ஆய்வுகள்

January 06, 2020

குற்றவாளிக் கூண்டில் முஸ்லிம்கள் – 3

அந்நிய கலாச்சாரத்தை பின்பற்றுகிறீர்கள் 
முஸ்லிம்கள் மீது முஸ்லிகளை எதிர்ப்பவர்களால் வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கான பதில்களையும் விளக்கங்களையும் இந்தத் தொடரில் பார்த்து வருகிறோம். முந்தைய இரு தொடர்களில், “அந்நிய தேச மதத்தை பின்பற்றுகிறீர்கள்” “அந்நிய தேச மத வழிகாட்டியை பின்பற்றுகிறீர்கள்என்ற இரு குற்றச்சாட்டுகளுக்கான மறுப்பையும் விளக்கத்தையும் பார்த்தோம்

இப்போது நம் மீது வைக்கப்படும்அந்நிய கலாச்சாரத்தை பின்பற்றுகிறீர்கள்என்ற தவறான குற்றச்சாட்டுக்கான மறுப்பையும் விளக்கத்தையும் பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்.

இந்த நாட்டின் கலாச்சாரத்தை நாங்களும் பின்பற்ற வேண்டுமென்று வலியுறுத்தினால் உங்களிடம் ஒரே கலாச்சாரம் இருக்க வேண்டும். நாங்களெல்லாம் இந்துக்கள் என்று உங்களைப் பற்றி சொல்கிறீர்கள். உங்களுக்குள்ளேயே நடைமுறைகளில் வேறுபாடுகள் உள்ளனவே

இந்துக்களில் ஒரு கூட்டம் மரணித்தவரை தீயினால் எரிக்கிறீர்கள். இன்னொரு கூட்டம் புதைக்கிறீர்கள். இந்துப் பெண்களில் ஒரு வகையினர் முக்காடெல்லாம் போடுகிறார்கள். வேறு பலர் போடுவதில்லை. இப்படி உங்களில் ஒவ்வொரு கூட்டத்துக்கும் ஒவ்வொரு பகுதிக்கும் வணங்கப்படும் தெய்வங்களில், நடை உடையில் என பலவிதமான வித்தியாசங்கள் உள்ளன. இப்படியிருக்கையில் எங்களை பார்த்து ஒத்து வரவேண்டும் என்றால் எப்படி சரியாகும்?

உங்களுடய கலாச்சாரங்களில் சிலவற்றை உங்கள் மதத்தவர் விடுவதையே நீங்கள் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லையே. உதாரணத்துக்கு திருமணத்தின் போது தாலி கட்டுவது இந்து மத கலாச்சாரம். மந்திரம் ஓதுவது முக்கிய நடைமுறை. இப்போது நமது கேள்வி, ஒரு இந்து ஆணும் ஒரு இந்து பெண்ணும் பதிவுத் திருமணம் செய்து கொள்கிறார்கள் மந்திரம் ஓதவில்லை, தாலி கட்டவில்லை. குடும்பம் நடத்துகிறார்கள். “இது திருமணமே இல்லை விபச்சாரம்என்றா சொல்கிறீர்கள்? இந்த திருமணம் செல்லுபடியாகும் என்று சட்டம் எழுதி வைத்திருப்பதும், அதன்படி திருமணம் செய்து வைப்பதும் மிகப் பெரும்பாலும் உங்கள் மதத்துக்காரர்கள்தானே. உங்கள் மத நடைமுறையையும் கலாச்சாரத்தையும் அலட்சியம் செய்யும் இவர்களோடு மல்லுக்கட்ட வேண்டியது தானே

இதிலிருந்து என்ன தெரிகிறது? உங்களின் நிலைப்பாட்டின் படியே உங்கள் கலாச்சாரமும் நடைமுறையும் உங்களுக்கே முக்கியமானதில்லை என்று தெரிகிறது

எங்களிடம் எல்லாம் வல்ல இறைவனின் இறுதி வேதம் திரு குர்ஆனும் அவனது இறுதி தூதரின் வழிமுறையும் உள்ளன. இறைவனின் இறுதி வழிகாட்டுதலைத்தான் நாங்களும் நீங்களும் பின்பற்றியாக வேண்டும். இந்த இரண்டிலும் தடுக்கபட்ட, இரண்டுக்கும் முரண்பட்ட எந்த நடைமுறையையும் கலாச்சாரத்தையும் நாங்கள் ஏற்க மாட்டோம். அப்படி நாங்கள் ஏற்றுக் கொண்டால் உங்களில் விவரம் தெரிந்தவர்கள் எங்களை குறை சொல்வீர்கள். இறைவனின் இறுதி வேதம் என்று சொல்லி விட்டு நீங்களே அதற்கு மாறு செய்கிறீர்களே என்று கேட்பீர்கள்.


இறுதி வேதம், இறுதிதூதரின் வழிமுறை ஆகியவற்றைப் பின்பற்றுவதால் எங்களிடம் சிறந்த நடமுறையும் கலாச்சாரமும் உண்டு. அவற்றை நீங்களும் பின்பற்ற வேண்டும்

உதாரணத்துக்கு சிறுநீர் கழித்த பின் தண்ணீரால் சுத்தம் செய்ய வேண்டுமென்று திருகுர்ஆனும் நபிவழியும் வழிகாட்டுகிறது. அதுவும் கழிவு என்பதால் அசுத்தமாகும். உடலிலும் உடையிலும் அசுத்தம் படுவது சரியல்ல. இதை நீங்களும் பின்பற்றினால் பேருந்து நிலயங்களிலும் பொது இடங்கள் பலவற்றிலும் இப்போது வீசும் துர்நாற்றம் இருக்காது.

இன்னொரு உதாரணம், பொது இடத்தில் ஆண்கள், பெண்கள் கலந்திருக்கும் நிலையில் அசிங்கமான, ஆபாசமான விஷயங்களை சொல்லி பாடுவது ஆபாசமான அங்க அசைவுகளுடன் கரகாட்டம் என்பது போன்ற பெயர்களில் ஆட்டம் போடுவது எல்லாம் கேவலம். உங்களிலும் நல்லோர் விரும்பாத இந்த காரியங்களெல்லாம் உங்களிடம் நாகரீகமாகவும் கலாச்சாரமாகவும் உள்ளது. இதுபோன்ற கேவல கலாச்சாரத்தை எதிர்க்கும் எங்கள் நிலைக்குத்தானே நீங்களும் வரவேண்டும்

நாங்கள் தவறான கலாச்சாரங்களை புறக்கணிப்பதறகுக் காரணமாக கடவுளின் இறுதி வேதமான திரு குர்ஆனின் வசனங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று: என் இறைவன் (பாவமென) தடுத்திருப்பதெல்லாம் வெளிப்படையான அல்லது மறைமுகமான ஆபாசச்செயல்கள், பாவங்கள், நியாயமின்றி அத்துமீறுதல், ஆதாரமில்லாதிருக்க இறைவனுக்கு நீங்கள் இணைகற்பித்தல்,நீங்கள் அறியாதவற்றையெல்லாம் இறைவன் மீது (பொய்யாக) கூறுதல் ஆகியவற்றைத்தான் என்று கூறுவீராக(திருகுர்ஆன் 7: 33) 

இறைவனின் இந்த வழிகாட்டுதல் உங்களுக்கும் சேர்த்துதான் சொல்லப்படுகிறது

இன்னும் கேளுங்கள். இறந்துபோனவரை அடக்கம் செய்ய எடுத்து கொண்டு போகும்போது துக்கத்தோடும் அவருக்காக பிரார்த்தனை செய்து கொண்டும் அமைதியாகச் செல்வதுதானே முறை. ஆனால் மேளம் கொட்டிக் கொண்டும் மது குடித்து விட்டு அநாகரீகமாக நடனமாடிக் கொண்டும் செல்கிறீர்களே, இது மோசமான கலாச்சாரமாக உள்ளதே

நாங்கள் இறந்தவரை தூக்கிச் செல்லும்போது அவருக்காக பிராரத்தனை செய்து கொண்டும் மரணத்தை நினைவு கூர்ந்து கொண்டும் இறைவனை நினைவு கூர்ந்து கொண்டும் அமைதியாகச் செல்கிறோம். மரணித்தவரை அடக்கம் செய்த பின் அனைவரும் அமைதியாக நின்று அவருக்காக பிரார்த்தனை செய்துவிட்டு திரும்புகிறோம்

இப்போது சொல்லுங்கள். யாருடைய கலாச்சாரம் சிறந்தது? யாருடைய கலாச்சாரத்தை யார் பின்பற்ற வேண்டும்?
கலாச்சாரம், பண்பாடு என்பது மக்களிடம் பல காலமாக இருந்து வரும் நடைமுறை. உலகத்தின் எல்லா பாகங்களில் வாழும் மக்களுக்கும் இறைவன் வேதங்களை வழங்கி அவர்களை நல்வழியில் வழிநடத்தும் தீர்க்கதரிசிகளையும் அனுப்பி வைத்துள்ளான்

மக்களிடம் காணப்படும் நடைமுறைகளில் வேதத்திற்கும் தீர்க்கதரிசியின் வழிமுறைக்கும் உடன்பட்டவையும் இருக்கலாம். இரண்டுக்கும் முரண்பட்ட, மனிதர்களால் உருவாக்கப்பட்ட தவறான நடைமுறைகளும் இருக்கலாம். ஜாதி ஏற்றத்தாழ்வு, கணவன் மரணித்தால் மனைவியை நெருப்பில் தள்ளி உடன்கட்டை ஏறச்செய்வது போன்றவை மனிதர்களால் உருவாக்கப்பட்ட பாவமான, கொடூரமான நடைமுறை என்று சொல்லி நீங்களே எதிர்க்கிறீர்கள்

அப்படியானால் இதுபோல் மனிதர்களால் உருவாக்கப்பட்ட இன்னும் பல தவறான நடைமுறைகள் உங்களிடத்திலே இருக்கத்தான் செய்யும்

உங்கள் நிலையே இப்படி இருக்கும்போது மற்றவர்களைப் பார்த்து எங்களைப் பின்பற்றுங்கள் என்று சொல்வது சரியா
கடவுளின் இறுதி தீர்க்கதரிசி முஹம்மது நபியவர்கள். கடவுளின் இறுதி வேதம் திருகுர்ஆன், அவர்களுக்கு வழங்கப்பட்டது. நாங்கள் நபியையும் இறுதி வேதத்தையும் பின்பற்றுகிறோம். நபிவழிக்கும் இறுதி வேதத்துக்கும் முரணானதை பின்பற்ற மாட்டோம்

முஹம்மது நபி இறைவனின் தூதர்தான் என்பதை இந்து மத நூல்களின் ஆதாரங்களின் மூலமே இந்தக் கட்டுரையின் இரண்டாம் பகுதியில் நிரூபித்து இருக்கிறோம்

இதன்படி இறைவனின் இறுதி தீர்க்கதரிசியின் வழிமுறை, இறுதி வேதத்தின் வழிகாட்டல் இரண்டையும் புறக்கணிப்பவர்கள்தான் குற்றவாளிகள். இப்படிப்பட்ட குற்றவாளிகளாக நீங்கள் இருந்து கொண்டு எங்கள் மீது குற்றம் சாட்டுவது நியாயமாகுமா? இறைவனின் இறுதித்தூதரை ஏற்று அவர் வழிக்கு உட்பட்ட கலாச்சாரங்களை கைக்கொள்வோம் வாருங்கள்.
நிச்சயமாக இந்த குர்ஆன் மிக நேராக இருக்கும் நல்வழியை காட்டுகிறது. நற்செயல்கள் செய்து வரும் இறைநம்பிக்கையாளர்களுக்கு பெரும் நற்கூலி உண்டு என்றும் நற்செய்தி கூறுகிறது” (திருகுர்ஆன்அத்தியாயம்: 17 வசனம்: 9)
(தொடரும் இன்ஷா அல்லாஹ்.)

-M. அப்துர்ரஹ்மான் மன்பஈ.,MA.,M.phil          

Admin
2418 0

Leave a comment

Share

Share on Facebook

Article

Video

Newsletter

We are committed to helping you increase your taqwa. Our content is designed to inspire and motivate you to live a life that is pleasing to Allah (SWT). From practical tips to spiritual reflections, we aim to support your journey of faith.

Get In Touch

Pudupettai, Chennai

+91 98408 28225

info@ahlulislam.net

Follow Us
கேள்வி & பதில்

© ahlulislam.net. All Rights Reserved. Design by zeentech solutions