கேள்வி:

கேள்வி 41: கருவை கலைப்பது இஸ்லாம் ஆதரிக்கிறதா?

Answer by admin On June 28, 2020

பதில்:

இஸ்லாத்தில் கருவைக் கலைப்பது ஆதரிக்கப் படவில்லை  மற்றும் வளர்ந்து வரும் கரு உயிர் என்ற அடிப்படையில் அதை கலைப்பது குற்றமும் ஆகும். 

ஆனால் பல அறிஞர்களின் கூற்றின்படி சில காரணங்களுக்கும் தேவைகள் கருதி 

ரூஹ் ஊதுவதற்கு முன்னால் கருவை கலைக்கலாம். 

பிரபலமான ஹதீஸில் ரூஹ் காலம் மூன்று 40 நாட்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மூன்றாவது 40 நாள் முடியும் பொழுது அதாவது 120 நாள் நிறைவடையும்போது அந்த வளரக்கூடிய கருவிற்கு வாழ்நாள் எவ்வளவு, அதற்குரிய அமல் எப்படி இருக்கும் போன்ற விஷயங்கள் எழுதப்படுகிறது. 

அதே நேரத்தில் ரூஹுவும் ஊதப்படுகிறது. ஆகையால் 120 நாள் காலகட்டத்திற்கு பிறகு கருவை கலைப்பது தடைசெய்யப்பட்டுள்ளது மற்றும் சில அறிஞர்கள்  சில காரணங்கள் தேவைகளுக்கு ஏற்ப 40 நாட்களுக்கு முன்னால் மட்டும் தான் கருவை கலைக்க  அனுமதிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடுகிறார்கள்.

- ஷேய்க் அப்துர் ரஹ்மான் மன்பஈ.M.phil

Youtube - Ahlul Islam : கேள்வி 13, ஆடியோவிலிருந்து எடுக்கப்பட்டது.

உங்கள் கேள்விகளை ( ? ) இங்கே கேட்க்கலாம்.