கேள்வி:

கேள்வி 52: குடும்பக்கட்டுப்பாடு செய்யலாமா?Condoms பயரன்படுத்தலாமா?

Answer by admin On July 12, 2020

பதில்:

குழந்தை வேண்டாம் என்று ஆப்ரேஷன் செய்து மேலும் குழந்தையையே பெற முடியாது என்ற நிலையை ஏற்படுத்திக் கொள்வது மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட ஒன்றாகும். 

ஹதீஸ்களில் ஸஹாபாக்கள் திருமணம் செய்ய  பொருளாதார ரீதியாக கஷ்டப்பட்டதால்  நபியவர்களிடம் சென்று அவர்கள் அனைவரும்  கல்யாண ஆசையை இல்லாமல் ஆக்கிக் கொள்வதற்காக காய் அடித்து  கொள்ளலாம் என்று கேட்டுள்ளார்கள்  அதை நபியவர்கள் தடுத்தார்கள். 

ஏனென்றால் அல்லாஹ் கொடுத்து இருக்கிற இந்த பாக்கியத்தை அழித்துக் கொள்வது தடை செய்யப்பட்ட செயலாகும் 

இதன் அடிப்படையில் பார்க்கும் பொழுது குழந்தை பெற முடியாமல் செய்து கொள்ளும் முறை தடைசெய்யப்பட்டுள்ளது. 

அதே நேரத்தில் தற்காலிகமாக குழந்தை பெறும்  நாட்களை தள்ளிப் போட சில காரியங்கள் செய்வதற்கு தடை செய்யப்படவில்லை மேலும் குழந்தை பெறாமல் இருக்க செய்யும் வழிமுறை ஹதீஸில் அஸீல் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

அஸீல் என்பது தாம்பத்திய உறவில் ஈடுபடும்போது கடைசி கட்டத்தில் இந்திரியம் கருவறைக்குள் செல்லாமல் இருப்பதற்காக வெளியே விட்டுவிடுவது.

இம்முறையை நபி(ஸல்) அவர்களுக்கு வஹீ வந்த காலத்தில் சஹாபாக்கள் பின்பற்றி வந்தனர் மேலும் இதைத் தடை செய்வதற்கான எந்த வஹீயும் இரக்கப் படவில்லை. 

இக்கருத்தின் அடிப்படையில் இக்காலத்தில் காண்டம்(Condoms) போன்ற பொருளை உபயோகித்து  தற்காலிகமாக குழந்தை பெறுவதைத் தள்ளிப் போடலாம் ஆனால் குழந்தையையே பெற முடியாது என்ற நிலையை ஏற்படுத்திக் கொள்வது மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட ஒன்றாகும்.


- ஷேய்க் அப்துர் ரஹ்மான் மன்பஈ.M.phil

Youtube - Ahlul Islam : கேள்வி 21, ஆடியோவிலிருந்து எடுக்கப்பட்டது.

உங்கள் கேள்விகளை ( ? ) இங்கே கேட்க்கலாம்.