உங்கள் கேள்விகளை ( ? ) இங்கே கேட்கலாம்.

கேள்வி - பதில்

கேள்வி-1 : பெண் ஜனாஸாவை அப்பெண்ணின் மஹ்ரமான ஆண்தான் அடக்கம் செய்ய வேண்டுமா? அல்லது மற்ற ஆண்கள் அடக்கம் செய்யலாமா? ஜனாஸாவை அடக்கம் செய்யும்போது எங்கள் பகுதியில் பாங்கு சொல்கிறார்கள். இது கூடுமா?

பெண் மய்யித்தை அதன் மஹ்ரமான ஆண் உறவினர் அடக்கம் செய்வதே முறையானது. நபி(ஸல்) அவர்களின் துணைவியார் சைனப் (ரலி) அவர்கள் மரணித்தபோது, அவர்களை கப்ரில் வைத்து யார் அடக்கம் செய்ய வேண்டும் என்று கேட்டு வரும்படி நபியின் மனைவியரிடம் உமர்(ரலி) ஆளனுப்பினார்கள். அதற்க்கு அவர்கள், “யார் அவர்களை அவர்களின் வாழ்நாளில் பார்க்கக் கூடியவராக இருந்தாரோ அவரே அடக்கம் செய்ய வேண்டும்.” என்று பதில் அனுப்பினார்கள். அப்போது, அவர்கள் சொல்வது உண்மைதான் என உமர்(ரலி) அவர்கள் கூறினார்கள். (நூல்: பைஹகீ 7199)  மேலும் படிக்க...

ரமலானும் ரமலான் அல்லாத காலமும் எல்லா வேலையிலும் நன்மைக்கு 10 மடங்கு கூலியும், செய்பவரின் நீய்யத்தை பொருத்து அல்லாஹுத்தஆலா அதனை 700மடங்காக கூலியை எழுதுவான் இது ரமலான் மற்றும் ரமலான் அல்லாத காலங்களில் கூறப்பட்டது, தீமையை பொருத்தவரை தீமை எந்த அளவோ அதற்கான அளவுதான் தண்டனை என்று ஹதீஸ்களின் வாயிலாக அறிகிறோம்  மேலும் படிக்க...