கேள்வி:

கேள்வி 40: LIC Policy போடலாமா?

Answer by admin On June 28, 2020

பதில்:

LIC  POLICY போன்ற இன்ஷூரன்ஸ் பாலிசிகளில் பலரும் சேர்ந்து ஒரு குறிப்பிட்ட தொகையை சேர்த்து வைத்து அதில் யாரேனும் ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டால் அல்லது அவர்கள் எந்த நோக்கத்திற்காக பணத்தை சேர்த்து வைக்கிறார்களோ அது நடந்துவிட்டால் அவர் களுக்கு மட்டும் பணம் கொடுக்கப்படும் மீதமுள்ள, பாதிக்கப்படாத நபர்களுக்கு அவர்கள் கட்டிய பணம் திரும்ப கொடுக்கப்படாது.

யாரேனும் ஒருவருக்கு பாதிப்பு அடைந்தால் எல்லோரும் சேர்த்து வைத்த பணத்தின் பங்கிலிருந்து ஒருதொகை பாதிக்கப்பட்டவர்களுக்கு சென்றடையும் என்று அனைவரும் அறிந்து ஒருமித்த கருத்தோடு ஒப்புதல் அளித்து செயல்படும் முறை தவறில்லை மற்றும் இதற்கு எந்தத் தடையும் இல்லை.

ஆனால் இன்சூரன்ஸ் பாலிசி பொறுத்தவரையில் வட்டி போன்ற முறைகளும் உண்டு அதாவது அவர்கள் சேர்த்து வைக்கும் பணம் ஒரு குறிப்பிட்ட காலம் வரை சேமித்து வைத்து அதை அவர்கள் திரும்பப் பெறும் பொழுது கூடுதலாக பணம் கிடைக்கும் அதாவது வட்டியோடு கிடைக்கும் இத்தகைய முறை மார்கத்தில் தடை செய்யப்பட்டதாகும்.

- ஷேய்க் அப்துர் ரஹ்மான் மன்பஈ.M.phil

Youtube - Ahlul Islam : கேள்வி 11, ஆடியோவிலிருந்து எடுக்கப்பட்டது.

உங்கள் கேள்விகளை ( ? ) இங்கே கேட்க்கலாம்.