கேள்வி:

கேள்வி 63:ரமலானில் நன்மை செய்தால் நன்மையின் கூலியை அதிகம் தருகிறான், தீமை செய்தால் தீமைக்கு தண்டனை அதிகமாகுமா?

Answer by admin On July 26, 2020

பதில்:

ரமலானும் ரமலான் அல்லாத காலமும் எல்லா வேலையிலும் நன்மைக்கு 10 மடங்கு கூலியும், செய்பவரின் நீய்யத்தை பொருத்து அல்லாஹுத்தஆலா அதனை 700மடங்காக கூலியை எழுதுவான் இது ரமலான் மற்றும் ரமலான் அல்லாத காலங்களில் கூறப்பட்டது, தீமையை பொருத்தவரை தீமை எந்த அளவோ அதற்கான அளவுதான் தண்டனை என்று ஹதீஸ்களின் வாயிலாக அறிகிறோம் ரமலானின் அவசியம் அதிகமான நன்மை செய்ய வேண்டும் அதற்கு கூடுதல் சிறப்பு இருக்கிறது , அதேபோல் தீமைகள் செய்வதை நிறுத்த வேண்டும் அதற்குரிய தண்டனை கடுமையானதாகும் என்று ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது, ரமலான் வந்துவிட்டால் வானவர் அழைத்துக் கூறுகிறார் நன்மையை நாட கூடியவரே முன்னோக்கி வருவீராக உற்சாகமாக நன்மை செய்வீராக தீமையை நாட கூடியவரே நிறுத்திக் கொள்வீராக என்று ஹதீஸ்களில்  காணமுடிகிறது.


 ஒரு தீமை பல தீமையாக எழுதப்படும் என்று ரமலானிலும் ரமலான் அல்லாத காலங்களிலும் என்பதில்லை. ஆனால் ரமலானில் தீமை செய்தல் கடுமையாக குற்றமாக கருதப்படும்.


- ஷேய்க் அப்துர் ரஹ்மான் மன்பஈ.M.phil


Youtube - Ahlul Islam : கேள்வி 64, ஆடியோவிலிருந்து எடுக்கப்பட்டது.

உங்கள் கேள்விகளை ( ? ) இங்கே கேட்க்கலாம்.