கேள்வி:

கேள்வி 62:ஃபஜ்ர் தொழுகையில் குன்னூத் ஓதுவது சரியா?

Answer by admin On July 26, 2020

பதில்:

ஹதீஸ்களில் இதுதொடர்பாக எந்த ஆதாரமுமில்லை. நபி(ஸல்) அவர்கள் முஸ்லிம்களுக்கு சோதனை ஏற்பட்ட காலத்தில் ஒரு மாதகாலம் தொழுகையில் குன்னூத் ஓதியதாக உள்ளது அதில் ஃபஜர் தொழுகையும் அடங்கும். 


இதனை அல்லாது எந்த காலத்திலும் ஃபஜர் தொழுகையினல் மாத்திரம் வழமையாக குன்னூத் ஓதியதாக எந்த ஆதாரமும் இல்லை. இதன் அடிப்படையில் ஃபஜரில் குன்னூத் ஓதுவது தவறு இது பிற்காலத்தில் உருவாக்கப்பட்டது.


 இதுதொடர்பாக ஸயத் பின் தாரிக் தன் தகப்பனாரிடம் கேட்டார்கள் தந்தையே நீங்கள் நபி(ஸல்),அபூபக்கர் சித்திக்(ரழி),உமர்(ரழி),உஸ்மான் (ரழி) அவர்கள் ஆகியோரின் பின்னால் நின்று தொழுதிருக்கிறீர்கள், இவர்களெல்லாம் ஃபஜ்ர் தொழுகையில் குன்னூத் ஓதி இருக்கிறார்களா என்று கேட்டபோது, தாரிக்(ரழி) அவர்கள் மகனே இது புதிதாக உருவாக்கப்பட்டது என்று பதில் கூறினார்கள் இந்த ஹதீஸ் திர்மிதீ நஸயீ போன்ற நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 


இந்த ஹதீஸ் அடிப்படையில் ஃபஜர் தொழுகையில் தொடர்ச்சியாக குன்னூத் ஓதுவது முறையான காரியமல்ல என்பது விளங்குகின்றது.


- ஷேய்க் அப்துர் ரஹ்மான் மன்பஈ.M.phil


Youtube - Ahlul Islam : கேள்வி 68, ஆடியோவிலிருந்து எடுக்கப்பட்டது.

உங்கள் கேள்விகளை ( ? ) இங்கே கேட்க்கலாம்.