கேள்வி:

கேள்வி 32: பெண்களுக்கான மாதவிடாய் உதிரப்போக்கு நின்ற நிலையில் குளிக்காமல் தொழுகலாமா.?

Answer by admin On June 28, 2020

பதில்:

ஒரு பெண்ணிற்கு தன்னுடைய அந்தந்த மாதத்திற்கான மாதவிடாய் உதிரப்போக்கு எப்பொழுது முழுமையாக நின்றுவிட்டது என்று தெரிகிறதோ அப்பொழுது அவர்கள் மேல் குளிப்பு  கடமையாக்கப்பட்டுள்ளது. உதாரணமாக ஒரு ஆணுக்கு தூக்கத்தில் இந்திரியம் வெளிப்படுவதால் அதனை அவர்கள் என்னதான் துடைத்து சுத்தம் செய்தாலும் வேறு ஆடை அணிந்தாலும் அவர்களின் மீது குளிப்பு கடமையாகும். அதை போல் பெண்களின் மீதும் மாதவிடாய் முடிந்தவுடன் குளிப்பு கடமையாகும். மேலும் சில சமயம் கணவனும் மனைவியும் இல்லறத்தில் ஈடுபட்டு விட்டு ஒரே பொழுதாக குளித்து விடலாம் என்று கருதுவது பெரும் பாவமாகும்.

குளிக்காமல் தொழவும் கூடாது, இல்லறத்தில் ஈடுபடும் கூடாது.

- உஸ்தாத் சதாம் ஹுஸைன் ஹஸனி

Youtube - Ahlul Islam : கேள்வி 85, ஆடியோவிலிருந்து எடுக்கப்பட்டது.

உங்கள் கேள்விகளை ( ? ) இங்கே கேட்க்கலாம்.