கேள்வி:

கேள்வி 33: வங்கி பரிவர்த்தனையில் பிடிக்கும் சேவை தொகையை நமக்கு வரக்கூடிய வட்டியில் கழித்துக்கொள்ளலாமா?

Answer by admin On June 28, 2020

பதில்:

 வங்கிகளில் மாதாந்திர வட்டி முறைப்படியே கணக்குப் பார்த்து கொடுப்பதனால் நாம் அதனை உபயோகப்படுத்துவது வட்டியை பயன்படுத்தியதற்கு சமமாகும். நமக்கு வட்டி தராவிட்டாலும் கூட பணப்பரிவர்த்தனை மற்றும் ATM உபயோகிப்பதால் அவர்கள் தங்கள் சேவை தொகையை பிடித்தம் செய்வது உறுதியே. குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் வங்கியில் சேவைக்கு பிடித்த தொகையை  மாதாந்திர வட்டியில் உபயோகப்படுத்திக் கொள்வது என்பது பெரும் பாவமாகும். எனினும் சேவை தொகை அதிகமாக இருப்பின் மற்றபிற வங்கியை காண்பதே சிறந்ததாகும். அதனை மாதாந்திர வட்டியில் பயன்படுத்திக் கொள்வது என்ற எண்ணத்தில் இருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.


- ஷேய்க் அப்துர் ரஹ்மான் மன்பஈ.M.phil

Youtube - Ahlul Islam : கேள்வி 83, ஆடியோவிலிருந்து எடுக்கப்பட்டது.

உங்கள் கேள்விகளை ( ? ) இங்கே கேட்க்கலாம்.