிவிட்டதை உணர்த்துவதை விட ஜும்ஆவுக்காக மக்களைப் பள்ளிக்கு அனுப்புவதை முக்கியமானதாக அவர் கண்டிருக்கலாம்.


ஒருவர் உஸ்மான்(வ) அவர்களது இந்த இஜ்திஹாதை ஏற்காதவராக இருக்கலாம். ஆனால், உஸ்மான்(வ) அவர்கள் பித்அத்தான அதானை உருவாக்கிவிட்டார் என்று கூறக் கூடாது. உஸ்மான்(வ) அவர்களது இஜ்திஹாதை ஏற்று நடைமுறைப்படுத்துபவர்களை எவ்வித ஆதாரமுமற்ற பித்அத்தை செய்யும் பித்அத்வாதியாகவும் பார்க்கக் கூடாது.


சூழ்நிலைகளுக்கு ஏற்ப சில முடிவுகளை எடுப்பதற்கு இந்த மார்க்கம் அனுமதியளித்துள்ளது என்ற அடிப்படையை நபித்தோழர்கள் புரிந்து வைத்திருந்ததினால்தான் உஸ்மான்(வ) அவர்கள் புதிய பித்அத் ஒன்றை ஏற்படுத்திவிட்டார்கள் என நபித்தோழர்கள் அவரைக் கண்டிக்கவில்லை. இன்று சிலர் நபித்தோழர்களை விட தாம் சுன்னாவைப் புரிந்து கொண்டதைப் போன்றும் அவர்களை விட அதிகமாக பித்அத்தை வெறுப்பது போலவும் ‘சீன்’ காட்டுவதுதான் பொறுக்க முடியாதுள்ளது.


சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப ஃபத்வாக்கள் மாறுபடுவது போன்றே மக்களதும், தனி மனிதர்களினதும் நிலைமைகளுக்கு ஏற்பவும் ஃபத்வாக்கள் மாறுபடலாம். ஆனால், அது பொதுச்சட்டமாகாது. கொலை செய்யும் எண்ணத்துடன், கொலைகாரனுக்கு மன்னிப்பு உண்டா? எனக் கேட்பவருக்கு மன்னிப்பு உண்டு எனப் பதிலளிப்பது அவனை கொலை செய்யத் தூண்டும் என்பதாக நாம் கருதினால், இல்லை என பதில் சொல்லலாம். அது அந்த நபருக்கும் சூழ்நிலைக்கும் ஏற்றதாக இருக்கும். ஆனால், பொதுச்சட்டமாகாது.


இவ்வாறே சில அறிஞர்களிடம் நோன்பாளி முத்தமிடலாமா? எனக் கேட்ட போது முடியாது என இளைஞனுக்குப் பதிலளித்தவர்கள். இதே கேள்வியை முதியவர் கேட்கும் போது முடியும் எனப் பதிலளித்துள்ளனர். இப்படித்தான் பதிலளிக்க வேண்டும் என சட்டம் கூறவில்லை. கேள்வி கேட்பவரின் நிலையைக் கவனத்திற் கொண்டு அவருக்கு நன்மையை நாடி அளிக்கப்படும் பதில்கள் இவைகள். இவை பொது விதியாகவும் மாட்டாது. இப்படிப் பதில் சொன்னவர் குர்ஆன், சுன்னாவுக்கு முரண்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் செயற்பட்டவராகவும் மாட்டார். இருப்பினும் எது உண்மையோ அதைத் தெளிவுபடுத்துவதையே நாம் சரியானதாகவும், முறையான வழிமுறையாகவும் கருதுகின்றோம். இப்படிப் பதில் சொன்னால் அவரை விமர்சிக்கும் போக்கு பிழையானது என்பதை புரிய வைப்பதற்காக மட்டுமே இதை இங்கே குறிப்பிடுகின்றோம் என்பதைக் கவனத்திற் கொள்ளவும்.

***

தேடல்
தொடர்புடைய பதிவுகள்
001 AlFathiha அத்தஹியாத் இருப்பில் விரலசைத்தல்! அன்பளிப்பு - உள்ளங்களை வெல்வோம்! – தொடர் 2 அரஃபா நோன்பு எந்த நாளில் பிடிக்க வேண்டும்? அரஃபா பேருரை! அரபியில்தான் குத்பாவா? அலைபேசி ஒழுக்கங்கள் அழிக்கப்பட்ட யானைப்படை!.. [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-2] அழைப்பு கடிதம் (இந்துவுக்கு) அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாஅத் வழிமுறையை பின்பற்றுவோம் ஆட்சி மாற்றம்! அஞ்சத் தேவையில்லை! ஆண் குழந்தைகளுக்கு தங்கம் அணிவித்தல் ஆபாசத்தை தவிர்ந்து கொள்வது எப்படி...? இந்துக்களின் தாய்மதம் இப்ராஹீம் நபியும் காளைக் கன்றும்... இப்ராஹீம் நபியும் உயிர்த்தெழுதந்த பறவைகளும்... இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்) இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) மகத்தான வழிகாட்டிகள் - 5 இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) - 2 மகத்தான வழிகாட்டிகள் - 6 இமாம் மாலிக்(ரஹ்)_மகத்தான வழிகாட்டிகள்-2 இமாம் ஷாபிஈ (ரஹ்) இறுதி வரை ஏகத்துவம் இஸ்ரவேலரும் காளை மாடும்... இஸ்லாம் அழைக்கிறது! இறைவன் இருக்கிறானா ?அவன் ஒருவனா? பலரா? உணர்வுக்கு செவி கொடுங்கள் – உள்ளங்களை வெல்வோம்! – தொடர் 3 உள்ளங்களை வெல்வோம் – 5 உள்ளங்களை வெல்வோம்! – தொடர் 1 உஸைர் நபியும் உயிர் பெற்ற‌ கழுதையும்... உஸ்மான் (ரழி) கொலையும், கொள்கைக் குழப்பவாதிகளின் நிலையும்! என்னருமை தலித் சகோதரரே! எல்லை மீறுபவர்கள் அழிக்கப்படுவர்... ஒரு நடிகையின் வாக்குமூலம்! கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-1 கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-2 கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-3 கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-4 கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-5 கருப்பு பணத்தை ஒழிக்க ஒரே வழி! கரை ஒதுங்கிய மீன்களும்… குரங்குகளாக மாற்றப்பட்ட மீனவர்களும்… கர்ப்பமுற்றிருக்கும் பெண்ணும், பாலூட்டும் பெண்ணும் ரமலானில் நோன்பு நோற்க முடியாவிட்டால் அவர்கள் என்ன செய்ய வேண்டும்? காதல் - ஓர் இஸ்லாமிய பார்வை part -2 காதல் - ஓர் இஸ்லாமிய பார்வை part-1 காலையா மாலையா? கிறிஸ்துவ சகோதரர்களுக்கு ஒரு கடிதம் கிலாஃபத் - இஸ்லாமிய ஆட்சி குகை தோழர்களின் கதை குணத்தை மாற்ற முடியுமா? குற்றம் செய்வோரை வெறுத்து ஒதுக்குவோம் குற்றவாளிக் கூண்டில் முஸ்லிம்கள் - தொடர்- 1 ! குற்றவாளிக் கூண்டில் முஸ்லிம்கள் – 3 குற்றவாளிக் கூண்டில் முஸ்லிம்கள் – தொடர்- 2 ! கேம் விபரீதங்கள் கேள்வி: அல்குர்ஆனின் 3:26, 27 வசனத்தில், நீர் சொர்க்கத்தில் நுழைவீராக! என்று அவருக்கு கூறப்பட்டது” என்று உள்ளது.? கேள்வி: கிளி உள்ளிட்ட பறவைகளை கூண்டில் அடைத்து வைத்து வளர்ப்பது ஆகுமானதா? அஸாருத்தீன், வில்லிவாக்கம், சென்னை. கேள்வி: நபி(ஸல்) அவர்கள் காலத்தில் கொள்ளை நோய் வந்த போது, இருப்பவர்கள் தங்கள் இடங்களில் இருந்து கொள்ளுங்கள். வெளியே இருப்பவர்கள் நோய் உள்ள இடங்களுக்கு செல்ல வேண்டாம் என்றுதான் சொன்னார்கள். ஆனால் அந்த நேரத்தில் தொழுகைகளில் மாற்றம் செய்யவில்லை. தற்போது கொரானா காலத்தில் தொழுகைகளில் முகமூடி அணிந்து, சொல்கின்ற இடைவெளியில் வரிசையில் நின்று தொழுங்கள் என்ற நடைமுறை ஒத்துக்கொள்ளத் தக்கதா? ஷைத்தான் இடைவெளியில் புகுந்துவிடுவானே? விளக்கம் தரவும்! கொடிய மிருகங்களாக மாறிவிட்ட மதவெறியர்கள்! சத்திய சனாதன தர்மத்தை பின்பற்றுவீர்! சலஃப், சலஃபி சரியான புரிதல். தொடர்- 2 சலப், சலபி – சரியான புரிதல்! சுலைமான் நபியும்... ஹுத்ஹுத் பறவையும்... சூனியத்தை விழுங்கிய அதிசயப் பாம்பு! சொர்கத்தில் துணைகள் ஜிஹாத் - ஒரு விளக்கம் ஜிஹாத் - ஒரு விளக்கம் [ பாகம்-2 ] தக்லீதின் எதார்த்தங்கள் தற்கொலை தீர்வாகுமா? தாய் மதம் திரும்பினார் யுவன் ஷங்கர் ராஜா திருக்குர்ஆன் கூறும் (உண்மைக்) கதைகள் - 01 திருநங்கைகளும் சமூகத்தின் கடமைகளும் துல்ஹஜ் மாதம் பிறை 11,12,13. உழ்ஹிய்யா கொடுக்கலாமா? தேவனுக்கு குமாரனா? தொழுகை உடைய "ரூக்ன்" என்று சொல்லப்படும் ஃபர்ள்களிலிருந்து ஏதேனும் ஒன்று விட்டு விட்டால் அதை எவ்வாறு சரி செய்வது? தொழுகை முடித்து திரும்புதல் பற்றிய ஹதீஸ் தோன்றின் எடுப்போடு தோன்றுக! – உள்ளங்களை வெல்வோம்! – தொடர் 4 நபி சுலைமான் தான் ஸ்ரீ ராமர்…?! நபியவர்கள் தங்க மோதிரம் அணிந்ததாக கூறப்படும் ஹதீஸ், ஹதீஸ் எப்படி புரிவது ? -8 நம்மை விட்டு பிரிந்தவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய நல்லறங்கள் நற்குணமும் நபியும் வழிகாட்டும் வாழ்வியல்- தொடர் 03 நல்ல மாற்றத்தில் ஏற்பட்ட தீய மாற்றம் நல்லோரும் செய்யும் தவறுகள் - 1 (வீட்டோடு மாப்பிள்ளை) நல்லோரும் செய்யும் தவறுகள் - 3 (மார்க்கத்தின் பெயரால் சச்சரவு) நல்லோரும் செய்யும் தவறுகள் - 4(பிள்ளைகளுக்கு நேரம் ஒதுக்காத பெற்றோர்) நல்லோரும் செய்யும் தவறுகள் - 6 (மனைவியரிடம் கடுமை காட்டும் கணவர்கள்) நல்லோரும் செய்யும் தவறுகள் - 7 (மனைவியரிடம் கடுமை காட்டும் கணவர்கள் - 2) நல்லோரும் செய்யும் தவறுகள் -2 பெண்களின் ஆடை - கவனம் தேவை நல்லோரும் செய்யும் தவறுகள்-5 ( பெண்ணுக்கு சொத்தில் பங்கில்லையா?) நெருக்கம் இறுதிவரை தொடரட்டும்..... பரக்கத்தை இழந்த ரஹ்மத்...! பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் மீது குற்றம்சாட்டும் தில்லி கலவரம் தொடர்பான புத்தகம் வாபஸ்! பிக்ஹுன் னவாஸில்= பிரச்சினையான சந்தர்ப்பத்தில் மார்க்கச் சட்டம் புரிய சிரமமான வசனங்கள்-1 புரிய சிரமமான வசனங்கள்-2 புரிய சிரமமான வசனங்கள்-3 புறக்கணிக்கப்படும் நபியின் வழிமுறைகள் - தாடியை வளர்ப்பதும் மீசையைக் கத்தரித்தலும்! பேசிய எறும்பு... பொது சிவில் சட்டம் எனும் பூச்சாண்டி! மனிதநேயத்தை வென்ற மிருகநேயம்! மறுமையில் ஓர் உரையாடல்... மஸ்ஜிதின் ஒழுக்கங்கள் மார்க்கப்பணிக்கு ஊதியம் பெறலாமா? மீலாதும் மவ்லிதும் முஸ்லிம் எல்லாரும் ஜிஹாதி தான் முஹம்மதிய சமுதாயத்தின் காரூன்கள் முஹம்மது (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) கட்டிடத்தின் கடைசிக் கல் முஹர்ரம் மாதமும் ஆஷூரா நோன்பும் மூசா நபியும்... அதிசயப் பாம்பும்‌... மூஸா நபியும் ஹிள்ர் நபியும்! யார் இந்த அல்லாமா ஷேய்க் முஹம்மது நாஸிருத்தீன் அல்பானி(ரஹ்) யூனுஸ் நபியை விழுங்கிய பிரம்மாண்ட மீன்... ரமலானும் ஈமானும்! ரமளானின் கடைசி பத்து நாட்கள் ரமளானை பயனுள்ளதாக்குவோம் லவ் ஓம்’ ஐ மறைக்கவே லவ் ஜிஹாத் பூச்சாண்டி! வரலாற்றை திரிக்கும் வகுப்புவாதிகள் வழிகாட்டும் வாழ்வியல் - தொடர் 02 வழிகாட்டும் வாழ்வியல் - தொடர்:01 ஷேய்க்.முஹம்மது இப்னு ஸாலிஹ் அல் உஸைமின்(ரஹ்) வாழ்க்கை வரலாறு ஷைத்தான்கள் பரவுதல் பற்றிய ஹதீஸ், ஹதீஸ் எப்படி புரிவது? - 7 ஸகாத்துல் (ஸதகத்துல்) பித்ர் பற்றி விளக்கம்? ஸாமிரியும்… காளை மாட்டுச் சிலையும்… ஸாலிஹ் நபியும் அதிசய ஒட்டகமும் [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-4] ஹஜ் உம்ரா தொடர்பான சந்தேகங்கள்! ஹதீஸ் எப்படி புரிவது-3 ஹதீஸ் எப்படி புரிவது? ஹதீஸ் - 6 ஹதீஸ் எப்படி புரிவது? ஹதீஸ் - 5 ஹதீஸ் எப்படி புரிவது?ஹதீஸ் - 4( தொழுகையை முறிக்கும் மூன்று) ஹதீஸ்_எப்படி புரிவது-1 ஹதீஸ்_எப்படி புரிவது-2 TEACHERS TRAINING COURSE