கேள்வி:

கேள்வி 53: வானவர்களை நம்மால் இம்மையில் அவர்களுடைய தோற்றத்தில் பார்க்க முடியுமா.?

Answer by admin On July 12, 2020

பதில்:

வானவர்களை அவர்களுடைய யதார்த்தமான தோற்றத்தில் இம்மையில் நம்மால் காணமுடியாது என்பதை ஹதீஸ்களின் வாயிலாக நாம் அறிந்து கொள்ள முடியும். நபி(ஸல்) அவர்கள் ஜிப்ரீலை(அலை) அவர்களின் யதார்த்தமான தோற்றத்தில் 600 இறக்கைகளை உடைய உயர்ந்த அவர்களின் தோற்றத்தை இரண்டு முறை மட்டுமே பார்த்ததாக ஹதீஸ்களில் நாம் பார்க்க முடிகிறது.

மேலும் எந்தத் தோற்றமும் அல்லாமல் மணி ஓசை மூலமாக குர்ஆன் வசனத்தை அவர்களின் மனதில் பதிய வைப்பது ஒருவகை வஹி ஆகும் அல்லது மனித உருவில் வந்து குர்ஆன் வசனத்தை ஓதிக் காட்டி கொண்டு போவார்கள் இதனை அல்லாமல் சஹாபாக்கள் பார்த்ததாக வரக்கூடிய புகாரி முஸ்லிம் போன்ற ஹதீஸ் நூலில் இடம் பெற்றுள்ளது உமர் மற்றும் அபூஹுரைரா அவர்கள் அறிவிக்கக்கூடிய வெண்மையான ஆடை அணிந்து கருநிற தலைமுடியைக் கொண்ட ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் ஈமான் என்றால் என்ன இஸ்லாம் என்றால் என்ன இஹ்ஸான் என்றால் என்ன எனக் கேட்டார் அவர் சென்ற பின் பின் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டபோது வந்தவர் ஜிப்ரீல்(அலை) என்று சொன்னதாக ஹதீஸ்களில் காணப்படுகிறது. மேலும் உம்மு ஸலாமா (ரழி) அவர்கள் அறிவிப்பில் நபி(ஸல்) அவர்களிடம் ஒருவர் பேசி விட்டு சென்ற பிறகு  நபி(ஸல்) வந்தது யார் என்று தெரியுமா என கேட்டார்கள் அப்போது அவர் திஹ்யா(ரழி) என்று கூறினார் நபி அவர்கள் வெளியே சென்று சஹாபாக்களிடம் கூறும்போது தான் வந்தவர் ஜிப்ரீல் (அலை) என்று என்னால் புரிந்துகொள்ள முடிந்தது எனக் கூறினார்கள். அதுபோல் ஆயிஷா(ரழி) அவர்களிடம் ஜிப்ரில்(அலை) ஸலாம் கூறியதாக நபி(ஸல்) கூறினார்கள் அப்போது நாங்கள் காண முடியாததை நீங்கள் காண்கிறீர்கள் என்று ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள். மலக்குமார்களை அவருடைய நேரடி தோற்றத்தில் காணமுடியாது என்பது இந்த ஹதீஸ் மூலம் தெளிவு படுகிறது. ஆனால் மலக்குமார்கள் இறங்குவது ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது உதாரணமாக ஹஸைத் பின் ஹீஸைர்(ரழி) என்ற சஹாபி இரவு நேரத்தில் சூரா பகரா ஓதும் போது அருகிலிருந்த குதிரை திமிறியது ஓதுவதை நிறுத்தியதும் இயல்புநிலைக்கு திரும்பியது இதுபோல மூன்று முறை நடந்தவுடன் அந்த சஹாபி அருகிலிருந்த தன் குழந்தையை அகற்றிவிட்டு ஆகாயத்தை பார்த்தவுடன் மேகக் கூட்டம் போல் ஒரு கூட்டம் இறங்கிவிட்டு எழுகின்றது அதில் பலவித விளக்குகளும் வெளிச்சங்கள் போலவும் இருந்தது. இதனை நபி(ஸல்) அவர்களிடம் அந்த சஹாபி கூறும்போது அவர்கள் கூறினார்கள் அது மலக்குமார்கள் நீங்கள் தொடர்ந்து ஓதி இருந்தால் காலையில் மக்களும் அதனை பார்த்திருக்கலாம் என்று கூறினார்கள்.

மலக்குமார்கள் வந்த அடையாளத்தை பார்க்க முடியுமே தவிர நேரடி தோற்றத்தில் பார்த்ததாக எந்த ஹதீஸ்களும் இல்லை மனித உருவில் வந்து சென்றாலும் அவர்கள் சென்ற பின்னரே நபி(ஸல்) அவர்கள் கூறியது மூலமே சஹாபாக்களுக்கு தெரியவந்தது.


- ஷேய்க் அப்துர் ரஹ்மான் மன்பஈ.M.phil

Youtube - Ahlul Islam : கேள்வி 119, ஆடியோவிலிருந்து எடுக்கப்பட்டது.

உங்கள் கேள்விகளை ( ? ) இங்கே கேட்க்கலாம்.